பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை இறுதிப் போட்டி, ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இதில், முதலில் ஆடிய பாகிஸ்தான், 308 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து, கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, எட்டு விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்து வென்றது.

இதன்மூலம், இரண்டாவது முறையாக தொடர்ந்து இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை தக்க வைத்துள்ளது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

×Close
×Close