IND vs WI 2nd ODI Live Score: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி லைவ்!
India vs West Indies 2nd ODI Full Scorecard: லாராவின் சாதனையை முறியடிக்க முடியாததால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்று தனது ஓய்வு முடிவில் இருந்து U-turn அடித்தார்
IND vs WI 2nd ODI Live Score 2019: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று(ஆக.11) நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற ஸ்வீப் செய்த இந்தியா, தற்போது ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. கயானாவில் நடக்கவிருந்த முதல் ஒருநாள் போட்டி, மழையால் முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது.
முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பு, 11 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் பெருமையை க்றிஸ் கெயில் பெறுவதாக இருந்தது. அதற்காகவோ என்னவோ, 31 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்கள் எடுத்து கெயில் வெளியேறினார்.
இந்நிலையில், இன்று 7 ரன்கள் எடுத்தால், முதலிடத்தில் இருக்கும் பிரைன் லாராவின் சாதனையை கெயில் முறியடிப்பார்.
ஏற்கனவே, உலகக் கோப்பை முடிந்த பிறகு, ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன்’ என்று அறிவித்திருந்த கெயில், லாராவின் சாதனையை முறியடிக்க முடியாததால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்று தனது ஓய்வு முடிவில் இருந்து U-turn அடித்தார்.
அதேசமயம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு வழங்குமாறும், அத்தோடு ஓய்வு பெறுவதாகவும் அவர் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தார். ஆனால், அவரது டெஸ்ட் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரோடு, கெயில் புயல் அடங்குவது உறுதியாகியிருக்கிறது .
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.