West Indies vs India World Cup 2019 Score: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.27) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கோலி 72 ரன்களும், தோனி 56 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல், 34.2வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 143 ரன்களுக்கு சுருண்டது. இதனால், இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
Live Blog
World Cup 2019: India vs West Indies Live Score, IND vs WI 2019 Live Updates, Emirates Old Trafford,Manchester - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த மெகா வெற்றியின் மூலம், இந்திய அணி, 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் ரன் ரேட்டும் கணிசமாக எகிறியுள்ளது. +1.160 என்று வலிமையான ரன் ரேட்டுடன் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்திய அணி 250 ரன்கள் தாண்டிய போதே, எனது நண்பன் ஒருவன் சொன்னார், 'இந்த டார்கெட் நமக்கு போதுமென்று'. நான் அவரிடம் அடித்துக் கூறினேன். வெஸ்ட் இண்டீஸ் சேஸிங் செய்யுமென்று. அப்போது அவர் சொன்னார், 'வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பவுலிங்கை எதிர்கொள்ளும் அளவுக்கு பொறுமை கிடையாது என்று'. இப்போது அவரின் கூற்று உண்மையாகிவிட்டது.
26.1வது ஓவரில் பிரத்வெயிட்டை காலி செய்த பும்ரா, அடுத்த பந்திலேயே ஆலனை எல்பியாக்க வெஸ்ட் இண்டீஸ் 27 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து, தோல்வியின் விளிம்பில் உள்ளது.
Two in two for Bumrah. Oh what a player 😎😎#TeamIndia #CWC19 pic.twitter.com/0qlbKvwcW1
— BCCI (@BCCI) 27 June 2019
வேகப்பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்துள்ள நிலையில், 11வது ஓவரில், குல்தீப் யாதவை பந்து வீச வைத்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி. ஸ்லோ பிட்ச் என்பதால், ஸ்பின் கைக்கொடுக்கும் என நம்பலாம். ஆனால், வெஸ்ட் இண்டீசுக்கு மிக கவனமாக ஸ்பின் வீச வேண்டும். இல்லையெனில், கதை கந்தலாகிவிடும்.
36 vs பாகிஸ்தான்
7 vs ஆஸ்திரேலியா
4 vs இங்கிலாந்து
6 vs வங்கதேசம்
3 vs நியூசிலாந்து
10 vs இந்தியா
வலிமையான பேட்டிங் வரிசை இருந்தும், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சரியாக அமையாமல், வெஸ்ட் இண்டீஸ் இத்தொடர் முழுவதும் தடுமாறி வருகிறது.
ஷாய் ஹோப்-ன் மோசமான ஃபார்ம் இன்றைய போட்டியிலும் தொடருகிறது. முகமது ஷமி ஓவரில், 5 ரன்களில் ஷாய் ஹோப் போல்டாக, வெஸ்ட் இண்டீஸ், தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது.
Shami on fire 🔥🔥
West Indies 16/2 after 7 overs https://t.co/KlXS8z1U50 #CWC19 pic.twitter.com/6n54EprfmV
— BCCI (@BCCI) 27 June 2019
மிகப் பொறுமையாக தனது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இலக்கு மிக எளிதானது. ஆகையால், தொடக்கத்தில் இந்த நிதானம் பெரிய பிரச்சனையல்ல... இன்னும் சொல்லப் போனால், இது அவசியமான நிதானமே. ஆனால், மீண்டும் சொல்கிறேன், அவர்கள் அதிரடியாக ஆடச் சென்றால், வெஸ்ட் இண்டீஸ் ஜெயிப்பது ரொம்ப கடினம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்டடி அடிக்கும் வீரர்கள் இருந்தாலும், இது போன்ற ஸ்லோ பிட்சுகளில், திறம்பட நேக்குபோக்காக அடிக்க வேண்டியது அவசியம். அதிரடியைத் தாண்டி, இங்கு நிதானமும் தேவை. வெஸ்ட் இண்டீஸ் இதனைக் கடைப் பிடித்தால், வெற்றி நூறு சதவிகிதம் உறுதி. இல்லையெனில், இது கடினமாக இலக்கே!.
தோனி அதிரடியாக ஆடவில்லை என்பது உண்மை தான். ஆனால், ஐபிஎல் தொடரில், இறங்கிய முதல் பந்திலேயே தாறுமாறாக அடித்து வந்த ஹர்திக் பாண்ட்யாவே, இப்போது தடுமாறிக் கொண்டுதானே இருக்கிறார்? அவரது இயல்பான ஆட்டம் எங்கே? ஸ்ட்ரெய்ட்டில் பறக்கும் சிக்ஸர்கள் எங்கே? அட எங்கப்பா??
தோனி அதிரடியாக ஆடாமல் இருப்பது அப்புறம்.. முதலில், அவரது ஷாட்டே அவரது கண்ட்ரோலில் இல்லை. அவர் ஆஃப் சைடில் அடிக்க நினைத்தால், பந்து பேட்டில் பட்டு லெக் சைடில் செல்கிறது. பந்துக்கும், அவரது பேட்டுக்குமான கனெக்ஷன் சரியில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது. ஸோ, இனி பாண்ட்யா அடித்தால் தான் உண்டு.
