எதிர்பார்த்தபடி ஆஸ்திரேலியாவின் பவுலிங்கிடம் சரண் அடைந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால், பவுலிங்கில் எப்படி செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்தப் போட்டியின் முடிவு அமையும்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அடிலைட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் விஜய் 11 ரன்னிலும், ராகுல் 2 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர். ராகுலுக்கு அளித்த வாய்ப்புகளுக்கு End Card போட வேண்டிய நேரமிது. மாயங்க் அகர்வால் எனும் Proved Batsman-னுக்கு எப்போது வாய்ப்பு தரப் போகிறது பிசிசிஐ?
கேப்டன் கோலி, கம்மின்ஸ் ஓவரில் கல்லி திசையில், உஸ்மான கவாஜாவின் அபாரமான கேட்ச்சால் அவுட்டாகி 3 ரன்னில் வெளியேறினார்.
ஒருபக்கம், புஜாரா நங்கூரம் போட்டு நிற்க, மறுபக்கம் Fast and Furious ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மா, இரண்டு சிக்சர்கள் உதவியுடன் 37 ரன்னில் பேக் டூ பேக் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு பாடம் கற்றார்.
ரிஷப் பண்ட் 38 பந்தில் 25 ரன்னுடன் வெளியேற, புஜாரா - அஷ்வின் பார்ட்னர்ஷிப் சிறிது நேரம் விக்கெட் வீழ்ச்சிக்கு தடை போட்டது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய புஜாராவின் இன்னிங்ஸ் கிளாஸ் ரகம். இன்று தனது 65வது டெஸ்ட் போட்டியில் ஆடிய புஜாரா தனது 16வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் முடியும் நேரத்தில் ரன் அவுட்டாக, 246 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து வெளியேறினார் புஜாரா.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்களின் பவுலிங்கில் என்ன ஒரு ஆக்ரோஷம்!.
குறிப்பாக ஹேசில்வுட் வாவ் ரகம்...
ஆனால், இவை அனைத்தையும் மீறி, புஜாரா வெளிப்படுத்திய அபாரமான டெஸ்ட் கிரிக்கெட்டர் உடல் மொழியை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்!.
புஜாரா குறித்த ஒரு ஆச்சர்யமான தகவல் உங்களுக்காக,
புஜாரா இந்த காலத்து டிராவிட் என்று பலரும் அழைப்பதுண்டு. அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த Coincidence நமக்கு உணர்த்துகிறது.
அதாவது, டெஸ்ட் போட்டிகளில் டிராவிட்டும், புஜாராவும் 3000, 4000, 5000 ரன்களை ஒரே எண்ணிக்கையிலான இன்னிங்ஸில் அடித்துள்ளார்கள்.
67 இன்னிங்ஸில் 3000 ரன்கள்
84 இன்னிங்ஸில் 4000 ரன்கள்
108 இன்னிங்ஸில் 5000 ரன்கள்
செம-ல!