India vs West Indies 3rd T20I Live Streaming: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் இரு போட்டிகளிலும் வென்று, இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்டது. இந்நிலையில், இன்று மூன்றவாது மற்றும் இறுதிப் டி20 போட்டி கயானாவில் நடைபெறுகிறது.
ஏன்...? எப்படி...? எதுக்காக...? என்று ஹஸ்கி வாய்ஸில் கேள்விக் கேட்கும் அளவுக்கு டி20 மாஸ்டர்ஸ் வெஸ்ட் இண்டீஸின் தோல்வி அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. உண்மையில், இந்திய கேப்டன் கோலியே அவர்களை இவ்வளவு எளிதாக வீழ்த்திவிடுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.
முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் DLS விதிப்படி 22 ரன்களில் வெற்றிப் பெற்றது. சீனியர் + ஜூனியர் என்று சரிவிகித கலவையில் அணி இருந்தாலும், வெற்றியை வசப்படுத்துவதில் சறுக்குகிறார்கள். குளோபல் டி20 தொடரில் க்றிஸ் கெயில், ஒரே ஓவரில் 32 ரன்கள் சாத்திக் கொண்டிருக்க, இங்கே உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிடம் சரண்டராகிக் கொண்டிருக்கிறது.
விண்டீஸ் வீரர் ரோவ்மன் பவல் கூறியது தான் இங்கே நினைவுக்கு வருகிறது... "இந்த இந்திய அணி வீழ்த்தக் கூடிய அணி தான், ஆனால், அதற்கு நாங்கள் ஒன்றிணைந்து ஆட வேண்டியது முக்கியம்" என்று அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை.
இன்றைய போட்டியில் மன ரீதியாக விண்டீஸ் அதே உற்சாகத்துடன் களமிறங்குவார்கள் என நம்பலாம். கான்ஃபிடன்ட் லெவலிலும் காம்ப்ரைஸ் இருக்காது என நம்பலாம்.
என்னடா இவன், வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்குறதுக்கே பேசுறான் என்று காண்டாக வேண்டாம்... நம்ம டீம் தான் எப்படி இருந்தாலும் ஜெயிக்கப் போகுதே.. ஸோ, நோ டென்ஷன்...
இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும். கயானாவின் புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.
நேற்றுமுன்தினம், 2வது டி20 போட்டி நடந்த ஃபுளோரிடாவில் இருந்து 3வது டி20 போட்டி நடக்கும் கயானாவை அடைய இரு அணிகளும் 3,482 கி.மீ தூரம் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.