KS Bharat Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் (பார்டர் கவாஸ்கர் டிராபி), 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் வருகிற 9-ம் தேதி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாடும் லெவன் அணியை முழுமையாக்குவதில் கடுமையான இக்கட்டான நிலையில் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சைத் தவிர, விக்கெட் கீப்பிங்கிலும் இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட் காயம் மற்றும் கே.எல்.ராகுல் டெஸ்டில் இடம்பெறாததால், கே.எஸ் பாரத் 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது டெஸ்ட் அறிமுகத்தை பெற உள்ளார்.
கே.எஸ்.பாரத் இந்திய அணியில் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். இத்தனை நாட்களாக பெஞ்ச்-ஐ தேய்ச்சவருக்கு இப்போது தான் வாய்ப்பு கனியப்போகிறது. கடந்த ஆண்டில் பல காயங்களுக்கு ஆளான கே.எல்.ராகுல், டெஸ்ட் வடிவத்தில் இந்தியாவுக்கான கீப்பராக இருப்பதில் சந்தேகம் தான்.

“கடந்த ஒரு வருடத்தில் ராகுலுக்கு பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. டெஸ்டில் விக்கெட் கீப்பிங் செய்வது அவருக்கு உகந்தது அல்ல. இந்த தொடருக்கு சிறப்பு வீரர் தேவை. பாரத் மற்றும் இஷானில் இருவர் அணியில் உள்ளனர். யாரை தேர்வு செய்வது என்பதை அணி நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும்.” என்று பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேஎஸ் பாரத் டெஸ்ட் அறிமுகம்
1.5 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்குப் பின்னால் காத்திருந்து கீப்பர் இடத்தைப் பிடிப்பதில் கேஎஸ் பாரத் முன்னணியில் இருப்பதில் ஆச்சரியமில்லை. கேஎல் ராகுலுக்கு அணி நிர்வாகம் கண்டிப்பான ‘இல்லை’ என்று கூறியதால், பாரத் மற்றும் இஷான் கிஷான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விஷயங்களை எளிமையாக்க, ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் நம்பர் ஒன் தேர்வாக இருப்பதால் பாரத்-துக்கு இம்முறை வாய்ப்பு நிச்சம் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil