லேட்டாக சென்று சீக்கிரம் 'திரும்பி' வந்த ரோஹித்!
இந்நிலையில், இன்று மதியம் மூன்று மணிக்கு தொடங்கவுள்ள 2-வது பயிற்சி ஆட்டத்தில்...
ஜூன் 1-ஆம் தேதி சாம்பியன்ஸ் லீக் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகின்றன. கோலி தலைமையில் முதன்முதலாக சாம்பியன்ஸ் லீக்கில் களமிறங்கும் இந்திய அணி, தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதியது. இதில் (D/L) விதிப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இந்நிலையில், இன்று மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடி வருகிறது. உறவினர் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு தாமதமாக இங்கிலாந்து சென்ற ரோஹித் ஷர்மா, முதல் பயிற்சிப் போட்டியில் ஆடவில்லை. ஆனால், இன்றைய போட்டியில் களமிறங்கிய அவர், ஒரு ரன் மட்டும் எடுத்து ரூபெல் ஹொசைன் ஓவரில் போல்டானார்.
அதேசமயம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங், இன்றைய போட்டியில் களமிறங்குவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. இருப்பினும், மைதானத்தில் பயிற்சிக்காக யுவராஜ் மைதானத்தில் நடந்து வரும் படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
.@YUVSTRONG12 walks in for the drills ahead of #CT17 warm-up match against Bangladesh #INDvBAN pic.twitter.com/JKcdkkzouT
— BCCI (@BCCI) May 30, 2017
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook