/indian-express-tamil/media/media_files/2025/11/02/ind-vs-aus-3rd-t20i-live-score-updates-india-vs-australia-3rd-t20i-bellerive-oval-hobart-live-scorecard-online-streaming-in-tamil-2025-11-02-08-19-13.jpg)
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3வது டி20ஐ, லைவ் கிரிக்கெட் ஸ்கோர், பெல்லரிவ் ஓவல், ஹோபார்ட்.
India vs Australia 3rd T20I: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் தற்போது வரை ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று ஞாயிற்றுக்கிழமை ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 1:45 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் ஓவனும் சந்தித்த முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார். விக்கெட் சரிவைத் தொடர்ந்து, டிம் டேவிட் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடினர். டேவிட் வெறும் 38 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. ஸ்டோய்னிஸ் 64 ரன்களுடன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்ட் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
மெல்போர்னில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில், கேப்டன் SKY (சூர்யகுமார் யாதவ்) டாஸ் வென்றதிலிருந்தே, இந்திய அணி பல விஷயங்களைச் சரியாகச் செய்தது. குறிப்பாக, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அர்ஷ்தீப் சிங், அதிரடி வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜாஷ் இங்லிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியது பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
தொடரின் முதல் ஆட்டம் கான்பெர்ராவில் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்திருந்தது. தற்போது 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்
ஆஸ்திரேலியா அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட்,சீன் அபோட்,சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ்,மேத்யூ குஹ்னெமன்
இந்திய அணி: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே,அக்சர் படேல்,வாஷிங்டன் சுந்தர்,அர்ஷ்தீப் சிங்,வருண் சகரவர்த்தி,ஜஸ்பிரித் பும்ரா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us