ஐசிசி தரவரிசையில் பின்தங்கிய இந்தியா....

ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, ஆஃப்கானிஸ்தான் 90 புள்ளிகளுடன்....

ஐசிசி தற்போது புதிய டி20 தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி 125 புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. 7 புள்ளிகள் அதிகம் பெற்று இங்கிலாந்து 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் அணியும் 121 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால் தசம புள்ளிகள் அடிப்படையில், பாகிஸ்தான் 3-ஆம் இடத்தில் உள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியபின், புதிய கேப்டனாகியுள்ள கோலியின் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளை இழந்து, 4-ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் 118.

தொடர்ந்து தென்னாப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 110 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலியாவை விட, ஒருபுள்ளி மட்டும் பின்தங்கியுள்ள நடப்பு டி20 சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், 109 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இலங்கை 95 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, ஆஃப்கானிஸ்தான் 90 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. 78 புள்ளிகளைப் பெற்றுள்ள வங்கதேசம் 10-வது இடத்தில் உள்ளது. அயர்லாந்து அணி 36 புள்ளிகள் பெற்று கடைசி இடமான 18-வது இடத்தில் உள்ளது.

டிசம்பர் 31 2018 அன்று, ஆஸ்திரேலியா மற்றும் புள்ளிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள டாப் 9 அணிகள் மட்டும் 2020-ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close