Advertisment

India vs West Indies Score: 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி! 143 ரன்களில் சுருண்ட விண்டீஸ்!

World Cup 2019, India vs West Indies Match Live Score Updates: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs WI Live Score, India vs West Indies World Cup Live Score

West Indies vs India World Cup 2019 Score: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.27) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கோலி 72 ரன்களும், தோனி 56 ரன்களும் எடுத்தனர்.

Advertisment

இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல், 34.2வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 143 ரன்களுக்கு சுருண்டது. இதனால், இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

 

Live Blog

World Cup 2019: India vs West Indies Live Score, IND vs WI 2019 Live Updates, Emirates Old Trafford,Manchester - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்



























Highlights

    22:24 (IST)27 Jun 2019

    Ind vs WI - இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த மெகா வெற்றியின் மூலம், இந்திய அணி, 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் ரன் ரேட்டும் கணிசமாக எகிறியுள்ளது. +1.160 என்று வலிமையான ரன் ரேட்டுடன் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    22:15 (IST)27 Jun 2019

    Ind vs WI Live - இந்தியா வெற்றி

    34.2வது ஓவரில், வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றிப் பெற்றது. 

    22:04 (IST)27 Jun 2019

    Ind vs WI Live Score - ஜஸ்ட் மிஸ்..

    சஹால் ஓவரில், ஓஷானோ தாமஸ் எட்ஜ் ஆக, ஸ்லிப்பில் நின்றிடுந்த ரோஹித், அதை கேட்சாக்கினார். ஆனால், மூன்றாவது நடுவர் சோதனை செய்த போது, பந்து தரையில் படுவது தெரிந்ததால், தாமஸ் எஸ்கேப்.

    21:54 (IST)27 Jun 2019

    Ind vs WI Live Cricket - ஒன்பதாவது விக்கெட்!

    சஹால் ஓவரில், ஒரு பவுண்டரி, சிக்ஸ் என பறக்கவிட்ட காட்ரல், அதே வேகத்தில் சஹாலிடம் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, இந்தியா வெற்றிப் பெற இன்னும் ஒரு விக்கெட்டே மீதம்.

    21:45 (IST)27 Jun 2019

    ஹெட்மயர் கதை முடிந்தது

    ஷமி ஓவரில், பேக்வேர்ட் பாயிண்ட்டில் அறைந்த ஹெட்மயர் 18 ரன்களில் கேட்ச்சாக, வெஸ்ட் இண்டீஸ் எட்டாவது விக்கெட்டை பறிகொடுத்தது. 

    21:43 (IST)27 Jun 2019

    Ind vs WI Live Score - இப்படி ஆச்சே நண்பா!

    இந்திய அணி 250 ரன்கள் தாண்டிய போதே, எனது நண்பன் ஒருவன் சொன்னார், 'இந்த டார்கெட் நமக்கு போதுமென்று'. நான் அவரிடம் அடித்துக் கூறினேன். வெஸ்ட் இண்டீஸ் சேஸிங் செய்யுமென்று. அப்போது அவர் சொன்னார், 'வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பவுலிங்கை எதிர்கொள்ளும் அளவுக்கு பொறுமை கிடையாது என்று'. இப்போது அவரின் கூற்று உண்மையாகிவிட்டது. 

    21:39 (IST)27 Jun 2019

    Ind vs wi live : தோல்வியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்

    26.1வது ஓவரில் பிரத்வெயிட்டை காலி செய்த பும்ரா, அடுத்த பந்திலேயே ஆலனை எல்பியாக்க வெஸ்ட் இண்டீஸ் 27 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து, தோல்வியின் விளிம்பில் உள்ளது.

    21:19 (IST)27 Jun 2019

    ஹோல்டர் அவுட்

    சாஹலின் அல்வா பந்தில் நிதானம் இழந்த கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஆப் சைடில் தூக்கி அடிக்க, மிக அழகான கேட்ச் ஒன்று கேதர் ஜாதவ் கைகளில்... 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஹோல்டர் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் தனது ஐந்தாவது விக்கெட்டை பறிகொடுத்து. 

