இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்வதில் பிசிசிஐ-யின் செயல்பாட்டில் திருப்தியளிக்கவில்லை என பிசிசிஐ நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாராக இருந்து வந்த அனில் கும்ப்ளே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கேப்டன் விராட் கோலியுடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாகவே அனில் கும்ளே தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், அனில் கும்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிப்பதில் பிசிசிஐ-யின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என உத்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் மும்பையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, நிர்வாகக் குழுவில் உள்ள வினோத் ராய், விக்ரம் லிமாய், டயனா ஆகியோர் பயிற்சியாளர் பதவி குறித்து பிசிசிஐ-யின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, முன்னதாக ஏற்கெனவே பயிற்சியார் பதவிக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதற்கான தேவை குறித்தும் எடுத்துரைத்தனர்.
இதற்கு ராகுல் ஜோஹ்ரி விளக்கம் அளிக்கும் போது, அனில் கும்ளே மீண்டும் பயிற்சியாளராக தொடர்வற்கான வாய்ப்பு இருந்ததால், பல முக்கிய நபர்கள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என பிசிசிஐ-யின் செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை அது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. எனினும், வீரேந்திர சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைபஸ், டோத்தா கணேஷ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாகவும், சாஸ்திரியின் பெயர் இடம் பெறவில்லை எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
பறிச்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவது குறித்து நிர்வாகக் குழுவிடம் ஆலோசனை நடத்தப்பட்டதா என ராகுல் ஜோஹ்ரியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் கேள்வி கேட்டபோது. இது தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ராகுல் ஜோஹ்ரி கூறினார்.
ஒருபுறம் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிப்பு வெளியிட்டு வருகிறது. ஆனால், மற்றொருபுறம் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் இன்னமும் நடத்தப்படவில்லை. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிரேக் மெக்டோர்மோட்டின் விண்ணப்பம் காலதாமதமாக வந்தது என நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பத்தவர்களிடம் எதுவும் நேர்காணல் நடத்தப்படாமலேயே கும்ளேவின் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஏன் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணம் பெறப்பட வேண்டும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறினார்.
வெஸ்ட் இன்டீஸ் தொடர் வரை பயிற்சியாளர் பொறுப்பில் கும்ளே நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்த நிலையில், கும்ளே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் ஜூலை 10-ம் தேதி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் வேலையை ஆலோசனைக் குழு தொடங்கவுள்ளது.