6 ஓவர்களில் 48 ரன்கள் என்பது கடினம் என்றும், “டக் வொர்த் லூயிஸ்” விதியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதனையடுத்து, முதல் டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் ரன் குவித்த ஆஸ்திரேலிய அணி பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால், அந்த அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால் அத்துடன் ஆஸி அணியின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்தியாVsஆஸ்திரேலியா முதல் டி20-யில் இந்தியா வெற்றி!
இதன்பின்னர் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 11 ரன்களில்(7 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்ஸர்) வெளியேறினார். இதனையடுத்து கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான் ஜோடி அதிரடி காட்டி இந்திய அணி வெற்றிபெற செய்தது. ஷிகர் தவான் 15 ரன்களுடனும் (12 பந்து, 3 பவுண்டரி), விராட் கோலி 22 ரன்களுடனும்(14 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 5.3 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்த பின்னர் விராம் கோலி கூறும்போது: டக்வொர்த் லூயிஸ் விதி என்ன என்பதை உண்மையாகவே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்த நிலையில், இந்திய அணிக்கு 40 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்படலாம் என்று கருதினோம். ஆனால், 6 ஓவர்களில் 48 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது என்பது உண்மையாகவே கடினமான ஒன்றுதான்.
இது ஒட்டுமொத்த இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் மற்றும் மர்ம பந்துவீச்சாளர்கள் அடங்கியிருப்பது இந்திய அணிக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. புவனேஷ் குமார், பும்ரோ ஆகியோர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், யார்க்கர், ஸ்லோ பால் ஆகியவற்றை வீசுவதற்கு நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
துரதிஷ்டவசமாக பல போட்டிகளில் பங்கேற்காகத ஷிகர் தவான், தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இப்போட்டியில், ஷிகர் தவான் அடித்த 15 ரன்கள் கூட அவருக்கு தன்னப்பிக்கையை கொடுக்கும் என்றார்.
வார்னர் கூறும்போது: போட்டியின் முடிவு என்பது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. முன்னிலை வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்த நிலையில், மிடில் ஆட்டக்காரர்கள் ரன் குவிக்க தவறிவிட்டனர் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.