India vs West Indies 1st T20: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் ஸ்கோர் கார்டு

India vs West Indies 1st t20 live streaming: கேப்டன் விராட் கோலி சொன்னது போல், உலகக் கோப்பை டி20-க்கான ‘பெஸ்ட் 15’ கண்டறிய இந்த சீரிஸ் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

India vs West Indies 1st T20I Live Streaming
India vs West Indies 1st T20I Live Streaming

India vs West Indies 1st T20I Live Streaming: உலகக் கோப்பை அரையிறுதியில் Weather-ரினால் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இன்று மீண்டும் Together ஆகியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆம்! 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடரின், முதல் போர்ஷனான டி20ல் இன்று களம் காண்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

உலகக் கோப்பைத் தோல்வி, கேப்டன்ஷிப் கேள்விகள், நம்பர்.4 ஸ்லாட், கோலி – ரோஹித் ரைவல்(?) போன்ற காரணங்களால் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே வைரல் ஆன இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர், வழக்கமான இ – வெ., தொடரை விட இம்முறை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 2020ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு பெரும் முன்னோட்டமாக இத்தொடரை நாம் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் ஒரு வருட காலம் இருந்தாலும் கூட, டி20 போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முதல் பவுலர்கள் வரை அனாயசமாக சிக்ஸர்கள் விளாசும் வெஸ்ட் இண்டீசுடன் மோதுவது இந்தியாவுக்கான சுப்ரீம் டெஸ்டாக அமையும் என்பதே இங்கு முக்கியமானது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் Dark Horse-ஆக இருந்தாலும் டி20ல் அந்த குதிரைகளை அவ்வளவு சுலபமாக உங்களால் அடக்கிவிட முடியாது.

கேப்டன் விராட் கோலி சொன்னது போல், உலகக் கோப்பை டி20-க்கான ‘பெஸ்ட் 15’ கண்டறிய இந்த சீரிஸ் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திவிட்டால், டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல மிக அதிக வாய்ப்புள்ளது.

முதல் டி20 போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

இன்று(ஆக.3) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Central Broward Regional Park Stadium-ல், இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு முதல் டி20 போட்டி தொடங்குகிறது. 7.30 மணிக்கு டாஸ் போடப்படும். சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.

ஆனால், போட்டி நடைபெறும் இடத்தில் மழை பொழிய 65 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கடைசியில வச்சாய்ங்க ஆப்பு!

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ind vs wi 1st t20 india vs west indies when and where to watch

Next Story
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய துரோணாச்சாரியார் : இவர்களில் யார்….indian cricket team, coack, ravi shastri, robin singh, lalchand rajput, gary kirsten, இந்திய கிரிக்கெட் அணி, பயிற்சியாளர், ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட், கேரி கிறிஸ்டன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express