இந்தியாவுக்கு நீண்ட சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி! போட்டிகள் குறித்த முழு விவரம்

இலங்கை கிரிக்கெட் அணி, நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 24-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது

இலங்கை கிரிக்கெட் அணி, நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 24-ஆம் தேதி வரை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தகவலின்படி, இலங்கை முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆறு வார காலங்கள் நடைபெறும் இத்தொடருக்கு முன்பாக பயிற்சிப் போட்டிகளும் நடக்க உள்ளன. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது.

டி20 தொடர் டிசம்பர் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம்:

இந்தியா vs இலங்கை: முதல் டெஸ்ட்
நவம்பர் 16-20, கொல்கத்தா

இந்தியா vs இலங்கை: இரண்டாவது டெஸ்ட்
நவம்பர் 24-28, நாக்பூர்

இந்தியா vs இலங்கை: மூன்றாவது டெஸ்ட்
டிசம்பர் 2-6, டெல்லி

இந்தியா vs இலங்கை: முதல் ஒருநாள்
டிசம்பர் 10, தரம்சாலா

இந்தியா vs இலங்கை: இரண்டாவது ஒருநாள்
டிசம்பர் 13, மொஹாலி

இந்தியா vs இலங்கை: மூன்றாவது ஒருநாள்
டிசம்பர் 17, விசாகப்பட்டினம்

இந்தியா vs இலங்கை: முதல் T20I
டிசம்பர் 20, கட்டாக்

இந்தியா vs இலங்கை: இரண்டாம் T20I
டிசம்பர் 22, இந்தூர்

இந்தியா vs இலங்கை: மூன்றாவது T20I
டிசம்பர் 24, மும்பை

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India to host sri lanka for full tour in november december

Next Story
ஊக்க மருந்து தடை முடிவு… 15 மாதத்திற்கு பின்னர் டென்னிஸில் ஷரபோவா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com