இந்தியா VS தென்.ஆ., – டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

IND vs SA 1st ODI : இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி

By: Mar 12, 2020, 6:18:38 PM

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் இன்று(மார்ச்.12) தொடங்கியது.

கொரோனா எச்சரிக்கை, தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சு எச்சரிக்கை என்று சில பல த்ரெட்-களோடு இந்திய அணி களமிறங்கவுள்ளது.


விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் பெற்றுள்ளனர்.

பிட்ச் ரிப்போர்ட்:

தரம்சாலா பிட்ச், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் ‘தோஸ்து படா தோஸ்து’. எக்ஸ்ட்ரா பவுன்ஸ்-லாம் கேஷுவலா டெலிவரி ஆகிட்டு இருக்கும். இதனால், ‘டாஸ் வென்றால் சேஸ்’ தான் பெஸ்ட் ஆப்ஷன். இருந்தாலும், இன்றைய வானிலையைப் பொருத்து, சில முடிவுகள் மாறுபடலாம்.

இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். இதன் நேரடி ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும், மேலும் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் காணலாம்.

IE Tamil commentary
Live Blog
IND vs SA 1st ODI Score Card, Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala : இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி
18:17 (IST)12 Mar 2020
கைவிடப்பட்டது....

மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாஸ் போடாமல் கைவிடப்பட்டது.

17:00 (IST)12 Mar 2020
மீண்டும் மழை....

அடப்போங்கய்யா....!

16:21 (IST)12 Mar 2020
அரிய அப்டேட் என்னன்னா...

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு உங்களுக்கு தரப் போகும் அரிய அப்டேட் என்னன்னா... மேட்ச் எப்போ ஆரம்பிக்கும் என்பது யாருக்குமே தெரியாது என்பதுதான். மழை நின்றுவிட்டது; பணியாளர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், போட்டி குறித்த அப்டேட் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

14:25 (IST)12 Mar 2020
போட்டி நடைபெறுமா?

மீண்டும் மழை களத்தை ஆக்கிரமித்துக் கொண்டாலும், மேகங்கள் மெல்ல மெல்ல விலகுவதை காண முடிகிறது. ஆனால், போட்டி நடைபெறுமா?

13:56 (IST)12 Mar 2020
மழை ஓய்ந்தது

மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. ஆனால், போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

13:03 (IST)12 Mar 2020
டாஸ் நேரம் ஒத்திவைப்பு

ஈரப்பதமான அவுட் ஃபீல்டு காரணமாக டாஸ் போடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கள ஆய்வு மதியம் 1:15 மணிக்கு நடைபெறும்.

12:54 (IST)12 Mar 2020
வணக்கம், நமஷ்கார், நமஸ்தே

லொக்கு...லொக்கு... என்ற இருமலுடன் இந்தியா VS தென்னாப்பிரிக்க முதல் ஒருநாள் போட்டிக்கு உங்களை வரவேற்கிறோம். கொரோனா பீதியில் சற்று சைடு வாங்கி உங்களுக்கு லைவ் அப்டேட்ஸ் வழங்க காத்திருக்கிறோம். 

லைவ் மேட்சுல யாராச்சும் இருந்தீங்கனா, கைக் கொடுத்து பேசிடாதீங்கோ!!! வணக்கம், நமஷ்கார், நமஸ்தே தான்....

Web Title:Ind vs sa 1st odi live updates live score card176154

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X