இந்தியா அபார வெற்றி! சரித்திரத்தில் முதன் முறையாக சாதித்த கேப்டன் விராட் கோலி

இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அடிலைடில் நடந்து முடிந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 235 ரன்களும் எடுத்தன. இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுக்க, 323 ரன்கள் இலக்கை நோக்கி 2ம் இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலியா.

நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று இறுதி நாள் ஆட்டத்தில், அந்த அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

India vs Australia: இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் அப்டேட்ஸ்

10:50 AM – ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதன் முறையாக முதல் டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்ற இந்திய அணியின் முதல் கேப்டன் எனும் பெருமையை விராட் கோலி பெறுகிறார்.

10:40 AM – 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

10:28 AM – ஆஸ்திரேலிய பவுலர்கள் அடித்த ரன்கள்

பேட் கம்மின்ஸ் – 28 (121 பந்துகள்)

மிட்சல் ஸ்டார்க் – 28 (44 பந்துகள்)

நாதன் லயன் – 36* (44 பந்துகள்)

10:18 AM – உண்மையில் ஆஸ்திரேலிய லோ-ஆர்டர் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசி விக்கெட்டை வீழ்த்தக் கூட, இந்தியா போராடி வருகிறது.

10:00 AM – இந்தியா வெற்றிப் பெற இன்னும் ஒரே ஒரு விக்கெட்…

09:55 AM – 121 பந்துகளை சந்தித்து, இந்திய பவுலர்களுக்கு சவால் அளித்த கம்மின்ஸ் 28 ரன்னில் அவுட்டானார். ஒருவழியாக, பும்ரா அவரை வெளியேறினார்.

09:50 AM – கம்மின்ஸுடன் ஜோடி சேர்ந்த நாதன் லயனும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். பந்துகளை பயப்படாமல் எதிர்கொள்ளும் லயன், லோ ஆர்டர் பேட்ஸ்மேன் போலவே ஆடி வருகிறார். அதிலும், கம்மின்ஸ் டாப் கிளாஸ்.

09:40 AM – வெற்றிப் பெற போவது யார் என்பதில் பெரும் இழுபறி நீடிக்கிறது.

09:25 AM – 28 ரன்னில் ஸ்டார்க் அவுட்… ஷமி ஓவரில் வெளியேறினார்.

09:18 AM – ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருவரும் 40 ரன்களுக்கும் மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.

09:00 AM – அடிலைட் டெஸ்ட் போட்டியில், இதுவரை 10 கேட்சுகளை பிடித்திருக்கிறார் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

08:55 AM – கம்மின்ஸ் 70 பந்துகளுக்கும் மேலாக களத்தில் இருக்கிறார். பாராட்டலாம்!.

08:50 AM – இத்தனை ஆண்டு கால வரலாற்றில், இந்திய அணி, ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்றதில்லை.

11 ஓப்பனிங் டெஸ்ட் போட்டியில், இந்தியா 9ல் தோற்றுள்ளது. 2ல் டிரா செய்துள்ளது.

08:40 AM – கடந்த 100 வருடத்தில், அடிலைடில் 200 ரன்களுக்கு மேலான டார்கெட்டை ஆஸ்திரேலியா ஒருமுறை கூட அடித்து வென்றதில்லை.

200க்கும் மேல் சேஸிங் செய்த போட்டிகள் – 14
வெற்றி – 0
தோல்வி – 6
டிரா – 8

08:35 AM – கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் களத்தில் உள்ளனர்.

08: 15 AM – வாவ்… ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே, ஆஸி., கேப்டன் டிம் பெய்னின் விக்கெட்டை கைப்பற்றினார் பும்ரா… இன்னும் மூன்று விக்கெட்டுகளே பாக்கி… கமான் இந்தியா!!!

08:10 AM – உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிப் பெறுமா இந்தியா?

08:00 AM – ஒருவேளை ஆஸ்திரேலியா தோற்றால், உள்நாட்டில் கடைசியாக அவர்கள் விளையாடிய மூன்று சீசனில், இரண்டில் முதல் போட்டியிலேயே தோற்ற அவப்பெயர் கிடைக்கும்.

07:45 AM – ஒருவேளை இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வென்றால், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையைப் பெறுவார். அதேபோல், இந்த மூன்று நாடுகளிலும் ஒரே ஆண்டில், டெஸ்ட் போட்டிகளில் வென்ற முதல் ஆசிய அணி எனும் பெருமையை இந்திய அணி பெறும்.

07:30 AM – இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை, ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிப் பெற இன்னும் 137 ரன்கள் தேவை.

07:15 AM – இந்திய அணி இன்னும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால், வரலாற்றுச் சாதனையை படைக்க முடியும். அதேசமயம், டிம் பெய்ன் – கம்மின்ஸ் பார்ட்னர்ஷிப் நன்றாகவே ஆடி வருகிறது. சிங்கிள்ஸ், டபுள்களில் அவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close