உலகக் கோப்பை 2019 தொடரில் நாளை (ஜூன்.5) இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய அணியின் முதல் போட்டி இதுவாகும். இப்போட்டியில் இரண்டு அணிகளின் சாதக, பாதகம், வெற்றி வாய்ப்பு, கள நிலவரம், பிளேயிங் XI, வானிலை யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது? உள்ளிட்ட பல அம்சங்களுடன் போட்டி குறித்த Preview-ஐ நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்திற்கு பிரத்யேகமாக வழங்குகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்.
இனி Preview அவரின் வார்த்தைகளாக,
உலகக் கோப்பையில நாளைக்கு ஒரு அருமையான மேட்ச் காத்திருக்கு...
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மேட்ச் நடக்குற ஸ்டேடியம் சவுத்தாம்ப்டன்-ல உள்ள ரோஸ் பவுல் வென்யு. எனக்கு தெரிஞ்ச வரை அது நல்ல பேட்டிங் டிராக். இப்போ வரை அது பேட்டிங் டிராக்கா தான் இருக்கு. ஸோ, ரெண்டு டீமும் நாளைக்கு Definite-ah நல்லா ரன்ஸ் அடிப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்.
ஒருவேளை விராட் கோலி டாஸ் வின் பண்ணாருன்னா, கண்டிப்பா இப்போ உள்ள சூழ்நிலைக்கு பேட்டிங் தான் சூஸ் பண்ணுவாரு. Because, இந்த சீரிஸ்-ல சேஸிங் பண்ண டீம்ஸ் ரொம்ப சிரமப்படுறாங்க. அதை நாம கண்கூடா பார்த்தோம். ஸோ, விராட் பேட்டிங் தான் போவாரு. அப்படி இந்தியா பேட் பன்னுச்சுன்னா... தென்னாப்பிரிக்காவுக்கு அது பெரிய மைன்ஸ்.
நேத்து(ஜூன் 3) கூட சவுத்தாம்ப்டன்-ல பிளேயர்ஸ் பிராக்டீஸ் பண்ணப்ப மழை பெய்தது. ஆனா அதுனால கிரவுண்டுல நாளைக்கு எந்த Impact-um இருக்காது. ஏன்னா, அவங்கள்ட்ட அவ்ளோ அற்புதமான Covers இருக்கு, Drainage Facility-லாம் நல்லா இருக்கும். ஸோ. பிட்ச் பக்காவா ரெடியாகி இருக்கும்.
பட், நாளைக்கும் மழை பெய்துச்சுன்னா, அப்போ நிச்சயம் பாதிப்பு இருக்கும்.
ஸோ, அந்த Situation-க்கு ஏற்ற மாதிரி தான் கேப்டன் கோலி டீம் செலக்ட் பண்ணுவாரு. ஒருவேளை இப்போ உள்ள அதே பேட்டிங் Support சூழ்நிலை நாளையும் இருந்துச்சுன்னா. விராட் நிச்சயம் ரெண்டு ஸ்பின்னர்ஸ் வச்சு ஆடுவாரு. ஏன்னா, சவுத் ஆப்ரிக்கா ஸ்பின்னர்ஸுக்கு எதிரா தடுமாறுவாங்க. அது நமக்கு அட்வான்டேஜ்.
பட், நாளைக்கு லேசா மழை பேஞ்சாலோ, இல்ல காற்று அதிகமா வீசினாலோ அது சவுத் ஆப்ரிக்கா ஃபேசர்ஸ்-க்கு சாதகமாக அமையவும் வாய்ப்பிருக்கு. நம்மகிட்டயும் நல்ல ஃபேஸர்ஸ் இருக்குறாங்க என்பதையும் நாம மறந்துடக் கூடாது.
அப்படி நாளைக்கு மழை பேஞ்சா, கிரவுண்டுல ஈரப்பதம் இருக்கும். ஸோ, பந்தும் ஈரப்பதமா இருக்கும். அதுனால பந்து டர்ன் ஆகாது. அப்போ கோலி பவுலர்ஸ கம்மி பண்ணிட்டு, பேட்ஸ்மேன்ஸ் அதிகம் எடுப்பாரு. நல்லா காற்று வீசினாலும் பவுலர்ஸ குறைச்சிட்டு இன்னும் எக்ஸ்டிரா ஒரு ஆல் ரவுண்டருக்கு போவாரு-னு எதிர்பார்க்கலாம்.
கேதர் ஜாதவ் ஃபிட்டா இருக்கப் போறாரா-ங்கறது ஒரு கேள்வி. நேற்று பிராக்டீஸ் ஆரம்பிச்சுட்டார். அவர் ஃபிட்டா இருக்கும் பட்சத்தில் கண்டிப்பா கோலி அவரை செலக்ட் பண்ண சாதகமான வாய்ப்பிருக்கு. அதுக்கு காரணம், ஆல்ரவுண்டர் என்கிற பட்டியலை நீட்டிக்கலாம்-ங்கற எண்ணம் தான். ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ்-னு போகலாம். அப்படி இல்லன்னா, ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர்-னு போலாம்.
அதேமாதிரி ரவீந்திர ஜடேஜா-வை கம்பேர் பண்றப்போ, கேதர் ஜாதவ்ட்ட போலாம் என்பது என்னோட கருத்து. ஏன்னா, கேதரும் ஸ்பின் பவுல் பண்ணக் கூடிய எபிலிட்டி உள்ள பிளேயர். சில மேட்சுகள்ல நல்லா பவுலிங் பண்ணிருக்காரு. அதைத் தாண்டி, ஜடேஜாவை விட பெட்டர் பேட்ஸ்மேன் அவர். கடைசி 5 ஓவர் கிடைச்சதுன்னா ஜடேஜாவை விட நல்லா அதிரடியா ஆடக் கூடிய பேட்ஸ்மேனும் கூட.
என்னைப் பொறுத்தவரை, இப்போ உள்ள நிலைமையில, சவுத்தாம்ப்டன் நல்ல பேட்டிங் டிராக்கா இருக்குறதால 2 ஸ்பின், 2 ஃபாஸ்ட்-டோட இந்தியா விளையாட வாய்ப்பிருக்கு.
அதேமாதிரி நம்பர் 4 ரொம்ப Crucial-ah இருக்கு. லோகேஷ் ராகுலுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கும்-னு நினைக்குறேன். ஏன்னா, ஆல்ரெடி வார்ம் அப் மேட்சுல ஒரு செஞ்சுரி அடிச்சிருகாரு. ஸோ, அவரை அந்த இடத்துல ஆட வைக்கவே அதிகம் வாய்ப்பிருக்கு.
இந்த காயம் இருக்கே... பெரிய டோர்னமென்ட்ல கரெக்ட்டா வந்து கஷ்டப்படுத்தும். இப்போ அதுல சிக்கியிருப்பது சவுத் ஆப்ரிக்கா தான். காயம் காரணமா ஸ்டெய்ன் உலகக் கோப்பையை விட்டே வெளியேறி இருப்பது, இந்தியாவுக்கு மிகப்பெரிய பாஸிட்டிவ். ஏன்னா, ஏசியன் கண்டிஷன் பேட்ஸ்மேன்களுக்கு எப்படி போடணும்-னு நல்லா தெரிஞ்ச பவுலர் அவர். நம்ம இந்தியன் பிளேயர்ஸ் கூட நிறைய ஆடியிருக்கார். ஸோ, அவருக்கு நம்மளோட பாஸிட்டிவ், நெகட்டிவ் நல்லாவே தெரியும். பட், இப்போ தென்னாப்பிரிக்கா அந்த வாய்ப்பை பெரிசா மிஸ் பண்றாங்க. லுங்கி ங்கிடியும் காயத்துல கஷடப்படுறார், ஆம்லாவுக்கும் காயம் இருக்கு.
சவுத் ஆப்ரிக்கா பவுலர்ஸின் இவ்ளோ நெகட்டிவ்வையும் மீறி, வானிலை காரணமா நாளை பந்து பயங்கரமா ஸ்விங் ஆச்சுனா, அப்புறம் விராட் கோலி தான் நம்மை காப்பாத்தணும். விராட் கோலி இந்த டோர்னமென்ட்-ல எந்தளவுக்கு செயல்படப் போறாரு-ங்கறதுல தான் நம்ம தலையெழுத்தே இருக்கு. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
இன்னொரு விஷயத்தையும் நாம் மறந்துடக் கூடாது. சவுத் ஆப்ரிக்கா ஏற்கனவே இரண்டு மேட்ச் விளையாடி தோற்று இருந்தாலும், அவங்களோட வீக்னெஸ் என்னன்னு நல்லா தெரிஞ்சு அதுல அதிக Concentrate செலுத்தி நாளைக்கு ஆடுவாங்க. ஆனா, இந்தியா நாளைக்கு தான் முதல் மேட்சே ஆடப் போகுது. யார் ஒர்க் அவுட் ஆகப் போறா?, டீம்-ல என்ன பிரச்சனை இருக்கு-ங்றதே கோலிக்கு நாளைக்கு தான் தெரிய வரும்.
ஸோ, இந்தியாவுக்கு இந்த இடத்துல ஒரு ஆபத்து இருக்கு. அதேசமயம், ரெண்டு மேட்ச் தோற்றுப் போன சவுத் ஆப்ரிக்கா, நாளைக்கு நிச்சயம் ஜெயிச்சாக வேண்டிய பிரஷர்-ல இருக்காங்க. ஜெயிக்காம போனா எலிமினேஷன்-ல ஒரு ஸ்ட்ராங் டீமா ஆயிடுவாங்க. ஸோ, அந்த பிரஷரோட தான் அவங்களும் ஆடுவாங்க. அந்த பிரஷரை இந்தியா தனக்கு சாதகமா பயன்படுத்தவும் நல்ல சான்ஸ் இருக்கு.
அதனால தான் சொல்றேன், நாளைக்கு ஒரு Highly Competitive Match-க்கு வாய்ப்பு இருக்குன்னு.
டீம் லெவன் வாய்ப்பு,
நாளைக்கு மழை பேஞ்சா,
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, லோகேஷ் ராகுல், எம் எஸ் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், புவனேஷ் குமார், முகமது ஷமி, பும்ரா
மழை பெய்யாம இதே பேட்டிங் டிராக்கா இருந்தா,
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, லோகேஷ் ராகுல், எம் எஸ் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், குல்தீப் யடஹவ், முகமது ஷமி, பும்ரா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.