IND vs BAN match Score updates: இந்தியா – வங்கதேசம் முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா- ஷிகர்தவான் களமிறங்கினர். ரோகித் 27 ரன்களிலும், தவான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கோலி 9 ரன்களில் வெளியேறினார். 4-வதாக களமிறங்கிய ஷ்ரேயால் 24 ரன்கள் எடுத்து இபாதத் ஹொசைன் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 32.3-வது ஓவரில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அக்மத் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தாகூர் 2 ரன்களில் அவுட் ஆனார். சாஹர் 34.4 ஓவரில் LBW முறையில் ஆட்டமிழந்தார். 8 விக்கெட் இழப்புடன் சிராஜ்-ராகுல் களத்தில் உள்ளனர்.
இந்தியா 35.5 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது. சிராஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய கே.எல். ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்து ஹொசைன் பந்தில் கேட்ச் அவுட் ஆனார். இந்தியா 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது.
வங்க தேசம் பேட்டிங்
வங்க தேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நஜ்முல் ஹொசைன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். முதல் பந்திலேயே நஜ்முல் ஹொசைன் டக் அவுட் ஆனார். அவர் தீபக் சாஹர் பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த களமிறங்கிய அனாமுல் ஹக், தொடக்க வீரர் லிட்டன் தாஸூடன் இணைந்து நிதானமாக விளையாடினார். இருவரும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்தனர். இந்திய பவுலர் அற்புதமாக வீசி, இருவரையும் திணறடித்தனர். 14 ரன்கள் சேர்த்த நிலையில் அனாமுல் ஹக் அவுட் ஆனார். அவர் சிராஜ் பந்தில் வாஷிங்க்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் லிட்டன் தாஸூடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த போராடினார். இந்தநிலையில் லிட்டன் தாஸ் 41 ரன்களில் அவுட் ஆனார். அவர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 74 ரன்கள் சேர்ந்திருந்தது.
அடுத்ததாக முஜ்பிகுர் ரஹ்மான் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 95 ரன்கள் இருந்தபோது, ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனார். 29 ரன்கள் அடித்த அவர், வாஷிங்டன் சுந்தர் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து மஹ்மத்துல்லா களமிறங்கினார். முஜ்பிகுர் மற்றும் மஹ்மத்துல்லா இருவரும் ரன் குவிக்க முடியாமல் திணறினர். மஹ்மத்துல்லா 14 ரன்களில் தாக்கூர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்ததாக அஃபிஃப் ஹொசைன் களமிறங்கிய நிலையில் முஜ்பிகுர் ரஹ்மான் அவுட் ஆனார். அவர் சிராஜ் பந்தில் போல்டாகி வெளியேறினார். சிறிது நேரத்திலே அஃபிஃப் ஹொசைன் 6 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த எடபாட் ஹொசைன் மற்றும் ஹசன் முகமது இருவரும் டக் அவுட் ஆகினர்.
இதனால் வங்கதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்தநிலையில் மெஹிடி ஹசன் உடன் ஜோடி சேர்ந்தார் முஸ்தாபிஷூர் ரஹ்மான். மெஹிடி தொடக்கம் முதலே அதிரடி காட்ட, முஸ்தாபிஷூர் அவருக்கு கம்பெனி கொடுத்தார். மெஹிடி சிறிது நேரத்திலே 2 சிக்சர்களை விளாசி ரன்களை குறைத்தார். இருவரின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர்.
இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்கோர் சரிசமமானது. பின்னர் மெஹிடி ஒரு ரன் எடுக்க வங்கதேசம் அசத்தல் வெற்றி பெற்றது. மெஹிடி 39 பந்துகளில் 38 ரன்களுடனும், முஸ்தாபிஷூர் 10 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்களையும், குல்தீப் சென் மற்றும் சுந்தர் தலா 2 விக்கெட்களையும், சாஹர் மற்றும் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிசம்பர் 4) மிர்பூரில் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
சமீபத்தில் நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்தியா வெற்றது. ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி வென்றது. இந்நிலையில், வங்கதேசம் அணியுடனான ஒரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது. 2-வது போட்டி டிசம்பர் 7-ம் தேதியும், 3-வது போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது.
2 டெஸ்ட் போட்டிகள் முறையே டிசம்பர் 14, டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான இந்தியா கிரிக்கெட் அணி
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
India in Bangladesh, 3 ODI Series, 2022Shere Bangla National Stadium, Mirpur 05 June 2023
Bangladesh 187/9 (46.0)
India 186 (41.2)
Match Ended ( Day – 1st ODI ) Bangladesh beat India by 1 wicket
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil