மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. டெர்பியில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை பேட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இந்திய வீராங்கனைகள் மந்தனா, பூனம் இருவரும் வலுவான அடித்தளம் அமைத்த்து கொடுத்தனர். பூனம் 86 ரன்களும் மந்தனா 90 ரன்களும் எடுத்து அவுடானார்கள். கேப்டன் மித்தாலிராஜ் அதிரடியாக ஆடி 71 எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். ஹர்மந்த் ப்ரித் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் சேர்த்தார். ஆட்ட நேர இறுதியில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் சேர்த்தது.
வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து வீராங்கனைகள், இந்திய பவுலிங் மற்றும் பீல்டிங்கில் விக்கெட்டை சீரான இடைவெளியில் இழந்தனர். 47.3 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 246 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்தியா 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீராங்கனை பிரான் வில்சன் 81 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 46 ரன்களும் எடுத்தனர்.
90 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த மந்தனா, ஆட்ட நாயகி விருதை பெற்றார்.