Advertisment

#IndvsSL இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு: 'ஒன்மேன் ஷோ' நடத்திய விராட் கோலி! சாதனை துளிகள்

இந்தியா, இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு. விராட் கோலி சதம்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
#IndvsSL இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு: 'ஒன்மேன் ஷோ' நடத்திய விராட் கோலி! சாதனை துளிகள்

இந்தியா, இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு வெற்றி இலக்காக 231 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்

Advertisment

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை காரணமாக முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் சரிவர நடைபெறாத நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புஜாரா மட்டும் 52 ரன்கள் எடுத்தார். கேப்டன் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள்.

இதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்து, இந்திய அணியை விட 122 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாம் இன்னிங்ஸில் லோகேஷ் ராகுல், தவான் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்தனர். 97 ரன்களில் தவான் ஆட்டமிழந்தார். இறுதி நாளான இன்று, இந்திய அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால், விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த வண்ணம் இருந்தன. ஒருபக்கம் கேப்டன் கோலி நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால், அதிரடியை கையில் எடுத்த கோலி, அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்கள் என அட்டகாசமாக தனது 18-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதனால், இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கோலி 119 பந்துகளில் 104 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்தார். இதில் 12 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும்.

இதன் மூலம் அதிக டெஸ்ட் சதங்கள்(11) அடித்த இந்திய கேப்டன் என்கிற சாதனையை கவாஸ்கருடன் கோலி பகிர்ந்து கொண்டார். கேப்டனாக 48 இன்னிங்ஸில் ஆடியுள்ள கோலிக்கு இது 11 சதமாகும்.

Most Test 100s as Indian skipper:

11 V KOHLI (48 inngs) *

11 S Gavaskar (74)

9 M Azharuddin (68)

7 S Tendulkar (43)

Most Test 100s for India:

51 S Tendulkar

36 R Dravid

34 S Gavaskar

23 V Sehwag

22 M Azharuddin

18* V KOHLI

Virat Kohli India Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment