இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! வாய்ப்பு பெற்ற சித்தார்த் கவுல்!

சித்தார்த் கவுல், முதன்முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்

By: Updated: May 8, 2018, 07:12:52 PM

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஹைதராபாத்தில் வரும் ஜூன் 14ம் தேதி தொடங்கும் இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், அஜின்க்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வண்ணம், சசெக்ஸ் கிளப் அணிக்காக ஆட இங்கிலாந்து செல்வதால், ரஹானே கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டிக்கான வீரர்கள் பட்டியல்:

அஜின்க்யா ரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், சத்தீஸ்வர் புஜாரா, கருண் நாயர், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, ஷர்துள் தாகுர்.

அடுத்ததாக, அதே ஜூன் மாதம் அயர்லாந்து செல்லும் இந்திய அணி, இரண்டு டி20 போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளது. இதற்கு பின், ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, அங்கு மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரை தவிர்த்து, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொடர்களுக்கான அணியில், தற்போது ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் சித்தார்த் கவுல் இடம்பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், என்ன ஸ்கோர் அடித்தாலும், எதிரணிகளை அதற்கு குறைந்த ஸ்கோரில் சுருட்டி வெற்றிகளை குவித்து வரும் ஹைதராபாத் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் சித்தார்த் கவுல், முதன்முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து ஒருநாள் தொடர்:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:India announce 15 man squad for afghanistan test ajinkya rahane named captain

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X