IND vs AUS 3rd Test; India’s Batting analysis Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று முதல் இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர். இதேபோல், ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்களுடன் கேமரூன் கிரீன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
தான் விரித்த வலையில் தானே சிக்கிய இந்தியா: முதலில் பேட்டிங் தேர்வு செய்தது தவறா?
இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்தது. இந்த ஆட்டங்களில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், ஹோல்கர் ஸ்டேடியத்தில் இதுவரை நடந்ததைப் பார்த்த பிறகு, கேட்கப்படும் ஒரு கேள்வி, இவ்வளவு அற்புதமான திருப்பத்தை எதிர்பார்த்திருந்தால், அஷ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் கொண்ட இந்தியா முதலில் பந்து வீசுவது சிறந்த யோசனையாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?
பவுன்ஸ் மற்றும் கூர்மையான மிக ஆரம்ப திருப்பம் இந்திய அணியை ஆச்சரியப்படுத்தினாலும், சுழற்பந்துகளை எதிர்கொள்ள திணறி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு இது கூடுதல் தலைவலியாக இருந்திருக்கும். எனவே, தொடரின் தலைவிதியை தீர்மானிக்ககே கூடிய ஒரு டெஸ்டில், அந்த அணியை முன்கூட்டியே அழுத்தத்திற்கு உள்ளாக்குவது சிறப்பாக இருந்திருக்கும் அல்லவா?
இந்திய பேட்ஸ்மேன்கள் தரமான சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்கும் திறன் படைத்தவர்கள் என்று அறியப்படும் நிலையில், ஹோல்கர் ஸ்டேடியத்தின் ஆடுகளம் அனைத்தையும் சுக்குநூறாக உடைத்துள்ளது. இந்த ஆடுகளத்தில் நல்ல திருப்பமும் மற்றும் இந்திய பேட்ஸ்மேன்களை பந்துகளை விரட்டி அடிக்க தூண்ட போதுமான சீரற்ற பவுன்ஸ் ஆகியவையும் இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.
இதைக் கூர்ந்து கவனித்த ஆஸ்திரேலியாவின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், நாதன் லியான், மேத்யூ குன்ஹேமன் மற்றும் டோட் மர்பி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை முதல் நாள் ஆட்ட தொடக்க நேரத்திலே கட்டவிழ்த்துவிட்டார். இதன் விளைவு, இந்திய அணியின் டாப் ஆடர் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்தது. கூடுதலாக அதன் முதல் இன்னிங்சும் சிதைந்து போனது.
ஸ்மித் முதல் 5 ஓவர்களுக்குப் பிறகு சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்த, மேத்யூ குஹ்னேமான் தனது முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித்தின் (12) விக்கெட்டை கைப்பற்றினார். சிறிது நேரம் மட்டையை சுழற்றிக் கொண்டிருந்த கில் (21) குஹ்னேமான் வீசிய அடுத்த ஓவரில் முதல் ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மறுமுனையில் இருந்து தாக்குதலுக்கு தயாரான நாதன் லியான், 8 ஓவரின் 2வது பந்தை ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே இருந்து அதிரடியாக உள்ளே சூழல செய்தார். பந்து புஜாராவின் பின்புறம் இருந்த ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. கட்டை மன்னன் புஜாரா ஒரு ரன்னுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்த வந்த ரவீந்திர ஜடேஜா (4) லியான் வீசிய 10வது ஓவரின் 4வது பந்தில் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்யப்பட்டு அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், அடுத்த பந்தை கவர் திசையில் விரட்டு முயன்று கேட்ச் கொடுத்து 4 ரன்னில் அவுட் ஆனார்.
குஹ்னேமனின் பந்தை அடிக்க முயன்று ஷ்ரேயாஸ் ஐயர் இன்சைடு எட்ச் பட்டு ஸ்டம்பிற்குள் பந்தை தள்ளினார். பின்னர் பூஜ்ஜிய ரன்னுடன் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி 45 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது. களத்தில் இருந்த விராட் கோலி (22) உயிர் பிழைக்க அவரது அனைத்து தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. அவர் 6வது விக்கெட்டுக்கு கே.எஸ்.பரத்துடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். ஆனால், டோட் மர்பி அவரை தனது முதல் விக்கெட்டுக்காக அவரது ஸ்டம்புகளுக்கு முன்னால் சிக்க வைத்து, இந்தியாவை 70/6 என குறைத்தார்.
இந்தியாவை 82/7 என்ற நிலையில் மோசமாக்க, பரத் (17) எல்.பி.டபிள்யூவை வெளியேற்றியபோது லியோன் தனது மூன்றாவது விக்கெட்டை எடுத்தார். 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் இந்திய எடுத்தபோது மதிய உணவுக்கு சென்றது. அதன்பின்னர் அக்சர் மற்றும் அஷ்வின் பேட்டிங் செய்தனர். எனினும், இந்த ஜோடியில், அஸ்வின் 3 ரன்னிலும், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட உமேஷ் யாதவ் 17 ரன்னிலும், சிராஜ் ரன் ஏதும் எடுக்காமல் ரன்-அவுட் ஆகினார். இதனால், இந்தியா அதன் முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வெறும் 16 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த குஹ்னிமான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.