scorecardresearch

சீனியர்களுக்கு ஸ்கெட்ச்.. களமிறங்கும் இளம்படை… டிராவிட் வியூகம் பலிக்குமா..!

India vs New Zealand 1st T20 latest updates Tamil News: இந்திய அணியில் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான், மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

IND vs NZ match live tamil: new era begins in t20 india team Rahul And Rohit leads

IND vs NZ 1st T20 Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது.

புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்…

இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டனும், ஜாம்பவான் வீரருமான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட போது மேலும், அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதனால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி பல சாதனைகளை பதிவு செய்தது. அவர் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த வீரர்களை பட்டை தீட்டியதோடு உலககோப்பையையும் கைப்பற்ற செய்தார்.

ராகுல் டிராவிட்டை பொறுத்தவரை தனது கிரிக்கெட் ஆட்டத்தை போலவே பயிற்சிகளிலும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர். ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர். எனவேதான் அவரது பயிற்சியின் கீழ் இருந்துவந்த இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சீனியர் வீரர்களுக்கு ஒய்வு

டி-20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நடப்பு டி-20 உலக கோப்பையுடன் விராட்கோலி விலகியுள்ளார். இதனால் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வீரர்களின் பணிச்சுமையை கருத்திக்கொண்டுள்ள இந்திய அணி நிர்வாகம் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இளம்படை…

இந்நிலையில், இந்திய அணியில் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான், மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த இளம் வீரர்களுக்கு 11 பேர்கொண்ட அணியில் இடம் வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

  1. ரோகித் சர்மா 2.கே.எல். ராகுல் 3.ரிது ராஜ் கெய்க்வாட் 4.சூர்யகுமார் யாதவ் 5.ரிஷப் பண்ட் 6.வெங்கடேஷ் ஐயர் 7.ஹர்ஷல் பட்டேல் 8.அஸ்வின் 9.புவனேஸ்வர் குமார் 10.தீபக் சாகர் 11.யுஸ்வேந்திர சாகல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs nz match live tamil new era begins in t20 india team rahul and rohit leads

Best of Express