Advertisment

18 ரன்களில் பட்லர் கொடுத்த லைஃப்… இங்கிலாந்தை ஊதி தள்ளிய பண்ட்!

A maiden white-ball hundred (125 off 113) after a reprieve from Jos Buttler at 18 Tamil News: இங்கிலாந்து மண்ணில் பயணம் செய்த இந்திய அணிக்கு நேற்றைய ஆட்டம் முக்கியமான ஆட்டமாக இருந்த நிலையில், பண்ட்டின் தக்க சமய அதிரடி, அணி ஆட்டத்தை வெல்லவும், தொடரை கைப்பற்றவும் உதவியது.

author-image
Martin Jeyaraj
New Update
IND vs ENG 3rd odi: century for pant after reprieve from Jos Buttler at 18

India's Rishabh Pant as India beat England to win the third one day international cricket match between England and India at Emirates Old Trafford cricket ground in Manchester, England, Sunday, July 17, 2022. (AP Photo/Rui Vieira)

Rishabh Pant Tamil News: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் ஆட்டத்தில் கேப்டன் ரோகித் - தாவன் தொடக்க ஜோடியை பறித்து கொடுத்த இந்தியா வலுவான தொடக்கம் கிடைக்காமல் திணறி வந்தது. அப்போது கோலியுடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் பண்ட் வழக்கத்திற்கு மாறாக தென்பட்டார். அவர் தனது முதல் 24 பந்துகளில் பவுண்டரி கூட அடிக்கவில்லை. அவரின் அதிரடிக்காக பலர் வழிமேல் விழி வைத்தனர். ஏனென்றால் அவருடன் மறுமனையில் இருந்த கோலி 17 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்திருந்தார்.

Advertisment

இதனால், மிகவும் நிதானமாக மட்டையை சுழற்றிய பண்ட் கிரெய்க் ஓவர்டனின் ஓவரை டார்கெட் செய்து அடிக்கலாம் என நினைக்கையில், அவர் சிக்சருக்கு அடிக்க முடியற்சித்த பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் இருந்த திசையில் பவுண்டரி சென்றது. மீண்டும் பண்ட் அவரது 27வது பந்தில் பவுண்டரியை துரத்த ஆமை வேகத்தில் நகர்ந்த அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயரத்தொடங்கியது. இம்முறை அவருடன் ஜோடியில் ஹர்டிக் பாண்டியா இருந்தார்.

முன்னதாக, மொயீன் அலியின் ஓவரை அடித்து விரட்ட முயன்ற பண்ட், மட்டையை சுழற்றிய வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தார். அவர் க்ரீஸை விட்டு வெளியே இறங்கி இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அவருக்கும், துரதிர்ஷ்டவசமாக இங்கிலாந்திற்கும், ஜோஸ் பட்லர் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்ய தவறி விட்டார். அப்போது பண்ட் வெறும் 18 ரன்களே எடுத்திருந்தார். அதன்பிறகு பண்ட் அது போன்ற தவறுகளை செய்ய முற்படவில்லை. செய்யவும் இல்லை. தனது வழக்கமான அதிரடிக்கு மாறி ஆட ஆரம்பித்தார்.

ஏற்கனவே டெஸ்ட் தொடர்களில் ஐந்து டெஸ்ட் சதங்களை விளாசியதன் மூலம் பண்ட் அந்த ஃபார்மெட்டில் தனது திறனை நிரூபித்திருந்தார். ஆனால், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் அதை செய்ய முடியாமல் தவித்து வந்தார். அவரின் அந்த நெடுநாள் கனவை நேற்று மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்தில் நிறைவேற்றினார். அவரின் அசத்தல் திறனை வெளிப்படுத்தியதோடு, அவரின் மீது நம்பிக்கை வைத்த பலரின் நம்பிக்கையையும் காப்பாற்றினார். அதுவும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி 113 பந்துகளில் 125 ரன்கள் என்று அதிரடி காட்டி, அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

publive-image

இந்த ஆட்டத்தில் 71 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசியிருந்த பண்ட் அடுத்த 35 பந்துகளில் சதம் அடித்து, ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முன்னர், அணியின் வெற்றி தான் முக்கியம் என்பதையும் தனது மனதில் உறுதி பூண்டிருந்த அவர், ஆல்ரவுண்டர் வீரர் ஹர்டிக் பாண்டியா 71 ரன்னில் ஆட்டமிழந்த பிறகு, அவரின் அதிரடி ஆட்டத்தை இரு மடங்காக்கினார். குறிப்பாக, அவர் டேவிட் வில்லியின் ஓவரில் 5 பவுண்டரிகளை பறக்கவிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதேபோல் அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது சிங்கிள் தட்டி ரன்கள் சேர்க்காமல், ஜோ ரூட்டின் பந்துவீச்சில் ஒரு ரிவர்ஸ்-ஸ்வீப்ட் அடித்து பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்தது, இது பண்ட் தான! என்று வியக்க வைத்தது.

மேலே குறிப்பிட்டது போல், பண்ட் நீண்ட காலத்திற்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய இன்னிங்ஸில் எப்படி ஆட வேண்டும் என்கிற புதிரை முறியடித்து இருந்தார். ஆனால், அடித்து ஆடுவது மற்றும் டிஃபென்ட் செய்து ஆடுவது ஆகியவற்றுக்கு இடையேயான நேர்த்தியான கோட்டை அவரால் கண்டறிய முடியவில்லை. மேலும், அவர் ஒருநாள் போன்ற நீண்ட ஃபார்மெட்டில் தடுமாறுவது, அவரை ஒயிட் -பால் கிரிக்கெட்டில் சிறந்தவராகவும், அதைத் தக்கவைக்க கடினமாகவும் உள்ளது. நாம் இதை அவரின் டி20-யில் அதிகம் பார்க்கிறோம். அங்கு அவர் சிறிது அதிரடிக்கு பயணித்து திடீரென்று ஆட்டமிழந்து விடுகிறார்.

நேற்றைய ஆட்டத்திலும் அது நடந்திருக்காது என்று இல்லை. ஆனால் அவர் அந்த பட்லர் கோட்டை விட்ட வாய்ப்பை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டார். அது அவர் கண்ணைக் கவரும் வகையில் அடித்த பவுண்டரிகளில் இல்லை. மாறாக, விக்கெட்டின் அமைதியான டப்ஸ் ஸ்கொயர் மற்றும் பாண்டியாவுடன் விக்கெட்டுகளுக்கு இடையே கடினமாக ஓடி ரன் சேர்த்தவை இன்னும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அவருக்கு பந்துகள் ஒயிடு லயனில் வீசப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அவர் ஸ்டிரைக்கை சுழற்றுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக அவர் பந்தை தரையில் கடுமையாகத் தாக்கி புள்ளிக்கு மேல் பவுன்ஸ் செய்து ஒன் பிட்ச் கேட்ச் ஆவது போல் அடிக்கிறார்.

publive-image

இங்கிலாந்து மண்ணில் பயணம் செய்த இந்திய அணிக்கு நேற்றைய ஆட்டம் முக்கியமான ஆட்டமாக இருந்த நிலையில், பண்ட்டின் தக்க சமய ஆட்டம் அணி ஆட்டத்தை வெல்லவும், தொடரை கைப்பற்றவும் உதவியது. இங்கிலாந்து மண்ணில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா வென்ற முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். இந்த ஆட்டத்திற்குப் பிறகு பண்ட், "எனது வாழ்நாள் முழுவதும் நான் (இந்த சதத்தை) நினைவில் வைத்திருப்பேன்." என்று கூறியிருந்தார். இந்த அசத்தல் ஆட்டத்தை அவர் மறந்தாலும், மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களும், அவரின் ஆட்டத்தை பல தளங்களில் பார்த்த நம்மாலும் மறக்க முடியாது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cricket Sports England Rishabh Pant India Vs England Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment