India vs Sri Lanka World Cup 2019 Score: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூலை.6) லீட்ஸ் நகரின் ஹெட்டிங்லே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டிமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.
இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, ரோஹித் மற்றும் லோகேஷ் ராகுலின் அபார சதத்தால் 43.3வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிப் பெற்றது. இதனால், புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
Live Blog
World Cup 2019: India vs Sri Lanka Score, IND vs SL 2019 Updates, London, Lord's - இந்தியா வெற்றி
ஏற்கனவே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், கடைசிப் போட்டியிலாவது வெற்றிப் பெற்று கௌரவமாக நாடு திரும்ப நினைத்து, நினைத்ததோடு மட்டுமில்லாமல், கடுமையாக போராடவும் செய்த இலங்கை, இந்தியாவின் பேட்டிங் ஆர்டரை குலைக்க முடியாமல், 9 போட்டிகளில் 4ல் தோற்று வெளியேறியது.
இந்த உலகக் கோப்பையில் லோகேஷ் ராகுல் தனது முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் அரைசதம் அடித்ததில் இருந்து சதம் அடிப்பதற்குள் நாக்குத் தள்ளிப் போனது என்னவோ ரசிகர்களுக்கு தான். எனினும், இந்த சதம் லோகேஷ் ராகுலுக்கு நிச்சயம் ஒரு மெகா பூஸ்ட் என்பதில் சந்தேகமில்லை.
KL Rahul joins the party, brings up his 2nd ODI 💯, first of this #CWC19
Keep going, lads 👏👏 pic.twitter.com/IoQBu0KT3G
— BCCI (@BCCI) 6 July 2019
எல்லாம் காலம் போன பிறகு தான் சுதாரிப்பார்கள் போல... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்கா, 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டு பிளசிஸ் சதம் விளாசியுள்ளார்.
களம் எவ்வளவு எளிதாக இருந்தாலும், எதிரணி பவுலிங் எவ்வளவு வீக்காக இருந்தாலும், எனது ரன்களுக்கும், சந்திக்கும் பந்துகளுக்கு இடையேயான வித்தியாசம் 20 - 25 ரன்கள் இருந்தே தீரும் என கற்பூரத்தில் சத்தியம் செய்து ஆடி வருகிறார் லோகேஷ் ராகுல்.
இந்தியா 22 ஓவர்கள் முடிவில் 120-2
பெரேராவின் 19.4வது பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம், இந்த உலகக் கோப்பைத் தொடரில், அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் முதலிடம் பிடித்திருக்கிறார். முன்னதாக, வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 606 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரோஹித் அதனை கடந்திருக்கிறார்.
சச்சினின் 673 ரன்கள் சாதனையை முறியடிப்பாரா?
ரோஹித் - ராகுல் இணை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்து அசத்தியுள்ளது. லோகேஷ் ராகுல் தனது ஸ்டிரைக் ரேட்டை குறைத்துக் கொண்டாலும், ரோஹித் அதிரடியாக ஆடி வருகிறார். 18.1வது ஓவரில், 100 ரன்களை எட்டியது இந்தியா. இத்தொடரில், ரோஹித் - ராகுல் ஜோடியின் மூன்றாவது 100 பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, தனஞ்செயா டி சில்வா ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசி, அரைசதம் அடித்துள்ளார். பெவிலியனில், ரோஹித்தின் மனைவி குழந்தையுடன் அந்த அரைசதத்தை கொண்டாட, ஒரே பீலிங் தான்...
Rohit Sharma brings up a half-century in style - with a six 6️⃣
It's the sixth time he's passed fifty at #CWC19
On four of the previous five occasions, he's gone onto three figures 👀
Will he do so again today?#CWC19 | #SLvIND pic.twitter.com/2yKtI6OGGi
— Cricket World Cup (@cricketworldcup) 6 July 2019
6,7,8 ஆகிய இந்த மூன்று ஓவரிலும் மொத்தமாக இந்திய அணி 4 ரன்களே அடித்திருக்கிறது. இங்கு தான் இந்திய அணியின் ரன் ரேட் சரிந்தது. தவிர, மற்றொரு செய்தி, இந்த உலகக் கோப்பையில் அதிக மெய்டன் ஓவர்களை சந்தித்த வீரர் என்ற மோசமான பெருமையை லோகேஷ் ராகுல் பெற்றிருக்கிறார்.
இலங்கையுடனான போட்டியின் முடிவால், இந்திய அணிக்கோ.. ஏன் இலங்கை அணிக்கு கூட எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இப்போட்டியில் இந்தியா வென்று, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவிடம் தோற்றால், இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ஆஸி., இடம் இடத்திற்கு பின் தங்கும். இதனால், அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை சந்திப்பதை தவிர்க்க முடியும்.
55-4 என்ற மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்த இலங்கை, மேத்யூஸ் - திரிமன்னேவின் சிறப்பான பார்ட்னர்ஷிப் மற்றும் மேத்யூசின் சதம் ஆகியவற்றால், 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில், பும்ரா 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சதம் விளாசி ஆடிக் கொண்டிருந்த மேத்யூசை 113 ரன்களில் பும்ரா வெளியேற்ற, இறுதி ஓவரை வீசிய புவனேஷ், 2 ரன்களில் திசாரா பெரேராவை அவுட்டாக்கினார். ஹர்திக் பாண்ட்யாவின் அபாரமான கேட்சால், இந்த விக்கெட் சாத்தியமானது. பூஸ்ட் விளம்பரத்தில் சச்சின் ஓடி வந்து பிடிப்பாரே, 20 வருஷத்துக்கு முன்னாடி... அப்படித்தான்!!
இப்படியொரு கம் பேக் இலங்கை கொடுக்கும் என நிச்சயம் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. 54 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள். ஆனால், அதன்பிறகு 46 ஓவர்கள் முடிவில், இலங்கை 240/5. மேத்யூஸ் மற்றும் திரிமன்னேவின் அபார ஆட்டம், இலங்கையின் தன்னம்பிக்கையை காட்டியது. இந்தியாவின் ஸ்பின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பது போல, தொடரில் இருந்து வெளியேறி, உலகக் கோப்பையில் தங்களது கடைசி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கும் இலங்கை அணியின் மேத்யூஸ், சதம் அடித்திருக்கிறார்.
44 ஓவர்கள் முடிவில், இலங்கை 227-5
💯 for Angelo Mathews 👏
Sri Lanka were struggling at 55/4, and he's rescued them brilliantly 💪
WHAT. AN. INNINGS.#SLvIND | #CWC19 pic.twitter.com/aybqQrgrUq
— Cricket World Cup (@cricketworldcup) 6 July 2019
ஹர்திக் பாண்ட்யா வீசிய 41-வது ஓவரில், நான்காவது பந்து பவுன்ஸாக வர, அதனை மேத்யூஸ் அடிக்காமல் விட, பந்து தோனியின் கால்களுக்கு முன்பு பிட்ச் ஆகி, சற்று திசை மாறி பின்னே பவுண்டரிக்கு சென்றுவிட்டது.
தோனி, இப்படி மிஸ் செய்து பவுண்டரி செல்வதெல்லாம் அபூர்வம்.
அரைசதம் அடித்து இந்திய அணியை நச்சரித்து, எச்சரித்துக் கொண்டிருந்த திரிமன்னே, 53 ரன்களில் குல்தீப் யாதவ் ஓவரில், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஐந்தாவது விக்கெட்டை இழந்தது இலங்கை
500 ரூவாய்க்கு ஆடுனா இப்படித்தான்
Kuldeep strikes and breaks the partnership. Thirimanne departs.
Sri Lanka 179/5 after 37.5 overs pic.twitter.com/U0TXSPWG6v
— BCCI (@BCCI) 6 July 2019
திரிமன்னே - மேத்யூஸ் ஜோடி மிக முக்கியமான ஒன்று. அவர்கள் 20 - 25 ஓவர்கள் நின்றுவிட்டால், இலங்கை அதிகபட்சம் 270 ரன்கள் வரை அடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று, இலங்கை நான்காவது விக்கெட் இழந்த போது நாம் கூறினோம். நாம் சொன்ன பிறகு, 20 ஓவர்கள் தாண்டி இந்த பார்ட்னர்ஷிப் நின்றுவிட்டது. அதேபோல், இந்த கூட்டணி இணைந்து சதம் அடித்திருக்கிறது.
அப்போ நாம் சொன்ன 270 ஸ்கோர் வந்திடுமா?
இந்தியாவிடம் மட்டும் எப்போதும் அபாரமாக விளையாடும் மேத்யூஸ், இந்தியாவுக்கு எதிராக மற்றுமொரு அபாரமான இன்னிங்சை வெளிப்படுத்தி, அரைசதம் அடித்திருக்கிறார்.
ஏன்யா இப்படி!!?
A second fifty of #CWC19 for Angelo Mathews 👏
It's been a battling, valuable knock. Can he turn it into a big hundred?#SLvIND | #LionsRoar pic.twitter.com/FyasgbGpbE
— Cricket World Cup (@cricketworldcup) 6 July 2019
தனது முதல் ஸ்பெல்லில் 5 ஓவர்களை வீசிய புவனேஷ் குமார், விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 36 ரன்கள் கொடுத்திருந்தார். இப்போது, 32வது ஓவரில், தனது இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்திருக்கும் புவனேஷ், இப்போதாவது டீசன்ட் பவுலிங் கொடுப்பாரா? குறிப்பாக, விக்கெட் கிடைக்குமா?
கற்பனையே செய்து பார்த்திருக்க மாட்டார் இந்த மாயங்க் அகர்வால்... 2019 உலகக் கோப்பையில் நாம் பீல்டிங் செய்துக் கொண்டிருப்போம் என்று. விஜய் ஷங்கருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட மாயங்க் அகர்வாலுக்கு, இலங்கைக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மாற்று வீரராக தற்போது பீல்டிங் செய்துக் கொண்டிருக்கிறார்.
30 ஓவர்கள் முடிவில், இலங்கை 127 - 4
யாரு நாங்க சும்மாவா... தோனி காலத்தில் இருந்தே, இந்திய அணி என்றால் குஷியாகி பேட்டிங் செய்யும் திரிமன்னே, மேத்யூஸ் ஆகியோர், இப்போது கோலி காலம் என்றாலும் விரைந்து அவுட்டாகாமல், எப்போதும் போல ரசித்து, ருசித்து ஆடி வருகின்றனர்.
பார்ட்னர்ஷிப் 60 ரன்களைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.
சாருலதா எனும் 87 வயது பாட்டி, கடந்த போட்டியில் நேரில் வந்து பீப்பி வைத்து ஊதிக் கொண்டு, இந்திய அணியை உற்சாகப்படுத்தினார். இதனால், போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஆகியோர் அவரை மைதானத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அதேபோல், இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டியிலும், அந்த பாட்டிக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் கோலி.
Hello Charulata ji. #TeamIndia captain @imVkohli promised her tickets and our superfan is here with us is in Leeds.😊 #CWC19 pic.twitter.com/lKqbVllLjc
— BCCI (@BCCI) 6 July 2019
இந்தியா இன்று ஐந்து பவுலர்களைக் கொண்டு மட்டுமே களமிறங்கி இருக்கிறது.
பும்ரா, புவனேஸ்வர், பாண்ட்யா, குல்தீப், ஜடேஜா.
ஒவ்வொருவருக்கும் தலா 10 ஓவர்கள் என மொத்தம் 50 ஓவர்கள். இவர்களைத் தவிர வேறு யாருமே அணியில் பந்து வீசுபவர்கள் இல்லை. கோலி மட்டுமே அரிதாக வீசுவார். ஸோ, ஒரு பவுலருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறினால் கூட, யாரை பவுல் செய்ய வைப்பது? கேப்டன் கோலி எப்படி இதனை பேலன்ஸ் செய்வார்? இது லீக் போட்டி, இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது என்பதால், பிரச்சனையில்லை.
அரையிறுதியில் இதே போன்று விளையாடினால் என்ன ஆவது நிலைமை?
17.1 வது பந்தை குல்தீப் வீச, திரிமன்னே அதை ஆன் சைடில் அடித்துவிட்டு, பாதி தூரம் ஓடி வந்துவிட்டார். அதை பண்ட் டைவ் அடித்து தடுத்தாலும், பந்தை தவறவிட, ஒரு எளிதான ரன் அவுட் மிஸ்ஸானது. தோனி உடனே தனது அதிருப்தியை களத்தில் வெளிப்படுத்தினார்.
இருக்காதே பின்ன... தோனிக்கு பதில் ரிஷப் பண்ட் வேண்டும்-னு நிறைய கூவல்களை கேட்டதில் எவ்வளவு டென்ஷன் ஆகியிருப்பாரு!!
All smiles for India so far this morning 😄#CWC19 | #SLvIND | #TeamIndia pic.twitter.com/zcvWI4cAWF
— Cricket World Cup (@cricketworldcup) 6 July 2019
15 ஓவர்கள் முடிவில், இலங்கை நான்கு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்த விக்கெட் மீண்டும் ஜடேஜாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், அவர் குறி வைப்பது வலது கை பேட்ஸ்மேனான ஏஞ்சலோ மேத்யூசுக்கு. திரிமன்னே இடது கை பேட்ஸ்மேன் என்பது கூடுதல் தகவல்.
இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு களத்தில் நிற்பது திரிமன்னே - மேத்யூஸ் ஜோடி.
திரிமன்னே, கடந்த காலங்களில் இந்திய அணியை பல போட்டிகளில் மிரட்டியவர். மேத்யூஸ் சீனியர் பிளேயர். இலங்கைக்கு தோனி போன்று, தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்(?). இவர்கள் இருவரும், அடுத்த 20 - 25 ஓவர்களுக்கு களத்தில் நின்றால், இலங்கை 220 - 250 அடிக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, 270 செல்லக் கூட வாய்ப்புள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அணியில் இடம் பிடித்த ரவீந்திர ஜடேஜா, தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். ஜடேஜா ஓவரில் கிரீஸை விட்டு இறங்கி வந்து ஃபிளிக் செய்ய குசல் மெண்டிஸ் முயல, பந்து தோனி கைகளில் சென்று உட்கார்ந்து கொண்டது. அப்புறம் சொல்ல வேண்டுமா??
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த 21 வயதான இளைஞன் அவிஷ்கா பெர்னாண்டோ. நேர்த்தியான ஷார்ட்களை பயமறியாமல் அடிப்பதே இவரது டிஸைன். பும்ராவின் பந்துகளில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை பறக்க விட்டிருப்பதே இதற்கு உதாரணம். அதிலும் ஒரு பந்து ஷாரட் பால். அப்போ பார்த்துக்கோங்க!!
Promising SL Talent என்று இவரைச் சொல்லலாம். சதம் அடித்ததற்காக மட்டுமல்ல, அதை தைரியமாக அடித்ததற்காக....
புவனேஷ் குமார் ஓவரில், இலங்கை வீரர்கள் ரன்கள் அதிகம் சேகரித்துக் கொண்டிருக்க, அவரது ஓவரில் தலைக்கு மேல் குசல் பெரேரா தூக்கி அடிக்க, பாண்ட்யாவும், குல்தீப்பும் கேட்சை நோக்கி ஓடி, ஒருத்தரை ஒருத்தர் முட்டிக் கொள்ள, குல்தீப் தனது கைகளில் வாங்கி அந்த கேட்சை கோட்டைவிட்டு, கோட்டை சாமியானார்.
So close 😅
Almost a catch, and almost a collision 💥
Can Kusal make the most of the reprieve?#CWC19 | #SLvIND pic.twitter.com/1M7f0sleLo
— Cricket World Cup (@cricketworldcup) 6 July 2019
இலங்கை கேப்டனின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், பும்ரா தனது 100வது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். 57வது போட்டியில் பும்ரா, தனது 100வது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம், குறைந்த போட்டியில் 100வது விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில், பும்ரா இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
முகமது ஷமி - 56 போட்டிகள்
பும்ரா - 57 போட்டிகள்
இர்பான் பதான் - 59 போட்டிகள்
ஜாகிர் கான் - 65
அஜித் அகர்கர் - 67
ஜவகல் ஸ்ரீநாத் - 68
இந்திய அணியில் இரு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விராட் கோலி(c), ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், எம்.எஸ்.தோனி(w), ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா
நமீதாவோட மச்சான் வார்த்தையை இப்போது, பிக் பாஸ் மூலம் கவின் பிரபலப்படுத்த, நாலு வயசு வண்டு கூட மச்சான்-ங்குது!! சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியா, இலங்கை மோதும் இறுதி லீக் போட்டியின் லைவ் கமெண்ட்ரிக்காக உங்களை வரவேற்பது நான் உங்கள் Anbarasan Gnanamani
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights