விசில் போட தயாராகும் "சென்னை சூப்பர் கிங்ஸ்"... 2-ஆண்டு தடை முடிந்ததால் குஷியான ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் தடை முடிவடைந்த நிலையில், களம் காண காத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் தடை முடிவடையும் நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயார் என அறிவித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு, கடந்த 2012-ம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தற்போது முடிவடைவதைத் தொடர்ந்து, வரும் 11-வது சீசனில் களம் காண காத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குநர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜான் கருத்து கூறும்போது: வீரர்களை மீண்டும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டால், எம்.எஸ் டோனியை தான் முதலில் நாங்கள் எடுத்துக் கொள்வோம். புனே அணியில் டோனி செய்துள்ள ஒப்பதம் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவு பெறுகிறது. எனவே, இது குறித்து வரும்காலத்தில் அவரிடம் பேச திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

இரண்டு முறை சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன்ஸ், நான்கு முறை ரன்னர்-அப், என ஐ.பி.எல் தொடரை அமர்களப்படுத்திய பெருமை டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு உண்டு. இரண்டு ஆண்டு தடை நீங்குவதையடுத்து, மிரள வைக்கும் பேட்டிங், பந்துவீச்சு என அதிரடி காட்டி வந்த சென்னை தற்போது, மீண்டும் களம் இறங்க தயார். இதனை கொண்டாடும் வகையில் “வந்துட்டோம்னு சொல்லு திரும்பி வந்துட்டோம்னு சொல்லு” என ட்விட்டரில் தனது ஹேப்பியை வெளிப்படுத்தியுள்ளது சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.

நியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ் மகிழ்ச்சி தெரிவித்து ட்வீடை ட்வீட்டியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் களம் இறங்கத் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் எக்கச் செக்க குஷியில் உள்ளனர். ரசிகர்கள் பட்டாளங்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.

×Close
×Close