India vs South Africa, World Cup 2019: வெற்றியுடன் துவக்கிய விராட் கோலி படை : இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ஹைலைட்ஸ்

India vs South Africa, World Cup 2019: உலககோப்பை கிரிக்கெட் தொடரை, இந்தியா வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்தியா, தனது முதல்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றுள்ளது.

By: Jun 6, 2019, 9:25:39 AM

World Cup 2019, India vs South Africa (Ind vs SA) Cricket Score: உலககோப்பை கிரிக்கெட் தொடரை, இந்தியா வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்தியா, தனது முதல்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி, இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் தோல்வியே அடைந்துள்ளது.

மேலும் படிக்க – IND vs SA Match Preview: ‘விராட் கோலி தான் டீமை காப்பாற்றணும்’ – சடகோபன் ரமேஷ்! #IETAMIL Exclusive

IE Tamil commentary

ICC Cricket World Cup, 2019The Rose Bowl, Southampton 09 August 2020

South Africa 227/9 (50.0)

vs

India 230/4 (47.3)

Match Ended ( Day - Match 8 ) India beat South Africa by 6 wickets

Live Blog
21:04 (IST)05 Jun 2019
ரோஹித் 50

வார்ம் அப் மேட்சுல சொதப்பினாலும், உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் ரோஹித் ஷர்மா. விராட் கோலி 18 ரன்களில் பெலுக்வாயோ பந்தில் கேட்ச் ஆனார்.

19:56 (IST)05 Jun 2019

வழக்கம் போல் பார்மில் இல்லாத ஷிகர் தவான் 8 ரன்களில் ரபாடா ஓவரில் கீப்பர் கேட்சாகி வெளியேறினார்.

தல.. ஐபிஎல் முடிஞ்சு போச்சு.... இது வேர்ல்டு கப்!!

19:18 (IST)05 Jun 2019
களத்தில் இந்தியா...

தென்.ஆ., நிர்ணயித்துள்ள 228 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

ரோஹித், தவான் களத்தில்...

18:43 (IST)05 Jun 2019
க்றிஸ் மோரிஸ் அவுட்

தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. லோ மிடில் ஆர்டர் தாண்டி ஃபெலுக்வாயோ, க்றிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா ஆகியோரின் அபாரமான பங்களிப்பால் 200 ரன்களைக் கடந்தது தென்.ஆ

18:29 (IST)05 Jun 2019
எட்டாவது விக்கெட்டுக்கு 50

க்றிஸ் மோரிஸ் - ரபாடா ஜோடி 8வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்து, தென்னாப்பிரிக்கா 200 ரன்களை கடக்க உதவியுள்ளது.

18:10 (IST)05 Jun 2019
அப்டி, இப்டி-ன்னு 200 நெருங்கியாச்சே!!

சவுத்தாம்ப்டன் விக்கெட் ஸ்பின்னுக்கு நல்லாவே சப்போர்ட் பண்ணுது.. ஸோ, தென்னாப்பிரிக்கா எப்படியாச்சும் தட்டித் தடவி 230 ரன் அடிச்சால் கூட, கண்டிப்பா அது நல்ல ஸ்கோர் தான். 

18:05 (IST)05 Jun 2019
என்ன பவுலிங் டா இது!
17:55 (IST)05 Jun 2019
அதுவும் போச்சா...

61 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த ஆன்டிலே ஃபெலுக்வாயோ, சாஹல் ஓவரில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட, தென்னாப்பிரிக்காவின் லாஸ்ட் ஹோப் அவ்ளோ தானோ?

17:50 (IST)05 Jun 2019
தென்னாப்பிரிக்காவின் முதல் சிக்ஸ்...

தென்னாப்பிரிக்க அணி, இந்தப் போட்டியில் தனது முதல் சிக்ஸரை பதிவு செய்தது. குல்தீப் ஓவரில் 38.2வது பந்தில் ஃபெலுக்வாயோ இந்த அரிய சாதனையை நிகழ்த்தினார்.

17:43 (IST)05 Jun 2019
பை பை டேவிட் மில்லர்

ஓரளவுக்கு சிறப்பாக ஆடி வந்த டேவிட் மில்லர் சாஹல் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 31 ரன்களில் வெளியேறினார். 6வது விக்கெட்டை இழந்தது தென்.ஆ., 

அடப் போங்கய்யா!!

17:30 (IST)05 Jun 2019
தென்னாப்பிரிக்காவுக்கு இன்று அழகான நாள் இல்லை - ஸ்மித்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் அளித்துள்ள பேட்டியில், 'இந்தியாவுக்கு எதிரான இந்த மேட்ச் பார்க்கும் போது, இந்நாள் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு அழகானதாக இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

17:25 (IST)05 Jun 2019
மில்லரை சுற்றும் ஏக்க கண்கள்...

உண்மையில் டேவிட் மில்லருக்கு ஒரு அபாரமான வாய்ப்பு இது எனலாம். 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடும் இந்த நிலையில், அவர் சிறப்பாக ஆடினால், அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் அவருக்கு நிலையான இடத்தைக் கொடுக்கும். 

17:15 (IST)05 Jun 2019
யாரு அது... நம்ம ரோஹித்தா?

என்ன ரோஹித் ஷர்மா.. டைனோசர் குட்டி மாதிரி நடந்துக்கிட்டு இருக்கீங்க?

When your team makes a blistering start to #CWC19! pic.twitter.com/jtTSAdissC

— Cricket World Cup (@cricketworldcup) 5 June 2019

17:10 (IST)05 Jun 2019
118/5

29 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 118/5

16:57 (IST)05 Jun 2019
INDvSA : வீழ்ச்சியை நோக்கி தென்.ஆ

தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், டேவிட் மில்லர், ஆன்டிலே ஃபெலுக்வாயோ களத்தில் உள்ளனர். #INDvSA ஆட்டத்தின் தொடக்கம் இப்படி ஆகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

ஆண்டவா... இந்த புள்ளைங்களுக்கு நல்ல வழியா காட்டுப்பா!!

16:53 (IST)05 Jun 2019
அடடா... என்ன ஒரு பவுலிங்

தென்னாப்பிரிக்க அணி 100 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஏறக்குறைய காலி எனும் நிலையில் உள்ளது. நல்ல பேட்டிங் Surface என்பதால் தான், தென்.ஆ., பேட்டிங் தேர்வு செய்தது... ஆனால், எல்லாம் தலைகீழாகிவிட்டது.

உண்மையிலேயே இந்தியா நல்லா போடுதா, இல்லா அவிங்க தப்பா பிட்சை Predict பண்ணிட்டாய்ங்களா??

16:46 (IST)05 Jun 2019
மற்றொரு ஒன் சைட் கேம்... டுமினி அவுட்

ஜீன்-பால் டுமினியை, குல்தீப் யாதவ் 3 ரன்களில் எல்பிடபிள்யூ செய்ய, தென்னாப்பிரிக்கா 5வது விக்கெட்டை இழந்தது.

16:41 (IST)05 Jun 2019
டு பிளசிஸ் போல்ட்

19.6வது ஓவரில் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ், #Chahal ஓவரில் போல்டாக, 38 ரன்களில் அவர் வெளியேறினார். ஸோ, நாம சொன்ன மாதிரி இந்தியா தனது இரண்டாவது ஆபத்தையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

16:32 (IST)05 Jun 2019
இதோ வந்துட்டேன் - சாஹல்

50 பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வந்த டு பிளசிஸ் - வான்டர் டூசன் பார்ட்னர்ஷிப்பை காலி செய்தார் சாஹல். 22 ரன்களில் டூசன் போல்ட்.

அப்புறம் என்ன... இனி வரிசையை காலி பண்ணுங்க...

16:23 (IST)05 Jun 2019
இங்க கருணைக்கு வேலை இல்லை - வீரேந்திர சேவாக்
16:13 (IST)05 Jun 2019
IND vs SA Live: டி வில்லியர்ஸ் நம்பர் இருக்கா?

தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு எதிராக தடுமாற்றத்துடன் ஆடி வரும் நிலையில், ரசிகர் ஒருவர், ட்விட்டரில் முன்னாள் தென்னாப்பிரிக்க ஓப்பனர் கிப்ஸ்-ஐ டேக் செய்து, டி வில்லியர்சை உடனடியாக அணிக்கு திரும்பச் சொல்லுங்கள் என்று பதிவிட, 'அவர் நம்பர் என்னிடம் இல்லை' என்று ரிப்ளை கொடுத்திருகிறார் கிப்ஸ்...

ஓப்பனர்-ல... அதான் இப்படி டக் டக்குன்னு அடிக்குறாப்ள

16:04 (IST)05 Jun 2019
அவன் வருவான்... தெற்கில் இருந்து நிச்சயம் வருவான்...
16:02 (IST)05 Jun 2019
சவுத் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்ஸ் என்ன பேசிக்குவாங்க இப்போ?

வான் டர் டூசன் - அண்ணே, கை கிறு கிறு-ங்குது... ஒரு ஃபோர் அடிச்ச்க்கிட்டுமா?

டு பிளசிஸ் - இந்த அக்கப்போர் கேள்வியெல்லாம் என்ட்ட கேட்கக் கூடாது... இருக்குற இடமே தெரியாத மாதிரி ஆடு. ரெண்டு பெரிய தலைங்களையே சாச்சிப்புட்டாய்ங்க!!

15:55 (IST)05 Jun 2019
இந்தியாவின் அடுத்த இலக்கு யார்?

வேற யாரு நம்ம டு பிளசிஸ் அண்ணன் தான்... இந்தியாவுக்கு எதிரா எப்போதும் கன்சிஸ்டன்ட்டா அடிக்கக் கூடிய பிளேயர். அவரை 40 ரன்களுக்கு மேல் நிற்க விடக் கூடாது. நின்னுட்டாப்ள-னா செஞ்சுரி கன்ஃபார்ம்!!!

15:44 (IST)05 Jun 2019
முதல் ஸ்லாட் ஓவர்...

இந்தியா இப்போட்டியில் ஜெயிக்க வேண்டுமெனில் மூன்று அபாய கட்டங்களை தாண்ட வேண்டும் என்று நாம் தெரிவித்து இருந்தோம்... அதில், முதல் கட்டம் டி காக்-ஐ விரைவில் அவுட் செய்வது.... செஞ்சாச்சு... சிறப்பா செஞ்சாச்சு!!

15:37 (IST)05 Jun 2019
பிரதமர் மோடி வாழ்த்து
15:33 (IST)05 Jun 2019
டி காக் சார் எங்க போறீங்க?

என்னய்யா இப்படியாச்சு!! ஆம்லாவை தொடர்ந்து, மற்றொரு ஓப்பனர் டி காக், பும்ரா ஓவரில் தேர்ட் ஸ்லிப்பில் நின்றுக் கொண்டிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

சவுத் ஆப்ரிக்கா ஓப்பனர்ஸ் காலி....

15:24 (IST)05 Jun 2019
கமான் புவி

எங்க புவனேஷ் குமார் பத்தி என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? அவரும் இப்போ விக்கெட் எடுப்பார் பாரு... தல போனா போகுது.. ஒரு விக்கெட்டை எடுத்து போடு தல....

15:18 (IST)05 Jun 2019
ஆம்லா ஆவுட்

ரொம்ப நாளாகவே ஃபார்மில் இல்லாத ஹஷிம் ஆம்லா, ஜஸ்ப்ரித் பும்ரா ஓவரில், செகண்ட் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மவனே யாருக்கிட்ட!!

15:10 (IST)05 Jun 2019
நிதானம் காட்டும் தென்னாப்பிரிக்கா

தென்.ஆ., தொடக்க வீரர்களாக டி காக், ஹஷிம் ஆம்லா களமிறங்கியுள்ளனர். பந்து நன்றாக ஸ்விங் ஆவதால், பேட்ஸ்மேன்கள் மிக கவனமாக பந்துகளை எதிர்கொள்கின்றனர்.

இருக்காதா பின்ன...!

14:59 (IST)05 Jun 2019
ஏன் ஷமி தேர்வு செய்யப்படவில்லை?

போட்டி நடக்கும் சவுத்தாம்ப்டன் வானிலை தற்போது மேக மூட்டங்களை திரட்டிக் கொண்டு நிற்கிறது. ஆகையால், ஃபேஸர்களுக்கு ஸ்விங் கைக் கொடுக்க வாய்ப்புள்ளது. அதே போன்று, ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் சாஹல் - குல்தீப்க்கும் டிராக் கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ரெண்டு ஸ்பின்னர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆகையால், ஷமி உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

அதானடா!!? அதே தான்!!

14:53 (IST)05 Jun 2019
இந்தியாவுக்கான 3 சவால்...

டி காக்

டு பிளசிஸ்

40 -50 ஓவர்ஸ் பவுலிங்

மேற் சொன்ன மூன்று விஷயங்கள் தான் நமக்கான மிகப்பெரிய சவால். டி காக் அபாரமான பார்மில் இருக்கிறார். அவரை ஆரம்பத்திலேயே தூக்கணும். டு பிளசிஸ், இந்தியாவுக்கு எதிரா எப்போதும் கன்சிஸ்டன்ட்டா அடிக்கக் கூடிய பிளேயர். அவரை 40 ரன்களுக்கு மேல் நிற்க விடக் கூடாது. கடைசி 40 - 50 ஓவர்களில் அதிக ரன்களை லீக் செய்வதை தவிர்க்க வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியம்.

14:47 (IST)05 Jun 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே... வாங்கண்ணே... ஐபிஎல்-ல கடைசியா உங்களை பார்த்தது... இப்படி இருக்கீக..? சரி, இன்னைக்கு மேட்சுல யார் ஜெயிக்கப் போறா?

கண்ணாயிரம் - ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய மேட்சுல, நாம டாஸ் வின் பண்ணி ஃபர்ஸ்ட் பேட்டிங் பிடிச்சி இருந்தா நல்லா இருந்திருக்கும். பட், நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலா... 300  - 310 அடிக்க விட்டா ஜெயிக்கலாம். 330+ போனா நமக்கு தோல்வி கன்ஃபார்ம்

14:40 (IST)05 Jun 2019
இந்தியா பிளேயிங் XI

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(c), லோகேஷ் ராகுல், எம் எஸ் தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா

14:38 (IST)05 Jun 2019
தென்னாப்பிரிக்கா பிளேயிங் XI

குயிண்டன் டி காக்(w), ஹசிம் ஆம்லா, பாப் டு பிளசிஸ்(c), வான் டெர் டூசன், டேவிட் மில்லர், ஜீன்-பால் டுமினி, ஆந்திலே ஃபெலுக்வாயோ, க்றிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாகிர், தப்ரைஸ் ஷம்சி

14:34 (IST)05 Jun 2019
தென்னாப்பிரிக்கா பேட்டிங்

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அய்யய்யோ ஆரம்பமே டர்ர்ர்ர் ஆகுதே!!

14:25 (IST)05 Jun 2019
மேகம் கருக்குது....
14:22 (IST)05 Jun 2019
ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

இப்போது நல்ல வெளிச்சமான பகல் நிலவுகிறது. இந்தியாவுக்கு சாதகமான சூழல் இருப்பதால், நிச்சயம் டாஸ் வென்றால் பேட்டிங் தான்.

14:16 (IST)05 Jun 2019
அணியில் புவனேஷ் குமார்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய ஃபேஸ் பவுலிங் லைன் அப்பில் புவனேஷ் குமார் ஆடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

14:14 (IST)05 Jun 2019
மழை பெய்ய வாய்ப்பிருக்கா?

சவுத்தம்ப்டனில் ஒரு வாய் சோறு திங்கும் போது வெயில் அடிக்குது, அடுத்த வாய் சோறு திங்கும் போது இருட்டிக்கிட்டு நிக்குது. ஆக, மொத்தம் இன்னைக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிடுறதுக்குள்ள எல்லோரும் ஒரு வழி ஆகப் போறது உறுதி!

14:11 (IST)05 Jun 2019
வெல்கம் உலகக் கோப்பை ரசிகர்களே!!

உலகக் கோப்பைக்கு ரசிகர்களை வரவேற்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.... இன்று சவுத்தாம்ப்டன் நகரில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை எதிர்த்து ஆடவிருக்கிறது..... 'யோவ், யோவ்.. நிறுத்து நிறுத்து. என்ன நியூஸ் படிச்சிக்கிட்டு இருக்க? இந்தியா ஜெயிக்குமா, ஜெயிக்காத? அதை மட்டும் சொல்லு..

ஒரு ஃப்ளோவா போக விடுறானுங்களா பாருங்க!!!

Web Title:Ind vs sa predicted playing 11 live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X