worldcup 2023 | india-vs-australia | indian-cricket-team: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இந்தியா தயாராகும் நிலையில், இந்தியாவின் பலம் மற்றும் அவர்களுக்கு இடையே உள்ள சாத்தியமான சவால்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை, கேப்டன் ரோகித் இந்தியாவுக்கு தேவையான மற்றும் அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய தொடக்கத்தை கொடுத்து வருகிறார். தொடரின் தொடக்கம் முதல் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி வரையில் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை தனித்துமாக இருந்து வருகிறது. அவருக்கு சரியான இணையாக இளம் வீரர் சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார்
அவரைத் தொடர்ந்து களமாடும் விராட் கோலி தனது ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார். இந்தியாவுக்காக 10 போட்டிகளிலும் களமாடிய அவர் 711 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் அவர் விளாசிய 5 அரைசதங்கள், 3 சதங்கள், 64 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களும் அடங்கும். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் விளாசியதன் மூலம் கோலி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த இந்தியா ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க போட்டியில், 200 ரன்களைத் துரத்துவதில் இந்திய அணியை வெற்றிக் ஆழைத்துச் சென்றார். இந்தியா 2/3 என்ற நிலையில் தள்ளாடிய போது கே.எல்.ராகுலுடன் இணைந்து இந்திய இன்னிங்ஸை மீண்டும் கட்டமைத்து, இறுதியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்து, கோலி 85 ரன்களை எடுத்து அசத்தினார்.
மிடில் ஆடரில் களமிறங்கும் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் நங்கூரமாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் 526 ரன்களை குவித்து மிடில் ஆடரில் களமிறங்கி அதிக ரன்களை குவித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்து அசத்தி வருகிறார். சூரியகுமார் யாதவ் அவரின் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் ஆட்டம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. கே.எல்.ராகுல் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பதுடன், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயலாற்றி இருக்கிறார்.
இந்திய பந்துவீச்சு வரிசையில், முகமது ஷமி 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக மிரட்டி வருகிறார். மேலும், அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். ஆனால், முகமது சிராஜ் புத்திசாலித்தனமாக பந்து வீசினாலும் உலகக் கோப்பையில் நிலையாக இருக்க போராடி வருகிறார். இலங்கைக்கு எதிரான அவரது மறக்கமுடியாத ஸ்பெல் (7 ஓவர்களில் 3/16) அதிர்ச்சியளிக்கும் பேட்டிங் சரிவுக்கு முக்கியமானது என்பதை நிரூபித்தாலும், அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பராக இருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 9 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக்கொடுத்தார். 32.61 பந்துவீச்சு சராசரியுடன், போட்டியில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஓவர்களைக் கொண்ட இந்திய பந்துவீச்சாளர்களிடையே சிராஜ் அதிக சராசரியைப் பெற்றுள்ளார், இது அவரது செயல்திறனில் அதிக ஸ்திரத்தன்மை தேவை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இதுவரை இந்த தொடரில் லோ-ஆடரில் உள்ள இந்திய வீரர்கள் அதிகம் பேட்டிங் செய்யவே இல்லை. ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டி போன்ற உயர் அழுத்தப் போட்டியில் எதுவும் நடக்கலாம். அவர்களின் பேட்டிங் இதுவரை சோதிக்கப்படாமல் இருக்கின்றன. ஆதலால், போட்டியின் முக்கியமான இறுதி கட்டங்களில் அழுத்த சூழ்நிலைகளை கையாள அவர்கள் தயாராக இருப்பதைப் பற்றிய கவலையை எழுப்புகிறது. கடந்த போட்டியில், இறுதி ஓவரில் சூர்யகுமார் பேட்டிங் செய்ய வந்தார். ஜடேஜா பேட்டிங் செய்யவே இல்லை.
ஹர்திக் பாண்டியா இல்லாதது இந்தியாவின் பேட்டிங் ஆழத்தை கணிசமாக பலவீனப்படுத்தியது. அணி கடந்த 6 போட்டிகளில் ஆறு பேட்டர்களுடன் விளையாடியுள்ளது. மேலும் பும்ரா மற்றும் ஷமி போன்ற பந்துவீச்சாளர்கள் சில பேட்டிங் திறமைகளைக் கொண்டிருந்தாலும், கிரீஸில் கடைசி வரை நிலைத்து நிற்கும் அவர்களின் திறன் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இதற்கு நேர்மாறாக, கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களின் ஆல்-ரவுண்ட் திறமையிலிருந்து ஆஸ்திரேலியா பலன் அடைந்துள்ளது. அவர்கள் மீண்டும் மீண்டும் அழுத்தத்தைக் கையாளும் திறனையும், அவர்களின் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில், இருவரும் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியமான ஜோடியை உருவாக்கினர்.
இதேபோல், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் முன்மாதிரியான 68 பந்துகளில் ஆட்டமிழக்காமல் இருந்ததை யாரால் மறக்க முடியாது. அவர்கள் 292 ரன்களை சேஸில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடினர். அப்போது ஒரு முனையில் க்ளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டம் ஆஸ்திரேலிய அணி மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது.
நாக் -அவுட் போட்டியில் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், உறுதி என்பது மழுப்பலாக இருக்கும். ஆனால், போட்டி முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட பலம், அபாரமான பேட்டிங் ஆர்டர் முதல் சிறந்த தரமான பந்துவீச்சு வரை, நிச்சயமாக இந்தியாவை ஆதிக்க சக்தியாக நிலைநிறுத்துகிறது.
அரையிறுதியில் வில்லியம்சன் மற்றும் மிட்செல் ஆகியோருக்கு இடையேயான அச்சுறுத்தலான பார்ட்னர்ஷிப்பை எதிர்கொண்ட இந்தியா, அதனை அமைதியான முறையில் கையாண்டு அந்த ஜோடியை உடைத்து மிரட்டி திருப்புமுனையை கொண்டுவந்தது. இதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட்டு 3வது முறையை சாம்பியன் பட்டத்தை வாகை சூடும் என நம்புவோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.