இன்று அனைவரிடமும் வங்கிக் கணக்கு இருக்கிறதோ இல்லையோ.. கட்டாயம் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்கு இருக்கிறது. பொதுவாக, ட்விட்டரில் ஒரு பதிவில் 140 எழுத்துக்களை மட்டுமே பதிவிட முடியும். இந்தக் கட்டுப்பாட்டால், தங்கள் கருத்துக்களை முழுமையாக பதிவிட முடியவில்லை எனவும் தொடர் பதிவுகளை வெளியிடும் கட்டாயம் ஏற்படுகிறது எனவும் ட்விட்டரை பயன்படுத்துவோர் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் எழுத்துக்களுக்கான எண்ணிக்கை வரம்பு 280 ஆக சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது.
முன்னதாக, தேர்ந்தெடுத்த சில ட்விட்டர் கணக்குகளுக்கு மட்டும் 280 எழுத்துக்களில் பதிவிடும் வசதி வழங்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ட்விட்டர் பதிவுகளுக்கான உச்சவரம்பை 280 எழுத்துகளாக பதிவிடும் வசதி தற்போது அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஜப்பான், சீனா, கொரிய எழுத்துக்களுக்கு பழைய வரம்பே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலமாக, பெரும்பாலான பயனர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வசதியை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ட்விட்டருக்கு நன்றி தெரிவித்துள்ளது. ஏனெனில், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு பொதுவாக பெயர்கள் மிகவும் நீளமாக இருக்கும். இதனால், ட்விட்டரில் அவர்களது பெயர் முழுவதையும் பதிவிட முடியாது. தற்போது, எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சில இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முழு பெயர்களையும், ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.
அந்தப் பெயர்கள் இதோ,
சமிந்தா வாஸ் - Warnakulasuriya Patabendige Ushantha Joseph Chaminda Vaas
குமார் தர்மசேனா - Handunnettige Deepthi Priyantha Kumar Dharmasena
நிரோஷன் டிக்வெல்லா - Dickwella Patabendige Dilantha Niroshan Dickwella
ரங்கனா ஹெராத் - Herath Mudiyanselage Rangana Keerthi Bandara Herath
குமார் சங்கக்காரா - Kumar Chokshanada Sangakkara
மஹேலா ஜெயவர்தனே - Denagamage Praboth Mahela de Silva Jayawardene
தில்ஷன் - Tillakaratne Mudiyanselage Dilshan
திசாரா பெரேரா - Narangoda Liyanaarachchilage Thisara Chirantha Perera