Advertisment

India vs Bangladesh Score: உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா! 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

World Cup 2019, India vs Bangladesh Match Score Updates: இந்தியா vs வங்கதேசம்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs BAN Score, India vs Bangladesh World Cup Score

IND vs BAN Score, India vs Bangladesh World Cup Score

Bangladesh vs India World Cup 2019 Score: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூலை.2) பிர்மிங்கம் நகரின் எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மஷ்ரபே மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

Advertisment

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா 104 ரன்கள் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம், 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த வெற்றியின் மூலம், இந்தியா உலகக் கோப்பை அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக முன்னேறி இருக்கிறது. வங்கதேசம், தொடரில் இருந்து வெளியேறியது.

 

Live Blog

World Cup 2019 : India vs Bangladesh Score, IND vs BAN 2019 Updates, Edgbaston, Birmingham - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ்



























Highlights

    23:04 (IST)02 Jul 2019

    Ind vs Ban: இந்தியா வெற்றி

    48 ஓவர்களில் 286 ரன்களுக்கு வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேற, உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் வெளியேறியது.

    22:55 (IST)02 Jul 2019

    India vs Bangladesh - விடாமல் துரத்தும் வங்கதேசம்

    எட்டு விக்கெட்டுகள் வீழ்ந்தும், வங்கதேசம் இந்தியாவுக்கு சோதனை அளித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, சைஃபுதீன் ஓவருக்கு ஒரு பவுண்டரிகளை அடித்து, வங்கதேசத்திற்கான வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். 

    வங்கதேசம் வெற்றிப் பெற 18 பந்துகளில் 36 ரன்கள் தேவை.

    22:44 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live updates : மஷ்ரபே மோர்டசா அவுட்

    புவனேஷ் வீசிய 44.1வது ஓவரில் ஸ்ட்ரெய்ட்டில் அபார சிக்ஸ் ஒன்றை அடித்த மோர்டசா, அடுத்த பந்தையும் சிக்ஸுக்கு அனுப்ப முயல, எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    வங்கதேசத்தின் எட்டாவது விக்கெட் இது.

    22:38 (IST)02 Jul 2019

    Ind vs Ban : திருப்பம் தந்த பும்ரா

    வங்கதேசம், கடைசி 7 ஓவர்களில் 70 ரன்கள் விளாசியதில் 36 ரன்களுக்கு பங்காற்றிய சபீர் ரஹ்மானை, ஸ்லோ டெலிவரியில் போல்டாக்கி வெளியேற்றினார் பும்ரா. 

    22:32 (IST)02 Jul 2019

    India vs Bangladesh Live : மீண்டும் வெற்றியை நோக்கிய பயணத்தில் வங்கதேசம்?

    வங்கதேச அணியின் சபீர் ரஹ்மான் - சைபுதீன் ஜோடி, 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகிறது. வெற்றிக்கு 46 பந்துகளில் 73 ரன்களே தேவை. மீண்டும் வங்கதேசம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. 

    விராட் கோலியின் முகத்தில் மகிழ்ச்சி சுத்தமாக இல்லை!.

    22:21 (IST)02 Jul 2019

    Ban vs Ind Live - இந்தியாவை மிரட்டும் ஏழாவது பார்ட்னர்ஷிப்!

    7 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்திருக்கும் ஷபீர் ரஹ்மான் - சைபுதீன், இந்திய பவுலர்களை பவுண்டரிகளுக்கு விளாசி வருகின்றனர். இதுவரை இருவரும் சேர்ந்து எட்டு ராக்கெட் பவுண்டரிகளை விளாசியுள்ளனர். 

    40 ஓவர்கள் முடிவில், வங்கதேசம் 225-6

    22:12 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Match - ஷமி ஓவரை விளாசிய வங்கதேசம்

    ஷமி வீசிய 38வது ஓவரில், சபீர் ரஹ்மான் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, சைஃபுதீன் 2 பவுண்டரிகள் விளாச, அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் குவித்தது வங்கதேசம். 

    என்ன ஷமி இது? என்ன பண்ணி வச்சிருக்கீங்க??

    22:03 (IST)02 Jul 2019

    Bumrah Injured : காயத்தால் வெளியேறிய பும்ரா

    ஹர்திக் பாண்ட்யா ஓவரில் 35.1வது பந்தில் சபீர் ரஹ்மான் பவுண்டரி அடிக்க, அதனை தடுக்க முயன்ற பும்ராவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் எழுந்திருக்கவே இல்லை. உடனடியாக, பரிசோதனைக்காக பும்ரா அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். 

    21:56 (IST)02 Jul 2019

    India vs Bangladesh Live : ஷகிப் அல் ஹசன் அவுட்

    வங்கதேசத்தின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஷகிப் அல் ஹசன் 66 ரன்களில், பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆனார்.  74 பந்துகளை சந்தித்த சகிப், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். பாண்ட்யாவின் ஸ்லோ பந்தில், எக்ஸ்ட்ரா கவரில் சகிப் கேட்ச் ஆனார். 

    21:42 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Cricket - மொசடேக் ஹொசைன் அவுட்!

    7 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த மொசடேக் ஹொசைன், பும்ரா பந்தில் போல்டாக, வங்கதேசம் தனது ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. பும்ராவின் ஆஃப் கட்டர் பந்தில் அவர் போல்டானார். 

    21:29 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live : ஏமாந்துட்டியே பங்கு

    30வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா, லிட்டன் தாசுக்கு ஷார்ட் பிட்ச் பந்து ஒன்று வீச, அதனை அனாயசமாக சிக்ஸருக்கு விளாசினார். அதே ஓவரில் மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து வீச, இம்முறையும் சிக்ஸருக்கு ஆசைப்பட்ட லிட்டன், டாப் எட்ஜ் ஆகி வட்டத்துக்குள்ளேயே தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் வெளியேறினார். 

    20:58 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Score - முஷ்பிகுர் ரஹீம் அவுட்

    ஒருவழியாக சாஹல் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். சாஹல் ஓவரில் ஸ்வீப் செய்த முஷ்பிகுர் 24 ரன்களில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முக்கியமான தருணத்தில், இந்தியாவுக்கு கிடைத்த மிக முக்கியமான விக்கெட் இது. 

    20:53 (IST)02 Jul 2019

    Ind vs Ban, World Cup Live Match - 116/2

    வங்கதேச அணி 22 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசத்தின் மோஸ்ட் சீனியர் பிளேயர்களான சகிப் மற்றும் முஷ்பிகுர் களத்தில் உள்ளனர். 

    சாஹல் நிச்சயம் ஏதாவது விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும்!

    20:40 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live : கோலியை எச்சரித்த அம்பயர்கள்

    ஷமி ஓவரில், சவுமியா சர்காருக்கு எல்பிடபிள்யூ அவுட் கேட்டு, இந்தியா ரிவியூ செய்திருந்தது. ஆனால், பலத்த யோசனைக்குப் பிறகு, தேர்ட் அம்பயர் நாட் அவுட் கொடுக்க, கள நடுவர்களுடன் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இப்போது, ஹர்திக் பாண்ட்யா ஓவரில், கோலியிடம் சவுமியா கேட்ச் கொடுக்க, விராட் கோலி 'இப்போது நீ அவுட்' என்று செய்கை செய்து காட்டி அவரை வெளியேற்றினார். இதையடுத்து, நடுவர்கள் கோலியை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

    20:29 (IST)02 Jul 2019

    SOUMYA SARKAR out : கமான் இந்தியா

    சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சவுமியா சர்கார், ஹர்திக் பாண்ட்யாவின் ஒரு மிகச் சாதாரண பந்தில், ஷார்ட் எக்ஸ்டிரா கவரில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் வெளியேறினார். 

    20:20 (IST)02 Jul 2019

    Ind vs Ban match score live - அடுத்த விக்கெட்?

    13வது ஓவரை வீசிய சாஹலின் பந்துகளில் பெரிய அளவு அச்சுறுத்தல் இல்லை. ஆனால், நிச்சயம் அவர் விக்கெட் வீழ்த்துவார் என எதிர்பார்க்கலாம். சவுமியா சர்கார், சாஹல் ஓவரில் ஏமாற அதிகம் வாய்ப்புள்ளது. எனினும், இந்தியாவுக்கு தேவை இப்போது இரண்டாவது விக்கெட்.

    20:09 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Score Updates : மீண்டும் சிக்கிய மஞ்சரேக்கர்

    ஏற்கனவே, ஐபிஎல் தொடரின் போது மும்பைக்கு ஆதரவாக வர்ணனை செய்வதாக, சஞ்சய் மஞ்சரேக்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் போது, மீண்டும் தோனி மீது மட்டும் குறி வைத்து விமர்சனம் செய்வதாக மஞ்சரேக்கர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அவரது வர்ணனையை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    If #Dhoni hits singles in death overs, he is wrong..

    If #Dhoni retains strike, so he can hit boundaries and doesn't take singles, he is wrong again..

    What is he supposed to do.. Biased Commentary of the highest order!#INDvBAN #CWC19

    — Ramesh Bala (@rameshlaus) 2 July 2019

    20:00 (IST)02 Jul 2019

    Shami Wicket : மீண்டும் மேஜிக் தந்த ஷமி

    உலகக் கோப்பைத் தொடரில், விக்கெட் வேட்டையில் ஈடுபட்டு வரும் முகமது ஷமி, வங்கதேசத்துக்கு எதிராக விக்கெட் எடுக்க முடியாமல் மற்ற பவுலர்கள் தடுமாறிய நிலையில், தமிம் இக்பாலை, இன்சைட் எட்ஜ் ஆக்கி வெளியேற்றி இருக்கிறார்.

    22 ரன்களில் தமீம் அவுட்

    19:52 (IST)02 Jul 2019

    IND vs BAN Live Updates : விக்கெட் எங்கே?

    7 ஓவர்கள் முடிவில், வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் விழும் அறிகுறியே இல்லாததால், எட்டாவது ஓவரை வீச ஷமி  அழைக்கப்பட்டுள்ளார். 

    அவரு வரும் யோகம், விக்கெட் விழுதான்னு பார்ப்போம்!.

    19:38 (IST)02 Jul 2019

    Ind vs Ban : இரண்டு பவுண்டரி; மெய்டன்

    பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் தமீம் இக்பால் இரண்டு கேஷுவல் பவுண்டரிகள் அடித்ததை பார்க்கும் போது, பந்து பேட்டுக்கு சரியாக வருவது போன்று தெரிகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், அது இந்தியாவுக்கு நிச்சயம் பாதகமே! ஆனால், 4வது ஓவரை வீசிய பும்ரா, சவுமியா சர்காரை வைத்து மெய்டன் செய்திருக்கிறார். 

    19:23 (IST)02 Jul 2019

    Tamim Iqbal - கடன் பாக்கியுள்ளது தமீம்

    வங்கதேச ஓப்பனர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்கார் களமிறங்கி உள்ளனர். இன்று சதம் விளாசிய ரோஹித் ஷர்மாவுக்கு போட்டி தொடங்கிய உடனேயே கேட்ச்சை கோட்டை விட்டவர் தமீம் இக்பால். ஆகையால், பந்தால் விட்ட கடனை, பேட்டால் அடைப்பாரா தமீம்?

    19:18 (IST)02 Jul 2019

    BAN vs IND Live: மிரட்டும் வங்கதேச பேட்டிங் லைன் அப்

    இந்த உலகக் கோப்பைத் தொடரில், இதுவரை மூன்று முறை வங்கதேசம் அணி 300 ரன்களைக் கடந்திருக்கிறது. சேஸிங்கில் ஆஸ்திரேலிய பவுலர்களை அலற வைத்தனர் புலிக்குட்டி பேட்ஸ்மேன்கள். 

    ஆகையால், இந்தியா 315 ரன்களுக்குள் வங்கதேசத்தை டிஃபண்ட் செய்யுமா?

    18:49 (IST)02 Jul 2019

    315 ரன்கள் இலக்கு

    இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்துள்ளது. 10 ஓவர்கள் வீசிய முஸ்தாபிசூர் ரஹ்மான் 59 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 

    18:34 (IST)02 Jul 2019

    Dinesh Karthik Out, Ind vs Ban Live - தினேஷ் கார்த்திக் அவுட்

    முஸ்தாபிசூர் ரஹ்மானின் ஷார்ட் பிட்ச் பந்தில், புல் ஷாட் அடிக்க முயன்ற தினேஷ் கார்த்திக், 8 ரன்களில் கேட்ச் ஆனார். இந்தியாவின் தனது ஆறாவது விக்கெட்டை இழந்தது. போகிற போக்கைப் பார்த்தால், இந்தியா 320 ரன்கள் கூட அடிக்காது போல...!

    18:22 (IST)02 Jul 2019

    Shakib Al Hasan - ரிஷப் பண்ட் அவுட்

    சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 41 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து, ஷகிப் அல் ஹசன் ஓவரில், டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார். இந்தியா தனது ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. ஷகிப் வீசிய அந்த 45வது ஓவரில், இந்திய அணி 2 ரன்கள் மட்டும் எடுத்து, ஒரு விக்கெட்டையும் இழந்துள்ளது. 

    18:12 (IST)02 Jul 2019

    Ind vs Ban Score Live Updates : தோனியை டார்கெட் செய்யும் ஷகிப்

    தோனி ஸ்பின்னுக்கு எதிராக சரியாக விளையாடுவதில்லை. அதிலும், இடது கை ஸ்பின்னர்களை சுத்தமாகவே தோனி புறக்கணித்து வருகிறார். இதை கருத்தில் கொண்டு, இடது கை ஸ்பின்னரான ஷகிப், தோனியை நிற்க வைத்து 43வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டும் கொடுத்திருக்கிறார். 

    18:01 (IST)02 Jul 2019

    Ind vs Ban score - ஹாட்-ட்ரிக் விளாசிய ரிஷப்

    அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் இழந்த சோகத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, சென்னை மழையைப் போல ரிஷப் பண்ட்டின் ஹாட்-ட்ரிக் பவுண்டரி வந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சைஃபுதின் ஓவரில் தான் இந்த சாத்து.

    40 ஓவர்கள் முடிவில், இந்தியா 251-4

    17:57 (IST)02 Jul 2019

    Dhoni, Ind vs Ban Live Cricket - தோனி களத்தில்...

    ஹர்திக் பாண்ட்யாவின் மோசமான விக்கெட்டுக்கு பிறகு தோனி களமிறங்கியுள்ளார். அடுத்த 10 ஓவர்களில் 80 - 100 ரன்கள் அடித்தால் தான், இந்தியா 320 -330 ரன்களாவது இலக்கு  நிர்ணயிக்க முடியும். 

    17:54 (IST)02 Jul 2019

    Hardik Pandya Out: ஹர்திக் 0 ரன்களில் அவுட்

    விராட் கோலியைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, முஸ்தாபிசூர் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல், ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில், கொடுமை என்னவெனில், அவரை அவுட் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஸ்லிப் கொண்டு வரப்பட்டது. ஆனால், வலையில் சிக்கிய மீனைப் போல சிக்கி வெளியேற்றப்பட்டிருக்கிறார் ஹர்திக்.

    17:49 (IST)02 Jul 2019

    Virat Kohli Out : விராட் கோலி ஏமாற்றம்

    27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து, மிகவும் பொறுமையாக ஆடி வந்த கேப்டன் விராட் கோலி, முஸ்தாபிசூர் ரஹ்மான் ஓவரில், ருபெல் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    17:47 (IST)02 Jul 2019

    Ind vs Ban Cricket Score : 237-2

    38 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 26 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    இந்திய அணி 350 ரன்கள் எட்டுமா?

    17:35 (IST)02 Jul 2019

    Virat Kohli, Ind vs Ban Live score - ரன் ரேட்டை உயர்த்துங்கப்பா!

    ரோஹித் அவுட்டான பிறகு சரிந்த ரன் ரேட், அதன்பிறகு தற்போது வரை மீளவில்லை. 35 ஓவர்கள் ஆகிவிட்டது. 

    கோலி கூட வழக்கத்தைவிட சற்று பொறுமையாகவே ஆடி வருகிறார். 17 பந்துகளில் 15 ரன்கள். ரோஹித் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த பிறகு, கோலி அதை இவ்வளவு பொறுமையாக கடத்திச் செல்வது விந்தையாகவே உள்ளது. 

    17:26 (IST)02 Jul 2019

    Rishabh Pant : களத்தில் ரிஷப்... அனல் பறக்குமா?

    லோகேஷ் ராகுல் அவுட்டான பிறகு, ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டுள்ளார். ரிஷப்பின் அதிரடியைக் காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். ஆனால், சார்வால் அடுப்பாரா என்பது தான் சந்தேகமாக உள்ளது. 

    கடந்த ஐந்து ஓவர்களில் இந்திய அணி 23 ரன்களை மட்டுமே எடுத்து, இரண்டு ஓப்பனர்களையும் பறிக்கொடுத்து இருக்கிறது.

    17:17 (IST)02 Jul 2019

    Lokesh Rahul Out: லோகேஷ் ராகுல் அவுட்

    ரோஹித் ஷர்மா அவுட்டான பிறகு, ரன் ரேட் 6க்கும் கீழ் குறைந்துவிட்டது. தொடர்ந்து, 92 பந்துகளில் 77 ரன்கள் அடித்திருந்த லோகேஷ் ராகுல், ருபெல் ஹொசைன் ஓவரில், திக் அவுட்சைட் எட்ஜ் ஆக, கீப்பரிடம் கேட்ச் கொட.த்து வெளியேறினார்,

    17:07 (IST)02 Jul 2019

    Ind vs Ban Match Updates : ரோஹித் அவுட்

    பார்ட் டைம் பவுலரான சவுமியா சர்கார் ஓவரில், ரோஹித் 104 ரன்களில் கேட்ச் ஆனார். இப்போதெல்லாம், விராட் கோலி, தனது அரைசதத்தை சதமாக்குவதில்லை. ரோஹித் ஷர்மா, தனது சதத்தை இரட்டை சதமாக்க முயற்சிப்பதில்லை.

    17:03 (IST)02 Jul 2019

    Rohit Sharma 100* - ரோஹித் அபார சதம்

    2019 உலகக் கோப்பையில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. அதுமட்டுமின்றி, நடப்பு உலகக் கோப்பையில், அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார். 

    16:54 (IST)02 Jul 2019

    Ban vs Ind Live match - பார்ட் டைம் ஓர்க் அவுட் ஆகுமா?

    இந்தியாவின் முதல் விக்கெட்டுக்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கும் வங்கதேசத்துக்கு, பார்ட் டைம் பவுலராக சவுமியா பந்து வீச தொடங்கி இருக்கிறார். ஆரோன் ஃபின்ச், கேன் வில்லியம்சன் போன்ற பார்ட் டைம் பவுலர்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்திருக்கும் நிலையில், சவுமியா ஃபேக்டர் ஒர்க் அவுட் ஆகுமா?

    16:42 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Updates : வங்கதேசம் செய்ய வேண்டியது என்ன?

    முஸ்தாபிசுரை இரண்டாவது ஸ்பெல் வீச உடனே அழைக்க வேண்டும். விக்கெட் விழ வாய்ப்பிருக்கிறது. அதேபோல், ஷகிப்பை தொடர்ந்து மிடில் ஓவர்களில் வீச வைக்க வேண்டும். தவிர, ரோஹித் விக்கெட் மீது மட்டும் கார்னர் செய்யாமல், லோகேஷ் ராகுலையும் கார்னர் செய்ய வேண்டும். ஏனெனில், அவரை தொடர்ந்து நிற்க வைத்தால் வங்கதேசத்துக்கு விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுவிடும். 

    16:35 (IST)02 Jul 2019

    Ind vs Ban Score Card : 90 மீட்டர் சிக்ஸ்

    வலது கை ஆஃப் ஸ்பின்னரான மொசடேக் ஹொசைனை ரோஹித் ஷர்மா சற்றே கலங்க வைத்துவிட்டார். 90 மீட்டருக்கு ஸ்ட்ரெய்ட்டில் ரோஹித் அடித்த சிக்ஸ், மூன்றாவது ஸ்டாண்டில் போய் விழுந்தது. அது ரோஹித்தின் 4வது சிக்ஸராகும்.

    16:26 (IST)02 Jul 2019

    Lokesh Rahul 50* - இதைத் தான் எதிர்பார்த்தோம் ப்ரோ!!

    2019 உலகக் கோப்பையில், தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் லோகேஷ் ராகுல். ரோஹித் உடனான ராகுலின் கம்பெனி, பிக் அப் ஆகிவிட்டால் நேர்த்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ரோஹித் ஷர்மா, பவர் ஷாட்களை விளாசிக் கொண்டிருக்க, லோகேஷ் ராகுல் நீட் ஷாட்களை மைதானம் முழுக்க பரவ விட்டுக் கொண்டிருக்கிறார். 

    16:19 (IST)02 Jul 2019

    Ind vs Ban live match Updates - 100 ரன்களைக் கடந்த இந்தியா

    இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது ஓப்பனிங் சதக் கூட்டணியை இன்று அமைத்திருக்கிறது ரோஹித் - ராகுல் கூட்டடணி.

    2019 உலகக் கோப்பையில் இந்தியா தொடக்க வீரர்கள்

    13 vs தென்.,ஆ

    127 vs ஆஸி.,

    136 vs பாக்.,

    7 vs ஆப்கன்

    29 vs வெ.இ

    8 vs இங்கி.,

    101* v வங்கதேசம்

    16:03 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Match - ரோஹித் ஷர்மா 50*

    ஷகிப் வீசிய அவுட் சைட் ஆஃப் பந்துகளில் தடுமாறிக் கொண்டிருந்த ரோஹித், சிக்கிய ஒரு ஸ்ட்ரெய்ட் பந்தில் சிக்ஸ் விளாச, உலகக் கோப்பையில் தனது அடுத்த அரைசதத்தை பதிவு செய்தார். 

    15:53 (IST)02 Jul 2019

    BANGLADESH vs INDIA Live Score Card - இந்திய ஓப்பனர்கள் டாமினேஷன்!

    11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்துள்ளது. அன்று இங்கிலாந்து, இந்தியாவை அடிக்க ஆரம்பித்தது போல், இப்போது வங்கதேச பவுலர்களை, இந்திய ஓப்பனர்கள் விளாச தொடங்கியுள்ளனர். இதனால், 11வது ஓவரை வீசுவற்கே ஷகிப் அல் ஹசன் வந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.

    15:28 (IST)02 Jul 2019

    Tamim Iqbal Dropped Rohit Catch : விட்டுட்டியே குமாரு!!

    முஸ்தாபிசூர் ரஹ்மான் ஓவரில், அதே லெக் சைட் ஷார்ட் பவுண்டரியில் சிக்ஸ் அடிக்க முயன்ற ரோஹித் தூக்கி அடிக்க, கைக்கு வந்த மிக எளிதான கேட்சை தமிம் இக்பால் தவறவிட்டிருக்கிறார். அதற்கு அடுத்த ஓவரில், சைஃபுதின் பந்தில் ரோஹித் டீப் எக்ஸ்டிரா கவரில் சிக்ஸ் அடிக்க, வங்கதேச வீரர்கள் மைண்ட் வைஸ்...

    விட்டுட்டியே குமாரு.. தப்புப் பண்ணிட்டியே குமாரு!!

    15:16 (IST)02 Jul 2019

    Lokesh Rahul, Ban vs Ind Live Score : லோகேஷ் ராகுல் பிரச்சனை தான் என்ன?

    உண்மையில், லோகேஷ் ராகுல் ஒரு டெஸ்ட் பிளேயராக இந்திய அணியில் அறிமுகமானார். ஆனால், ஐபிஎல் மூலம் தன்னை ஒரு அபார டி20 பிளேயராக தகவமைத்துக் கொண்டார். அதை சர்வதேச போட்டிகளில் நிரூபிக்கவும் செய்தார். காயம் காரணமாக, ரோஹித் சில தொடர்களில் அணியில் இடம் பெறாத போது, ஓப்பனிங் இறக்கப்பட்ட லோகேஷ், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோஹித்துக்கே ஜெர்க் ஏற்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும். 

    ஆனால், அவரின் பெரிய பிரச்சனை, 'தன்னால் இன்று இதை சாதிக்க முடியுமா?' என்ற பீதியுடனே  விளையாடுவது தான். அதனாலேயே முதல் ஆளாய் பயிற்சிக்கு சென்றாலும், முதல் ஆளாய் அவுட்டாகி பெவிலியனுக்கும் திரும்புகிறார். பிட்சை ரீட் செய்வதில் அவரிடம் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அதை Execute செய்வதில் தான் அவர் தோல்வி அடைகிறார். 

    15:09 (IST)02 Jul 2019

    Rohit Sharma, Ind vs Ban Live - ரோஹித் சிக்ஸ்

    கேப்டன் மஷ்ரபே மோர்டசா வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே, லெக் சைடின் ஷார்ட் பவுண்டரியை டார்கெட் செய்து, ரோஹித் அட்டகாசமாக சிக்ஸ் அடிக்க, முதல் ஓவர் மெய்டனுக்கு எண்டு கார்டு போட்டிருக்கிறது இந்தியா!.

    14:58 (IST)02 Jul 2019

    Ban vs Ind, World Cup 2019 Live Cricket Score - வங்கதேச அணியில் இரு மாற்றம்

    இந்தியாவைப் போலவே வங்கதேச அணியிலும் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவுடன் எப்போதும் மல்லுக்கட்டும் வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹொசைன், மிராஸ்-க்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோல், மஹ்மதுல்லா-வுக்கு பதிலாக வங்கதேச 'டி வில்லியர்ஸ்' சபீர் ரஹ்மான் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

    14:52 (IST)02 Jul 2019

    India vs Bangladesh Live Cricket Score : இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி?

    இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு இப்போட்டியில் அதிகமாகவே உள்ளது. இங்கிலாந்து எதிரான ஆட்டத்தின் மூலம், எட்ஜ்பேஸ்டன் பிட்ச் கொடுத்த படிப்பினை, இந்திய வீரர்களுக்கு சற்று அதிகமாகவே கிடைத்துள்ளது. ஆகையால், பக்கா பிளானுடன் இந்தியா இன்று களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் விளைவே, இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்ககளில் குல்தீப் நீக்கப்பட்டு, கூடுதலாக ஒரு ஃபாஸ்ட் பவுலர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். பவுண்டரி எல்லை சிறியதாக இருப்பதால் தான் இந்த முடிவு. மூன்று ஃபேஸ் அட்டாக் என்பது உண்மையில் நல்ல முடிவு எனலாம்.

    14:43 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Match : மூன்று விக்கெட் கீப்பர்கள்!

    இந்திய அணியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர். தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்!

    தினேஷ் கார்த்திக்கின் வருகை அணிக்கு பலம் தான் என்றாலும், அவரது 50 ஓவர் கிரிக்கெட் கன்சிஸ்டன்சி கேள்விக்குறியே! அவரால், 40 ரன்கள் அளவுக்காவது பங்களிப்பு தர முடியுமா என்பதே சந்தேகமாக தான் உள்ளது. இருப்பினும், நம்மவரை நாமே நம்பவில்லை எனில் எப்படி!? 

    ஸோ, பொறுத்திருந்து பார்ப்போம். 

    14:37 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Score : டாஸ் வென்று இந்தியா பேட்டிங்

    டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குல்தீப் யாதவுக்கு பதில் புவனேஷ் குமாரும், கேதர் ஜாதவுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    14:28 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live : அரையிறுதிக்கு முன்னேறப் போகும் அணிகள் எவை?

    அரையிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா மட்டுமே இதுவரை தகுதி பெற்றிருக்கும் நிலையில், மீதமுள்ள அந்த மூன்று அணிகள் எவை எவை என்பதை ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடிந்தாலும், நாம் இதற்கு பல முறை சொல்லி வரும் விஷயம், ‘கிரிக்கெட் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு விளையாட்டு என்பது’. இங்கு எப்போது வேண்டுமானாலும், என்ன மாயமந்திரம் வேண்டுமானாலும் நடக்கலாம். கோபுரத்தில் இருப்பது வீதிக்கு வரலாம், வீதியில் இருப்பது உச்சிக்கு போகலாம். முழுச் செய்தியையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

    14:17 (IST)02 Jul 2019

    Ind vs Ban Live Match - நாகினி டான்ஸ் பார்க்க தயாரா?

    நேயர்கள் அனைவருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் சார்பில் டேஞ்சரான வணக்கங்கள். இன்று, இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 2011 உலகக் கோப்பையில தோற்றது, 2015 உலகக் கோப்பையில தோற்றது, 2016 டி20 உலகக் கோப்பையில தோற்றது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றது என வங்கதேசம், வரிசையாக இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு, இன்று பழிதீர்க்க ஆயத்தமாக உள்ளது. இந்தியாவும் சவாலை சந்திக்க தயாராக உள்ளது. 

    ஒரு மாஸ் மேட்ச் இன்று உங்களுக்காக காத்திருக்கிறது. மிஸ் பண்ணிடாதீங்க!!

    World Cup
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment