Advertisment

3 ஃபார்மட்டிலும் நம்பர் 1: கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இந்தியா

கிரிக்கெட் வரலாற்றில் 3 ஃபார்மட்டிலும் நம்பர் 1 இடம் பிடித்த முதல் ஆசிய அணி மற்றும் உலக அளவில் 2வது அணி என்கிற பெருமைகளையும் இந்தியா பெற்றுள்ளது.

author-image
Martin Jeyaraj
New Update
India Create History ICC No 1 Ranking In All Three Formats

ஐ.சி.சி கிரிக்கெட் தரவரிசையில் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Indian-cricket-team | india-vs-australia | icc: பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பவுலிங் செய்வதாக அறிவித்தார். 

Advertisment

இதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50ஓவர்கள் முடிவில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் இந்திய அணி தரப்பில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 277 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 48.4வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. இந்திய அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சுப்மான் கில் 74 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 71 ரன்களும், கேப்டன் கே.எல். ராகுல் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் எடுத்து அசத்தினர். இறுதியில், ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1 - 0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. 
 
சாதனை படைத்த இந்தியா 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற பிறகு ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டுள்ளது. இதில், 116 புள்ளிகள் பெற்று ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 2ம் இடத்தில் உள்ளது. 

ஒருநாள் தரவரிசையைப் போல் இந்திய ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் 118 புள்ளிகளுடனும், டி20 தரவரிசையில் 264 புள்ளிகளுடனும் முதல் இடத்தில் உள்ளது. இதன் மூலம் ஐ.சி.சி கிரிக்கெட் தரவரிசையில் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மேலும், கிரிக்கெட் வரலாற்றில் 3 ஃபார்மட்டிலும் நம்பர் 1 இடம் பிடித்த முதல் ஆசிய அணி மற்றும் உலக அளவில் 2வது அணி என்கிற பெருமைகளையும் இந்தியா பெற்றுள்ளது. ஆகஸ்ட் 2012ல் இந்த சாதனையை படைத்த முதல் அணி என்கிற பெருமையை தென் ஆப்பிரிக்க அணி பெற்றது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia Indian Cricket Team Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment