இந்தியா vs இலங்கை: 34 வருடங்களில் இந்தியாவின் மோசமான ஆட்டம்!

இந்தியா vs இலங்கை Live Updates: எப்போதாவது எட்ஜ் ஆனா பரவால, எப்போதுமே எட்ஜ் ஆனா என்ன செய்ய!!

தரம்சாலாவில் இந்திய, இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று காலை தொடங்கியது. இலங்கை கேப்டன் திசாரா ஃபெரேரா டாஸ் வென்று, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். விராட் கோலி ஓய்வில் இருப்பதால், ரோஹித் ஷர்மா பொறுப்பு கேப்டனாக செயல்படுகிறார்.

இதைத் தொடர்ந்து தவான், ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே, இலங்கை வீரர்கள் துல்லியமான லைன் அன்ட் லென்த்தில் பந்து வீசினர். இதனால், பந்தை தொடுவதற்கே இருவரும் சிரமப்பட்டனர். குறிப்பாக, லக்மல், மேத்யூஸ் பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. தவான் 0 ரன்னிலும், ரோஹித் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.

தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 0 ரன்னிலும், மனீஷ் பாண்டே 2 ரன்னிலும் வெளியேறினர். அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 27 பந்துகள் தாக்குப்பிடித்து 9 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 10 ரன்னில் அவுட்டாக இந்திய அணி மிகவும் குறைவான ஒருநாள் ஸ்கோரை வரலாற்றில் பதிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணி மிகவும் குறைந்த ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையை படைத்துள்ளது. முன்னதாக, 1983-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 17 ரன்களுக்கு இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. தற்போது 16 விக்கெட்டுகளுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

Lowest scores at the fall of 5th wicket for India:
16 v SL, Dharamsala, 2017 *
17 v Zim, Turnbridge Wells, 1983
27 v WI, Toronto, 1999
27 v Aus, Guwahati, 2009

இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

எப்போதாவது எட்ஜ் ஆனா பரவால, எப்போதுமே எட்ஜ் ஆனா என்ன செய்ய!!

லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close