/tamil-ie/media/media_files/uploads/2017/11/z714.jpg)
இன்று இரவு 7 மணிக்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதி டி20 போட்டியில் மோதவுள்ள நிலையில், கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தொடக்க வீரர் ஷிகர் தவான், விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகிய மூவரும் நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கோலி, "ஓர் கடந்த இரவில், வீரர்களுடன் குதூகலம்" என்று கேப்ஷன் இட்டுள்ளார்.
One from last night, chilling with the boys! ????????@SDhawan25@hardikpandya7pic.twitter.com/1qLzvWYdtf
— Virat Kohli (@imVkohli) 7 November 2017
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி, இன்று நடைபெறவுள்ள நிலையில், கோலி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனால், தேவையில்லாத அழுத்தத்தை அவர் விரும்பவில்லை என்று தெளிவாக தெரிகிறது.
முன்னதாக, கோலி ஒரு பேட்டியில் தெரிவிக்கையில், "இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சக வீரர்களுடன் சிறப்பான அன்பை, இணைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த இணைப்பின் காரணமாகவே நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். சமீபத்தில் நாங்கள் விளையாடிய அனைத்து தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த நாட்டில் நடக்கும் தொடரை இழந்துவிடக் கூடாது என நினைக்கிறோம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.