Advertisment

TNPL 2023 TT vs SLST: திருப்பூர் அணி போராட்டம் வீண் : சேலம் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டிஎன்பிஎல் தொடரில் இன்று திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின

author-image
WebDesk
New Update
IDream Tiruppur Tamizhans vs Salem Spartans, 22nd Match Tamil News

டி.என்.பி.எல். 2023: திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதல்

8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதன்படி, மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதியது.

Advertisment

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சன்னி சிந்து அரைசதம் கடந்த 61 ரன்களும், விக்கெட் கீப்பர் கவின் 19 ரன்களும், தன்வர் 17 ரன்களும் எடுத்தனர். திருப்பூர் அணி தரப்பில் புவனேஷ்வரன் 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், நாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஜித்ராம், கோகுல் மூர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 156 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சாய் கிஷோர் 26 ரன்களும், ரஹஜா, அனிருத் ஆகியோர் தலா 22 ரன்களும், எடுத்தனர். சேலம் அணி தரப்பில், ரதி, செல்வகுமரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Tnpl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment