Advertisment

இந்தியா vs நியூஸி : முதல் டெஸ்ட்டின் லைவ் ஸ்கோர் கார்டு

IND vs NZ 1st Test Live Score Card : நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் முன்னிலை . இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs nz 1st test live score card live score updates

ind vs nz 1st test live score card live score updates

India vs New Zealand 1st Test Live Score Updates : வெலிங்டனில் 3 ஆம் நாள் மதிய உணவு இடைவேளையின் பின்னர் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. முன்னதாக ஆடிய நியூசிலாந்து அணி  348 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில்  183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தின் போக்கு எந்த வகையில் செல்லும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

Advertisment

இந்தியா vs நியூஸி முதல் டெஸ்ட்:  

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளி அன்று துவங்கியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது கேப்டன் கோலி இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டார்.

இந்தியா, நியூசிலாந்து தொடர் ஒரு ரோலர் கோஸ்டர் தொடர் என்று வர்ணிக்கலாம். டி20 தொடரை 5-0 என்று முழுமையாக ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் 3-0 என்று ஒயிட் வாஷ் ஆனது. இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வெல்லிங்டனில் தொடங்கியது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:

ப்ரித்வி ஷா, மாயங்க் அகர்வால், சேதேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (c), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சஹா (w), ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஹனுமா விஹாரி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில்.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு வெற்றிக்கும் 60 புள்ளிகள் வழங்கப்படும். டிராவில் முடிந்தால் தலா 20 புள்ளிகள் கிடைக்கும். உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா 360 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து 60 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

India Vs New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment