/indian-express-tamil/media/media_files/2025/10/22/ind-vs-aus-2nd-odi-live-score-updates-india-vs-australia-2nd-odi-adelaide-live-scorecard-online-streaming-in-tamil-2025-10-22-23-01-37.jpg)
IND vs AUS 2nd ODI Match Live Score: ஆஸ்திரேலியா vs இந்தியா, 2வது ஒருநாள், அடிலெய்டு.
IND vs AUS 2nd ODI Highlights: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெர்த்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் போட்ட நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - கேப்டன் சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். முந்தைய போட்டியிலும் கோலி டக் அவுட் ஆகி வெளியேறிய சூழலில் மீண்டும் அவுட் ஆகியது பெரும் அதிர்ச்சியை தந்தது. இதனால் 17 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா ரன் சேர்க்க திணறியது.
இதன்பிறகு களத்தில் இருந்த ரோகித் - ஷ்ரேயாஸ் ஜோடி நிதானமாக விளையாடினர். அவ்வப்போது பவுண்டரிகளை பறக்கவிட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்ஷர் படேலும் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக வந்த மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் ஜோடியில் மார்ஷ் (11), ஹெட் (28) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும், பின்னர் வந்த மேத்யூ ஷார்ட் சிறப்பாக மட்டையைச் சுழற்றி அரை சதம் விளாசினார். அவர் 74 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருக்குப் பின்னர் வந்த ரென்ஷா (30), அலெக்ஸ் கேரி (9) ஆட்டமிழந்தனர். இதேபோல், ஓவன் (36), சேவியர் பார்ட்லெட் (3), ஸ்டார்க் (4) ஆகியோரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.
ஆனாலும், களத்தில் இருந்த கூப்பர் கன்னோளி (61) அரை சதம் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்களை எடுத்தது. இதனால், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளது.
- Oct 23, 2025 15:29 IST
ஆஸ்திரேலியா வீரர் மேட் ஷார்ட் அரைசதம்
ஆஸ்திரேலிய அணியில் 2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேட் ஷார்ட் நிதானமாக விளையாடி 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அரை சதம் எடுத்துள்ளார். 3 பவுண்டரிகள், 1 சிக்சருடன் மேட் ஷார் தனது அரைசதத்தை தொட்டுள்ளார்.
- Oct 23, 2025 15:27 IST
அக்சர் படேல் பந்தில் ரென்ஷா போல்ட் அவுட்
ஸ்திரேலிய அணி 21.4 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்திருந்தபோது, 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த மேட் ரென்ஷா, அக்சர் படேல் பந்தில் போல்ட் அவுட் ஆனார். இதையடுத்து, அலெக்ஸ் கேரி பேட்டிங் செய்ய வந்தார். ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
- Oct 23, 2025 14:50 IST
ஹர்சித் ரானா பந்தில் டிராவிஸ் ஹெட் அவுட்
ஆஸ்திரேலிய அணி 12.2 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது, 40 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் ஹர்சித் ரானா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து, மேட் ரென்ஷா பேட்டிங் செய்ய வந்தார்.
- Oct 23, 2025 14:11 IST
மிட்செல் மார்ஷ் அவுட்
ஆஸ்திரேலிய அணி 7.2 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, 24 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த மிட்செல் மார்ஷ் அர்ஷ்தீப் சிங் பந்தில் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து, மேட் ஷார்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா பேட்டர்கள் டிராவிஸ் ஹெட் - மேட் ஷார்ட் இருவரும் நிதானமாக ஆடி ரன் எடுத்து வருகின்றனர்.
- Oct 23, 2025 13:30 IST
265 ரன்கள் இலக்கு: தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட்
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். முதல் ஓவரை முஹமது சிராஜ் வீசினார்.
- Oct 23, 2025 12:58 IST
ஆடம் ஜம்பா பந்துவீச்சில் கட்டுப்பட்ட இந்தியா; ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்கு
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 26 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- Oct 23, 2025 12:56 IST
அர்ஷ்தீப் சிங் அவுட்
இந்திய அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆனார்..
- Oct 23, 2025 12:44 IST
நிதிஷ் குமார் ரெட்டி அவுட்
இந்திய அணி 44.6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்ட்ம்பிங் செய்து வெளியேற்றினார்.
- Oct 23, 2025 12:31 IST
ஆடம் ஜம்பா பந்தில் மிட்செல் ஸ்டார்க் இடம் கேட்ச் ஆஅ அக்சர் படேல்
இந்திய அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்சர் படேல் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் மிட்செல் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
- Oct 23, 2025 12:21 IST
வாஷிங்டன் சுந்தர் அவுட்
இந்திய அணி 41.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சேவியர் பர்த்லெட் பந்தில் ஜோஷ் ஹேஸில்வுட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
- Oct 23, 2025 12:18 IST
ஸ்ரேயஸ் ஐயர் ஆடம் ஜம்பா பந்தில் போல்ட் அவுட்
இந்திய அணி 36.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கே.எல்.ராகுல் 15 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
- Oct 23, 2025 12:15 IST
ஆடம் ஜம்பா பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் அவுட்
இந்திய அணி 32.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிறப்பாக விளையாடிக்கொண்ருந்த ஸ்ரேயஸ் ஐயர் 77 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
- Oct 23, 2025 11:24 IST
ஸ்டார்க் வீசிய பந்து - 73 ரன்னில் அவுட்டான ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா 73 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வந்த நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் ஹேசல்வுட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
- Oct 23, 2025 11:00 IST
ரோகித் - ஷ்ரேயாஸ் சிறப்பான பேட்டிங் - வலுவான ரன்களை எடுக்கும் இந்தியா
ரோகித் - ஸ்ரேயாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ரோகித் சர்மா அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். ஷ்ரேயாஸ் 39 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
- Oct 23, 2025 09:53 IST
மீண்டும் டக் அவுட்டான கோலி!
சேவியர் பார்ன்ட்லெட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட்டானார் விராட் கோலி. 4 பந்துகளுக்கு ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.
- Oct 23, 2025 09:35 IST
வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒருநாள் தொடரை இழக்காமல் தக்க வைக்க இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா
- Oct 23, 2025 09:21 IST
இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.