பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி குறித்து அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், “முதல் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு இப்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவிடன் சிறந்த பேட்டிங் உள்ளது. அவர்கள் முதலில் ஆடி பெரிய ஸ்கோர் அடித்தால் அது நமது அணிக்கு அழுத்தம் தந்துவிடும். அதனால், டாஸ் வென்றால் கண்ணை மூடிக் கொண்டு பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்து விட வேண்டும்.
மற்ற அணிகளுக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது கேப்டன் சர்ஃபராஸுக்கு கை கொடுத்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தானை விட வலிமையான பேட்டிங் இருப்பதால் அவர்கள் அதிகமாக ரன்கள் குவித்து நமது பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என இரு தரப்பிற்கும் இரண்டு மடங்கு அழுத்தம் தருவார்கள்.
பாக். அணியின் உண்மையான பலம் பந்துவீச்சு தான். எனவே நாம் முதலில் சிறப்பாக பேட்டிங் செய்து, பிறகு இந்தியாவை கட்டுப்படுத்துவதே சிறந்த திட்டமாக இருக்கும். சர்ஃபராஸ் என்ன ஆச்சரியப்படுத்தியுள்ளார், தைரியமான கேப்டனாக இருக்கிறார்” என்றார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Imran khan talks about india pakistan final clash tomorrow