இந்தியாவுக்கு எதிரான 'பிளான் B' என்ன? கட்டாய வெற்றி நோக்கி தென்னாப்பிரிக்கா!

IND vs SA World Cup Match 2019

ஒவ்வொரு உலகக் கோப்பைத் தொடரிலும் அரையிறுதிக்கு முன்புவரை Flawless அணியாக மிரட்டலுடன் உலா வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இம்முறை வளம் குறைந்து தோல்விகளுடன் வலம் வருகிறது. இங்கிலாந்துடனான முதல் போட்டியில் ஸ்ட்ரெய்ட் தோல்வியை சந்தித்த தென்.ஆ., வங்கதேசத்திற்கு எதிராக Unlucky Factor-ல் தோல்வி அடைந்தது. ஸ்டெய்ன், லுங்கி ங்கிடி காயம் போன்றவை அந்த ‘அன் லக்’ ஃபேக்டரில் அடங்கும். ஆனால், முதல் இரண்டு போட்டியிலும் ‘பிளான் A’ Implement செய்தும் தோற்ற தென்.ஆ., நாளை(ஜூன்.5) ‘பிளான் B’ கொண்டு இந்தியாவை அட்டாக் செய்ய காத்திருக்கிறது.

இதனை நாங்கள் சொல்லவில்லை, தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் சொல்லி இருக்கிறார்.

யெஸ்.. நாளை இந்தியா தனது முதல் 2019 உலகக் கோப்பை ஆட்டத்தில் களம் காணுகிறது.

மேலும் படிக்க – CWC 2019: ‘கேப்டன் கோலிக்கு தோனி திருப்பி செலுத்த வேண்டிய கடமை இது’ – சடகோபன் ரமேஷ் #IETAMIL Exclusive

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் டாப் ஆர்டர் வலிமையாக இருந்தாலும், ஃபார்மில் இருக்கிறார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. மிடில் ஆர்டர் வலு குறைந்தே உள்ளது என்பது வல்லுனர்களின் கணிப்பு. நம்பர்.4 ஸ்லாட்டில் லோகேஷ் ராகுலை களமிறக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. லோ மிடில் ஆர்டரில் தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா பலம் சேர்க்கின்றனர்.

ஆனால், நாளை ஆட்டம் நடைபெறுவது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் பிட்சில். பெயரில் இருக்கும் ரோஸ் பேட்ஸ்மேன்களுக்கு ஃபேவராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிட்சில் லேசான புற்கள் தெரிய, பிளாட் டிராக் வெள்ளை நிறத்தில் மிளிர்கிறது. ஸோ, நிறைய ரன்களை நாளை எதிர்பார்க்கலாம்.

அதேசமயம், ஆட்டம் தொடங்கும் நேரத்தில் லேசாக சாரல் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் மேகமூட்டமான வானிலையே நிலவும் என சவுத்தாம்ப்டன் வானிலை மையம் விவரிக்கிறது.

எல்லாம் சரி… பிளான் பி என்னனு தானே கேட்குறீங்க?

வேறென்ன-வா இருக்க முடியும்? ‘இந்திய ஓப்பனர்ஸ் + கோலி’…. அதாவது இந்தியாவின் நம்பர்.1, நம்பர்.2, நம்பர்.3 ஆகிய ஸ்லாட்களை விரைவில் வீழ்த்திவிட்டால், இந்தியாவை 230க்குள் Restrict செய்துவிடலாம் என்பது தானே!!

போங்க பாஸு…!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close