இந்தியாவின் மிடில் ஆர்டர் பற்றி நாம் ஆயிரம் முறை பேசியதாகிவிட்டது. இப்போது 1001-வது முறையாக பேசுவோம். இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்கோர் Prediction 350லிருந்து 330 வந்து, 300 வந்து, இப்போது 270 அடிக்குமா என்ற நிலைக்கு வந்துவிட்டது இந்தியா.
தோனி, ஹர்திக் பாண்ட்யா களத்தில்...
கோலியா இப்படி அவுட்டானது? ஜேசன் ஹோல்டரின் ஷார்ட் லென்த் பந்தில், புல் ஷாட் அடிக்கச் சென்ற விராட் கோலி, மிட் விக்கெட்டில் நின்றிருந்த டேரன் பிராவோ-விடம் கேட்ச் ஆனார். விராட் கோலி, இவ்வளவு கேஷுவலாக தனது விக்கெட்டை இழப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 82 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கோலி வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி, அரைசதம் அடித்திருக்கும் விராட் கோலி, குறைந்த போட்டிகளில் 20,000 ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறார்.
417 - விராட் கோலி
453 - சச்சின்லாரா
464 - ரிக்கி பாண்டிங்
483 - ஏ.பி.டி வில்லியர்ஸ்
491 - ஜாக் காலிஸ்
492 - ராகுல் டிராவிட்
இந்திய அணியின் ரன் ரேட் 5லிருந்து, 4.8க்கு வந்து, 4.7க்கு வந்து, இப்போது 4.6க்கு வந்துவிட்டது. போட்டி ஆரம்பிக்கும் போது, 350க்கும் மேல் இந்தியா ரன்கள் அடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது போட்டி சூழலைப் பார்த்தால், 300 ரன்களைக் கடக்குமா? என்ற சந்தேகம் வெயிட்டாக ஏற்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மாவு நாட் அவுட்டுக்கு, அவுட் கொடுத்த தேர்ட் அம்பயர் மைக்கேல் காஃப் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளார். விக்கிபீடியாவில் அவரை பற்றிய தேடுதல் மிக அதிகமாக உள்ளது.
#INDvsWI Wow that's fast! Umpire Michael Gough making to Wikipedia fast. pic.twitter.com/drwD3GA58K
— aman srivastava (@AmanGamer) 27 June 2019
ரோஹித்துக்கு தவறான முடிவு கொடுத்த மூன்றாவது அம்பயரை, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் விமர்சித்துக் கொண்டிருக்க, இதோ, ரோஹித் அவுட் இல்லை என்பதற்கான தெளிவான புகைப்படம்.
Clear not out #INDvsWI ..
Even umpire is surprised by seeing third umpire decision ..
Rohit didnt frustated gave a smile and went back .. gentlemen 🔥❤️ .. pic.twitter.com/lC9mRNBmol— RUDRA RAJU (@Shashank654) 27 June 2019
இருக்காதா பின்னே!! அண்ணியார் வந்தாலே, ரோஹித் டபுள் செஞ்சுரி அடித்து, பேட் மூலம் ஃபிளையிங் கிஸ் பறக்க விடுவார். ஆனால், அநியாயமாக நாட் அவுட்டுக்கு அவுட் கொடுத்தால், டென்ஷனாகாத பின்ன!!
Disappointed @ImRo45 & his wife @ritssajdeh after #RohitSharma was given out..
Hard Luck Champ Rohit😪#INDvsWI #RohitSharma pic.twitter.com/sAWsLORS7p— Rohit Sharma Fan Club (@IamRs45Fc) 27 June 2019
பிட்ச் பேட்டிங் செய்ய அவ்வளவு ஒன்று கடினமாக இல்லை. ஆனால், வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கில் அதிக வேரியேஷன் இல்லை என்றாலும், கட்டுக்கோப்பாகவே உள்ளது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 47-1. தற்போதைய நிலையில், கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப் மிக மிக முக்கியமானது. ஏனெனில், நமது மிடில் ஆர்டர் பலம் என்ன என்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆகையால், இதே பார்ட்னர்ஷிப் அடுத்த 100 ரன்களுக்கு நின்றால், இந்தியா 300 - 325 அடிக்க வாய்ப்பிருக்கிறது.
ரோஹித் பேடில் பந்து பட்டுச் செல்ல, பேட்டில் பட்டுச் சென்றதாக தேர்ட் அம்பயர் அவுட் கொடுக்க, ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். அது நிச்சயம் நாட் அவுட் என்பது தெளிவாக தெரிகிறது.
That review against Rohit ,definitely was not conclusive as the umpire mentioned on air.... soo... much for technology 🤷🏻♂️ #INDvsWI #CWC19
— subramani badrinath (@s_badrinath) 27 June 2019
That review against Rohit ,definitely was not conclusive as the umpire mentioned on air.... soo... much for technology 🤷🏻♂️ #INDvsWI #CWC19
— subramani badrinath (@s_badrinath) 27 June 2019
இந்திய அணி, மிக நிதானமான தொடக்கத்தை கொடுத்தாலும், ரோஹித் ஷர்மா, நான்கு ஓவர்களுக்கு மேல், தனது கியரை மாற்றினார்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டாக, மீண்டும் ரன் ரேட் குறைந்துள்ளது. கோலியும் தனக்கான பந்துகளுக்காக காத்திருக்கிறார்.
கெமார் ரோச் உள்ளே வீசிய பந்தில், ரோஹித் ஷர்மா 18 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆனார். பந்து பேட்டிற்கும், பேடுக்கும் இடையே செல்ல, கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் ரிவியூ செல்ல, பந்து பேட்டிலும், பேடிலும் ஒரே நேரத்தில் உரசிச் சொல்வது போன்று தெரிந்ததால், அம்பயர் அவுட் கொடுக்க, ரோஹித் யாரையோ பயங்கரமாக திட்டிக் கொண்டே வெளியேறினார்.
முன்னாடியெல்லாம், வெஸ்ட் இண்டீசின் கெமார் ரோச், அசால்ட்டா 145 கி.மீ.க்கு அதிகமாக பந்துகளை தொடர்ச்சியாக வீசுவார். ஆனால், இப்போது முனாப் படேல் மாதிரி வேகத்தை சுத்தமாக குறைத்துவிட்டார். 130 - 137 கி.மீ. வேகம் வரையே அவரது பந்துவீச்சு இருக்கிறது.
உங்க ஸ்பீடு தான் உங்களுக்கு அழகு ரோச்!! அதுவே இல்லனா எப்படி!!?
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியை தொலைக்காட்சியில் உங்களால் பார்க்க முடியவில்லையா? அப்படியெனில், உங்கள் ஸ்மார்ட் ஃபோனில், பிளே ஸ்டோர் சென்று ஹாட் ஸ்டார் ஆப்-ஐ டவுன்லோட் செய்து, ஹாட் ஸ்டார் விஐபி பேக்கை ஆக்டிவேட் செய்யுங்கள். பிறகு, லைவாக போட்டியை நீங்கள் கண்டுகளிக்கலாம். ஹாட் ஸ்டார் ப்ரீமியம் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
இதோ... இந்திய ஓப்பனர்கள் ரோஹித் ஷர்மாவும், லோகேஷ் ராகுலும் ரசிகர்களின் பலத்த வரவேற்பிற்கு இடையே களம் இறங்கியுள்ளனர். லோகேஷ் ராகுல், 2016ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியில் அடித்த மரண அடி, என் கண்கள் முன்னாடி வந்து வந்து போகுதே!!.
வேறென்ன... ஷார்ட் பிட்ச் பந்துகள் மட்டும் போடுவது தான். இந்த சீசனில், அவர்கள் பந்துவீச்சில் என்ன வேரியேஷன் இருந்தது? ஒன்றுமில்லை. பேட்டிங் நன்றாக செய்து என்ன பிரயோஜனம்? பந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லையெனில், வீட்டுக்கு போக வேண்டியது தான். (அல்ரெடி போயாச்சு ப்ரோ!)...
இன்னைக்கு ரோஹித் ஷர்மாவுக்கும் ஷார்ட் பிட்ச் பந்தா போட்டா, அவரு டபுள் செஞ்சுரி அடிக்குறத யாராலும் தடுக்க முடியாது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, அவர் விரும்பிய 'தலை' வெல்ல, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். எதிர்பார்த்தபடி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுவரை, மான்செஸ்டரில் மூன்று உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. மூன்றிலும் டாஸ் வென்ற அணிகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி அடித்த ஸ்கோர் 336,397,291.
அப்படியெனில், இந்தியா இன்று எவ்வளவு ரன்கள் அடிக்கும்?
இந்திய அணி வீரர்கள், ரசிகர்களின் உற்சாக வரவேற்பிற்கு இடையே பயிற்சிக்கு களமிறங்கிய போது க்ளிக்கிய புகைப்படங்கள். இந்தியா மட்டுமே, இந்த உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்பது குறிப்பிடத்தகது.
#TeamIndia are ready for the clash against #MenInMaroon in Manchester 🔥
DOWNLOAD the official #CWC19 app to follow #WIvIND live ⬇️
APPLE 👉 https://t.co/whJQyCahHr
ANDROID 👉 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/FAyLeL5PJN— Cricket World Cup (@cricketworldcup) 27 June 2019
வணக்கம், வந்தனம், நமஷ்கார் நேயர்களே... இன்று, ஒரு முழுமையான ஒருநாள் ஆட்டத்தைப் பார்க்கவிருக்கிறோம். இந்தியா தனது நண்பனை இன்று எதிர்த்து ஆடுகிறது. அதாங்க, நம்ம வெஸ்ட் இண்டீஸ்... மதியம் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. முழுமையான கமெண்ட்ரி மற்றும் லைவ் ஸ்கோர் கார்டு காண நமது ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights