டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவை பின்னுக்குத்தள்ளி, இங்கிலாந்து அணியின் வேகப்ந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை இன்று(ஞாயிற்றுக் கிழமை) வெளியானது. இதில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 896 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது 500-வது விக்கெட் கைப்பற்றி ஆண்டர்சன் அசத்தியுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 42 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் அசத்தல் பந்துவீச்சின் காரணமாக, இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இன்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்தததை அடுத்து, 884 புள்ளிகளுடன் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 852-புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் 4-வது இடத்திற்கு பின்தங்கியிருக்கிறார்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 936 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர். இந்திய வீரர் புஜாரா நான்வது இடத்தில் உள்ளார்.
இதேபோல, இந்திய கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும், 9-வது இடத்தில் லோகேஸ் ராகுல், 10-வது இடத்தில் ரகானேவும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் தரவரிசையைப் பொறுத்தவரையில், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்(455) முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் ஜடேஜா(429) இரண்டாவது இடத்தையும், ரவிச்சந்திரன் அஸ்வின்(421) 3-வது இடத்தையும் மீண்டும் பிடித்துள்ளனர். 4-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்ரோக், 5-வது இடத்தில் மற்றொரு இங்கிலாந்து வீரர் மொயின் அலியும் உள்ளனர்.