    20:35 (IST)27 Jun 2019

    Ind vs wi live score - 45/2

    வெஸ்ட் இண்டீஸ், 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு, 45 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா, உண்மையில் அபாரமான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறது. நிகோலஸ் பூரன், சுனில் ஆம்ப்ரிஸ் களத்தில் உள்ளனர். பூரண், பூரணமாக ஃபார்மில் இல்லை என்பது கூடுதல் ஸ்பெஷல் தகவல்

    20:22 (IST)27 Jun 2019

    Ind vs WI Live Cricket Score - 11வது ஓவரில் குல்தீப் யாதவ்

    வேகப்பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்துள்ள நிலையில், 11வது ஓவரில், குல்தீப் யாதவை பந்து வீச வைத்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி. ஸ்லோ பிட்ச் என்பதால், ஸ்பின் கைக்கொடுக்கும் என நம்பலாம். ஆனால், வெஸ்ட் இண்டீசுக்கு மிக கவனமாக ஸ்பின் வீச வேண்டும். இல்லையெனில், கதை கந்தலாகிவிடும். 

    20:17 (IST)27 Jun 2019

    2019 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க பார்ட்னர்ஷிப்

    36 vs பாகிஸ்தான்

    7 vs ஆஸ்திரேலியா

    4 vs இங்கிலாந்து

    6 vs வங்கதேசம்

    3 vs நியூசிலாந்து

    10 vs இந்தியா

    வலிமையான பேட்டிங் வரிசை இருந்தும், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சரியாக அமையாமல், வெஸ்ட் இண்டீஸ் இத்தொடர் முழுவதும் தடுமாறி வருகிறது. 

    20:06 (IST)27 Jun 2019

    India vs West Indies Live Updates - ஷாய் ஹோப் அவுட்

    ஷாய் ஹோப்-ன் மோசமான ஃபார்ம் இன்றைய போட்டியிலும் தொடருகிறது. முகமது ஷமி ஓவரில், 5 ரன்களில் ஷாய் ஹோப் போல்டாக, வெஸ்ட் இண்டீஸ், தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

    19:58 (IST)27 Jun 2019

    Ind vs wi live updates : வெஸ்ட் இண்டீஸ் நோக்கம் என்ன?

    மிகப் பொறுமையாக தனது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இலக்கு மிக எளிதானது. ஆகையால், தொடக்கத்தில் இந்த நிதானம் பெரிய பிரச்சனையல்ல... இன்னும் சொல்லப் போனால், இது அவசியமான நிதானமே. ஆனால், மீண்டும் சொல்கிறேன், அவர்கள் அதிரடியாக ஆடச் சென்றால், வெஸ்ட் இண்டீஸ் ஜெயிப்பது ரொம்ப கடினம்.

    19:55 (IST)27 Jun 2019

    கெயில் அவுட்

    முகமது ஷமியின் ஓவரில், மிட் ஆனில் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து, 19 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து க்றிஸ் கெயில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் தனது முக்கிய விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறது. 

    19:38 (IST)27 Jun 2019

    Ind vs WI Live - இந்தியா அட்டாக்கிங் பவுலிங்

    பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில், ஒரு அட்டகாசமான யார்க்கர் பந்துக்கும் கெயிலுக்கு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க மறுக்க, தோனியும் உறுதியாக நம்பிக்கை தராததால், கோலி ரிவியூ செல்லவில்லை. 

    19:26 (IST)27 Jun 2019

    இந்த இலக்கு போதுமா?

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்டடி அடிக்கும் வீரர்கள் இருந்தாலும், இது போன்ற ஸ்லோ பிட்சுகளில், திறம்பட நேக்குபோக்காக அடிக்க வேண்டியது அவசியம். அதிரடியைத் தாண்டி, இங்கு நிதானமும் தேவை. வெஸ்ட் இண்டீஸ் இதனைக் கடைப் பிடித்தால், வெற்றி நூறு சதவிகிதம் உறுதி. இல்லையெனில், இது கடினமாக இலக்கே!.

    18:56 (IST)27 Jun 2019

    269 ரன்கள் இலக்கு!

    கடைசி ஓவரில், தோனி 16 ரன்கள் விளாச, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. தோனி, இறுதிவரை ஆட்டமிழக்காமல், 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருக்கிறார். 

    18:46 (IST)27 Jun 2019

    ஹர்திக் பாண்ட்யா அவுட்

    38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்ட்யா, காட்ரல் ஓவரில் கேட்ச் ஆனார். பாண்ட்யாவுக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்து, காட்ரல் அவரை வழியனுப்பி வைக்க, இந்தியா தனது ஆறாவது விக்கெட்டை இழந்தது. 

    18:38 (IST)27 Jun 2019

    Ind vs WI, Dhoni Score - 238/4

    47 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 3 ஓவர்களே மீதமிருக்கும் நிலையில், 30 ரன்கள் வந்தாலே பெரிய விஷயம் தான். 

    18:30 (IST)27 Jun 2019

    WI vs IND live score - தோனியை மட்டும் குறை சொன்னால்.... பாண்ட்யா என்ன செய்கிறார்?

    தோனி அதிரடியாக ஆடவில்லை என்பது உண்மை தான். ஆனால், ஐபிஎல் தொடரில், இறங்கிய முதல் பந்திலேயே தாறுமாறாக அடித்து வந்த ஹர்திக் பாண்ட்யாவே, இப்போது தடுமாறிக் கொண்டுதானே இருக்கிறார்? அவரது இயல்பான ஆட்டம் எங்கே? ஸ்ட்ரெய்ட்டில் பறக்கும் சிக்ஸர்கள் எங்கே? அட எங்கப்பா??

    18:22 (IST)27 Jun 2019

    Ind vs WI Score Updates : பாண்ட்யா கைகளில் இந்தியா ஸ்கோர்!

    தோனி அதிரடியாக ஆடாமல் இருப்பது அப்புறம்.. முதலில், அவரது ஷாட்டே அவரது கண்ட்ரோலில் இல்லை. அவர் ஆஃப் சைடில் அடிக்க நினைத்தால், பந்து பேட்டில் பட்டு லெக் சைடில் செல்கிறது. பந்துக்கும், அவரது பேட்டுக்குமான கனெக்ஷன் சரியில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது. ஸோ, இனி பாண்ட்யா அடித்தால் தான் உண்டு. 

    18:12 (IST)27 Jun 2019

    270-ஐ நெருங்குமா இந்தியா?

    இந்தியாவின் மிடில் ஆர்டர் பற்றி நாம் ஆயிரம் முறை பேசியதாகிவிட்டது. இப்போது 1001-வது முறையாக பேசுவோம். இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்கோர் Prediction 350லிருந்து 330 வந்து, 300 வந்து, இப்போது 270 அடிக்குமா என்ற நிலைக்கு வந்துவிட்டது இந்தியா.

    தோனி, ஹர்திக் பாண்ட்யா களத்தில்...

    18:01 (IST)27 Jun 2019

    Virat Kohli Out: அடக்கடவுளே!!

    கோலியா இப்படி அவுட்டானது? ஜேசன் ஹோல்டரின் ஷார்ட் லென்த் பந்தில், புல் ஷாட் அடிக்கச் சென்ற விராட் கோலி, மிட் விக்கெட்டில் நின்றிருந்த டேரன் பிராவோ-விடம் கேட்ச் ஆனார். விராட் கோலி, இவ்வளவு கேஷுவலாக தனது விக்கெட்டை இழப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 82 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கோலி வெளியேறினார். 

    17:48 (IST)27 Jun 2019

    166/4

    இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. இந்நாள் கேப்டன் விராட் கோலியும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் களத்தில் உள்ளனர். 

    உங்கள் ஸ்கோர் Prediction என்ன?

    17:23 (IST)27 Jun 2019

    Virat Kohli Record : சச்சின், லாரா சாதனையை முறியடித்த விராட் கோலி

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி, அரைசதம் அடித்திருக்கும் விராட் கோலி, குறைந்த போட்டிகளில் 20,000 ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறார். 

    417 - விராட் கோலி

    453 - சச்சின்லாரா

    464 - ரிக்கி பாண்டிங்

    483 - ஏ.பி.டி வில்லியர்ஸ்

    491 - ஜாக் காலிஸ்

    492 - ராகுல் டிராவிட்

    17:15 (IST)27 Jun 2019

    கேதர் ஜாதவ் அவுட்

    விராட் கோலி என்ன தான் செய்வார் பாவம்? அடிக்க தான் முடியும். மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பு உணர்ந்து விளையாட வேண்டாமா??? கேதர் ஜாதவ் 7 ரன்களில், கெமார் ரோச் ஓவரில் கேட்ச் ஆனார். இந்தியா தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. 

    17:10 (IST)27 Jun 2019

    Virat Kohli 50* - விராட் கோலி அரைசதம்

    தொடர்ச்சியாக, நான்காவது உலகக் கோப்பை அரைசதத்தை விராட் கோலி பூர்த்தி செய்திருக்கிறார். 55 பந்துகளில் தனது 50வது அரைசதத்தை கோலி நிறைவு செய்தார். 

    இதுவரை, உருப்படியான ஒரே பேட்டிங் இதுதான்!

    17:01 (IST)27 Jun 2019

    Ind vs WI Match Live Score - விஜய் ஷங்கர் அவுட்

    என்ன தம்பி.. பொசுக்குன்னு போயிட்டீங்க!!? கெமார் ரோச் ஓவரில், 14 ரன்களில் எட்ஜ் ஆன விஜய் ஷங்கர், கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கி இருப்பது கேதர் ஜாதவ். 

    எங்கயா எங்க தல தோனியை காணோம்!!?

    16:53 (IST)27 Jun 2019

    Ind vs WI Live Updates - குறையும் ரன் ரேட்... 300 கடக்குமா இந்தியா?

    இந்திய அணியின் ரன் ரேட் 5லிருந்து, 4.8க்கு வந்து, 4.7க்கு வந்து, இப்போது 4.6க்கு வந்துவிட்டது. போட்டி ஆரம்பிக்கும் போது, 350க்கும் மேல் இந்தியா ரன்கள் அடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது போட்டி சூழலைப் பார்த்தால், 300 ரன்களைக் கடக்குமா? என்ற சந்தேகம் வெயிட்டாக ஏற்பட்டுள்ளது.

    16:42 (IST)27 Jun 2019

    Michael Gough Trending - இந்திய அளவில் டிரென்ட் ஆகும் தேர்ட் அம்பயர்

    ரோஹித் ஷர்மாவு நாட் அவுட்டுக்கு, அவுட் கொடுத்த தேர்ட் அம்பயர் மைக்கேல் காஃப் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளார். விக்கிபீடியாவில் அவரை பற்றிய தேடுதல் மிக அதிகமாக உள்ளது.

    16:35 (IST)27 Jun 2019

    Ind vs wi Lokesh Rahul Wicket : லோகேஷ் ராகுல் அவுட்

    செட் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல். 64 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேசன் ஹோல்டரின் அற்புதமான லைன் பந்தில் போல்டானார். இந்தியாவின் வீக்கான மிடில் ஆர்டர் இனி என்ன செய்யப் போகிறதோ!!?

    16:27 (IST)27 Jun 2019

    IND vs WI Rohit Wicket : ரோஹித் அவுட் இல்லை.. ஆதாரம் இதோ!

    ரோஹித்துக்கு தவறான முடிவு கொடுத்த மூன்றாவது அம்பயரை, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் விமர்சித்துக் கொண்டிருக்க, இதோ, ரோஹித் அவுட் இல்லை என்பதற்கான தெளிவான புகைப்படம்.

    16:23 (IST)27 Jun 2019

    IND vs WI Live : 87/1

    18 ஓவர்கள் முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. ரன் ரேட் 4.79. விக்கெட்டை மேலும் இழந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா மிகத் தெளிவாக உள்ளது. 

    16:05 (IST)27 Jun 2019

    Rohit Wicket, Ind vs WI Live Cricket - டென்ஷனான ரோஹித் மனைவி

    இருக்காதா பின்னே!! அண்ணியார் வந்தாலே, ரோஹித் டபுள் செஞ்சுரி அடித்து, பேட் மூலம் ஃபிளையிங் கிஸ் பறக்க விடுவார். ஆனால், அநியாயமாக நாட் அவுட்டுக்கு அவுட் கொடுத்தால், டென்ஷனாகாத பின்ன!!

    15:59 (IST)27 Jun 2019

    Ind vs Wi Live score - இந்தியா டார்கெட் என்ன?

    பிட்ச் பேட்டிங் செய்ய அவ்வளவு ஒன்று கடினமாக இல்லை. ஆனால், வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கில் அதிக வேரியேஷன் இல்லை என்றாலும், கட்டுக்கோப்பாகவே உள்ளது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 47-1. தற்போதைய நிலையில், கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப் மிக மிக முக்கியமானது. ஏனெனில், நமது மிடில் ஆர்டர் பலம் என்ன என்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆகையால், இதே பார்ட்னர்ஷிப் அடுத்த 100 ரன்களுக்கு நின்றால், இந்தியா 300 - 325 அடிக்க வாய்ப்பிருக்கிறது. 

    15:47 (IST)27 Jun 2019

    Ind vs WI Live Match - சர்ச்சைக்கு உள்ளாகும் ரோஹித் விக்கெட்!

    ரோஹித் பேடில் பந்து பட்டுச் செல்ல, பேட்டில் பட்டுச் சென்றதாக தேர்ட் அம்பயர் அவுட் கொடுக்க, ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். அது நிச்சயம் நாட் அவுட் என்பது தெளிவாக தெரிகிறது. 

    15:41 (IST)27 Jun 2019

    IND vs WI, World Cup Cricket Live - தடுமாறுகிறதா இந்தியா?

    இந்திய அணி, மிக நிதானமான தொடக்கத்தை கொடுத்தாலும், ரோஹித் ஷர்மா, நான்கு ஓவர்களுக்கு மேல், தனது கியரை மாற்றினார்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டாக, மீண்டும் ரன் ரேட் குறைந்துள்ளது. கோலியும் தனக்கான பந்துகளுக்காக காத்திருக்கிறார். 

    15:30 (IST)27 Jun 2019

    Ind vs WI - ரோஹித் அவுட்!

    கெமார் ரோச் உள்ளே வீசிய பந்தில், ரோஹித் ஷர்மா 18 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆனார். பந்து பேட்டிற்கும், பேடுக்கும் இடையே செல்ல, கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் ரிவியூ செல்ல, பந்து பேட்டிலும், பேடிலும் ஒரே நேரத்தில் உரசிச் சொல்வது போன்று தெரிந்ததால், அம்பயர் அவுட் கொடுக்க, ரோஹித் யாரையோ பயங்கரமாக திட்டிக் கொண்டே வெளியேறினார். 

    15:25 (IST)27 Jun 2019

    சிக்ஸ்...

    5.2வது ஓவரில், கெமார் ரோச் வீசிய  ஷார்ட் பிட்ச் பந்தில், ரோஹித் ஷர்மா லெக் சைடில் ஒரு கேஷுவல் சிக்ஸ் அடிக்க, இந்திய அணி தனது முதல் சிக்ஸரை பதிவு செய்தது. 

    இன்னும் ஒரு 20 சிக்ஸு பறக்கணும் ஆண்டவா!!

    15:21 (IST)27 Jun 2019

    Ind vs WI Live : பவுண்டரி இல்லாத தொடக்கம்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, நான்கு ஓவர்கள் முடிந்தும், ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. 4.3வது பந்தில் தான் காட்ரல் ஓவரில், ரோஹித் ஷர்மா, இந்திய இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை அடித்தார். 

    15:11 (IST)27 Jun 2019

    India vs West Indies Live Score : கெமார் ரோச்-க்கு என்ன தான் ஆச்சு?

    முன்னாடியெல்லாம், வெஸ்ட் இண்டீசின் கெமார் ரோச், அசால்ட்டா 145 கி.மீ.க்கு அதிகமாக பந்துகளை தொடர்ச்சியாக வீசுவார். ஆனால், இப்போது முனாப் படேல் மாதிரி வேகத்தை சுத்தமாக குறைத்துவிட்டார். 130 - 137 கி.மீ. வேகம் வரையே அவரது பந்துவீச்சு இருக்கிறது. 

    உங்க ஸ்பீடு தான் உங்களுக்கு அழகு ரோச்!! அதுவே இல்லனா எப்படி!!?

    15:07 (IST)27 Jun 2019

    Ind vs wi Live cricket match : ஆன்லைனில் பார்க்க ஹாட்ஸ்டார் ப்ரீமியம் ஆக்டிவேட் செய்ய வேண்டுமா?

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியை தொலைக்காட்சியில் உங்களால் பார்க்க முடியவில்லையா? அப்படியெனில், உங்கள் ஸ்மார்ட் ஃபோனில், பிளே ஸ்டோர் சென்று ஹாட் ஸ்டார் ஆப்-ஐ டவுன்லோட் செய்து, ஹாட் ஸ்டார் விஐபி பேக்கை ஆக்டிவேட் செய்யுங்கள். பிறகு, லைவாக போட்டியை நீங்கள் கண்டுகளிக்கலாம். ஹாட் ஸ்டார் ப்ரீமியம் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

    15:00 (IST)27 Jun 2019

    IND vs WI Live Score Card : ரோஹித், ராகுல் களத்தில்...

    இதோ... இந்திய ஓப்பனர்கள் ரோஹித் ஷர்மாவும், லோகேஷ் ராகுலும் ரசிகர்களின் பலத்த வரவேற்பிற்கு இடையே களம் இறங்கியுள்ளனர்.  லோகேஷ் ராகுல், 2016ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியில் அடித்த மரண அடி, என் கண்கள் முன்னாடி வந்து வந்து போகுதே!!. 

    14:55 (IST)27 Jun 2019

    WI vs IND Live Score Updates : வெஸ்ட் இண்டீஸ் பலவீனம் என்ன?

    வேறென்ன... ஷார்ட் பிட்ச் பந்துகள் மட்டும் போடுவது தான். இந்த சீசனில், அவர்கள் பந்துவீச்சில் என்ன வேரியேஷன் இருந்தது? ஒன்றுமில்லை. பேட்டிங் நன்றாக செய்து என்ன பிரயோஜனம்? பந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லையெனில், வீட்டுக்கு போக வேண்டியது தான். (அல்ரெடி போயாச்சு ப்ரோ!)...

    இன்னைக்கு ரோஹித் ஷர்மாவுக்கும் ஷார்ட் பிட்ச் பந்தா போட்டா, அவரு டபுள் செஞ்சுரி அடிக்குறத யாராலும் தடுக்க முடியாது.

    14:45 (IST)27 Jun 2019

    West Indies vs India Live Score : இந்திய அணி பிளேயிங் XI

    ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி(c), விஜய் ஷங்கர், எம் எஸ் தோனி(w ), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.

    14:36 (IST)27 Jun 2019

    Ind vs wi Toss - இந்திய பேட்டிங்

    டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, அவர் விரும்பிய 'தலை' வெல்ல, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். எதிர்பார்த்தபடி  அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இதுவரை, மான்செஸ்டரில் மூன்று உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. மூன்றிலும் டாஸ் வென்ற அணிகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி அடித்த ஸ்கோர் 336,397,291. 

    அப்படியெனில், இந்தியா இன்று எவ்வளவு ரன்கள் அடிக்கும்?

    14:28 (IST)27 Jun 2019

    IND vs WI Live Cricket Match : கமான் இந்தியா...!

    இந்திய அணி வீரர்கள், ரசிகர்களின் உற்சாக வரவேற்பிற்கு இடையே பயிற்சிக்கு களமிறங்கிய போது க்ளிக்கிய புகைப்படங்கள். இந்தியா மட்டுமே, இந்த உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்பது குறிப்பிடத்தகது. 

    14:20 (IST)27 Jun 2019

    Ind vs WI Live Cricket : அட நம்ம ராதிகா!

    நடிகை ராதிகா சரத்குமார், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தை நேரில் ரசிக்க தனது குடும்பத்துடன் மான்செஸ்டர் சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

    14:15 (IST)27 Jun 2019

    Ind vs wi Live Match : இன்னும் சிறிது நேரத்தில் டாஸ்

    வணக்கம், வந்தனம், நமஷ்கார் நேயர்களே... இன்று, ஒரு முழுமையான ஒருநாள் ஆட்டத்தைப் பார்க்கவிருக்கிறோம். இந்தியா தனது நண்பனை இன்று எதிர்த்து ஆடுகிறது. அதாங்க, நம்ம வெஸ்ட் இண்டீஸ்... மதியம் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. முழுமையான கமெண்ட்ரி மற்றும் லைவ் ஸ்கோர் கார்டு காண நமது ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்...

    World Cup
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment