Advertisment

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் 11 யார், யார்? மழை பற்றி முக்கிய தகவல்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs West Indies Score, IND vs WI scorecard

India vs West Indies 2nd odi today

Ind vs wi chennai match weather condition: டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றிய பிறகு, சென்னையில் இன்று (டிச.15) நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. சென்னையில் கடந்தச இரண்டு நாட்கள் பெய்த மழையால்  ஆடுகளம்   சேதம் அடையாதவாறு மூடி மறைக்கப்பட்டுள்ளது.  பொதுவாக சென்னை மைதனாம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல சாதகமாய் மையும்.  போதிய சூரிய ஒளி இல்லாமை, காற்றின் வேகம் இன்று  சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினாமாக அமையும் என்று நம்பப்படுகிறது. கடைசியாக    செப்டம்பர் 2017ம் ஆண்டு, இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியவிற்கு  எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில்  இந்தியா தனது சுழற்பந்து வீச்சாளர்களால் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

13, 2019

கேப்டன் கோலியின் ஆக்ரோஷம் அணிக்கு வெற்றியைத் தாண்டி, சக வீரர்களுக்கு 'தல-யே இவ்ளோ வெறியா ஆடுதே.. இதுல பாதியாச்சும் நாம பண்ணியாகனுமே' என்று எனர்ஜியை தங்களுக்குள் வலிந்து ஏற்றுக் கொள்கின்றனர். விளைவு, வெற்றி!.

டி20 போட்டிகளில் சொதப்புவது போல், ஒருநாள் போட்டிகளில் இந்தியா அவ்வளவாக சொதப்புவதில்லை. இன்னும், சொல்லப்போனால், இந்த மூன்று ஒருநாள் போட்டிகளில், ஒன்றில் வென்றால் கூட, அதுவே வெஸ்ட் இண்டீசுக்கு மெகா சாதனை தான். அதுவும், இந்திய பிட்சில் இந்தியாவை வீழ்த்துவது என்பது, நீங்கள் உங்கள் நூறு சதவிகித முயற்சிக்கு மேலாக, 10 சதவிகித வட்டியுடன் முயற்சி செய்தால் தான், ஏதாவது நினைத்தாவது பார்க்க முடியும்.

எல்லாவற்றையும் விட, ரொம்ப நாளைக்குப் பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், ரசிகர்களின் உற்சாக டெம்போ எகிறி கிடக்கிறது. நம்ம பிட்ச்... நம்ம மண்... நம்ம அணி.. 'வாவ்' என்று நாம் கொண்டாடினாலும், சென்னையை அச்சுறுத்தும் வானிலை அதற்கு வழிவிடுமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறியே!.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜானை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் சார்பில் நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, "நாளை சென்னையில் மழை இருக்காது. ஆகையால், போட்டி எந்த தடையுமின்றி நிச்சயம் நடக்கும். நாளை மறுநாள் (டிச.16) காலை தான் மீண்டும் சென்னையில் மழை பெய்யத் தொடங்கும். ஸோ, ரசிகர்கள் ஹேப்பியாக நாளைய போட்டியை காண செல்லலாம்" என்று செர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.

இந்திய அணி பிளேயிங் XI எதிர்பார்ப்பு:

ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி(C), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(WK), ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ்/ஷிவம் துபே, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், முகமது ஷமி.

'Keep Consistency' என்ற அட்வைஸ் நிலையில் இருந்து 'Maintaining Consistency' எனும் தர நிலைக்கு உயர்ந்திருக்கும் லோகேஷ் ராகுல் ஓப்பனிங்கில் பலம். ரோஹித் ஷர்மாவின் 'சிக்குனவன் செத்தான்' ஆட்டமும், விராட் கோலியின் 'உச்சம் தொட்ட தோட்டா' ஆட்டமும் என இந்தியாவின் டாப் 3, பெஸ்ட் ஆர்டரில் இருக்கிறது.

டூ டவுனில், ஐயர் நம்பிக்கை தருகிறார்... (தராருல...? அட தராரு யா)

publive-image

ரிஷப் பண்ட்... இவரை நம்பித் தான் ஆகணும். வேற வழியே இல்ல...

ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இவரது 3டி கிரிக்கெட், இந்திய அணிக்கு நிச்சயம் பல் குத்த உதவும்.

கேதர் ஜாதவுக்கு பதில் ஷிவம் துபே சேர்க்கப்பட்டால் ஆச்சர்யமில்லை.

பவுலிங்கைப் பொறுத்தவரை, ஷமி இந்தியாவின் டாப் நம்பிக்கை. தீபக் ஏமாற்ற வாய்ப்பில்லை. மற்றபடி ஸ்பின் ட்வின்ஸ் சாஹல், குல்தீப் வெஸ்ட் இண்டீஸை பாடுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் XI எதிர்பார்ப்பு:

ஷாய் ஹோப்(WK),  எவின் லெவிஸ்/பிரண்டன் கிங், ஷிம்ரோன் ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட்(C), ஜேசன் ஹோல்டர், கீமோ பால், ஷெல்டன் காட்ரெல், ஹெய்டன் வால்ஷ், அல்ஜாரி ஜோசப்.

ஒருநாள் போட்டிகளில் வீக் வெஸ்ட் இண்டீஸ், வீக்கென்ட் போட்டியில், இந்தியாவிடம் இருந்து தப்பிப்பது கடினமே. எனினும், ஹோப், ஹெட்மயர், பூரன், பொல்லார்ட், ஹோல்டர் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். எவின் லெவிஸ்க்கு காயம் குணமாகிவிட்டதா என்று தெரியவில்லை. மற்றபடி, பெரிய அளவில் இந்தியாவை அச்சுறுத்தும் டூல் அந்த அணியிடம் இல்லை. ஸோ, வெற்றிக்கான தேடலின் சதவிகிதம் வெஸ்ட் இண்டீஸின் டிரெஸ்சிங் ரூமில் குறைந்த அளவிலேயே இருக்கும்.

ஸோ, நாளைக்கு ஒரு மழையில்லாத முழுமையான மேட்ச் கன்ஃபார்ம்!!

Chepauk India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment