விராட் கோலியின் சதம் வீண்! ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Ind vs Aus 3rd ODI Score: ஆஸ்திரேலியா வெற்றி

India vs Australia 3rd ODI: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

09:15 PM – இந்திய அணி 48.2 ஓவரில், 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 123 ரன்கள் எடுத்தார்.

08:50 PM – விஜய் ஷங்கர் அவுட்!. 32 ரன்களில் நாதன் லயன் ஓவரில் விஜய் ஷங்கர் கேட்ச் ஆனார். இந்தியா தனது 7வது விக்கெட்டை இழந்தது.

08:40 PM – இந்திய அணி 42 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா களத்தில் உள்ளனர்.

08:30 PM – விக்கெட் கீப்பர் எப்படி செயல்படணும் என்பதை நிரூபித்த தோனி! அசந்து போன மேக்ஸ்வெல்! (வீடியோ)

08:20 PM – கோலி அவுட்!. கேப்டன் கோலி 123 ரன்களில் ஆடம் ஜம்பா ஓவரில் போல்ட் ஆனார்.

08:00 PM – 41வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார் விராட் கோலி. இரண்டாவது போட்டியில் சதம் அடித்திருந்த நிலையில், இன்றைய மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து, கோலி சகாப்தம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.

07:20 PM – இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தவான் 1 ரன்னிலும், ரோஹித் ஷர்மா 14 ரன்னிலும், அம்பதி ராயுடு 2 ரன்னிலும், மண்ணின் மைந்தன் தோனி 26 ரன்னிலும் அவுட்டானார்கள். விராட் கோலி, கேதர் ஜாதவ் அடி வருகின்றனர்.

04:30 PM – ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உஸ்மான் கவாஜா 104 ரன்களில் அவுட்டாக, மேக்ஸ்வெல், ஜடேஜாவின் அற்புத த்ரோ மற்றும் தோனியின் அபார ஸ்டெம்பிங்கால் 47 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யபப்ட, ஷான் மார்ஷ் 7 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 0 ரன்னிலும் அடுத்தடுத்து குல்தீப் ஓவரில் அவுட்டானார்கள்.

04:00 PM – தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது முதல் ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். தவிர, கவாஜா – பின்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.

03:25 PM – இந்தியாவுக்கு எதிராக தொடக்க வீரர்கள் பின்ச் – கவாஜா (146) ரன்கள் அடித்த போது, இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களின் பெஸ்ட் பார்ட்னர்ஷிப் இதுவாக அமைந்தது. முன்னதாக, 2017ம் ஆண் ஆண்டு பெங்களூரில் பின்ச் – வார்னர் தொடக்க ஜோடி 231 அடித்த ரன்கள், பெஸ்ட் பார்ட்னர்ஷிப்பாக இதுவரை உள்ளது.

03:15 PM – ஆஸ்திரேலிய அணி தொடக்க விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் அடித்து தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஃபின்ச், கவாஜா ஜோடி 131 ரன்கள் அடித்த போது, 2018 ஜனவரி மாதம் முதல் (19 போட்டிகளில்) அந்த அணி தனது பெஸ்ட் பார்ட்னர்ஷிப்பை இன்று தான் பதிவு செய்துள்ளது.

02:50 PM – கேப்டன் ஃபின்ச்சின் அரை சதத்தைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் அடித்துள்ளார்.

02:35 PM – ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். தவிர, ஆஸி., அணி முதல் விக்கெட்டிற்கு சதம் அடித்துள்ளது.

02:00 PM – 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.

01:20 PM – ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனியர் பவுலர் கோல்டர் நைல் நீக்கப்பட்டு, ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

01:05 PM – இத்தொடரில் முதன் முறையாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்று ராணுவ தொப்பி அணிந்து விளையாட உள்ளனர்.

12:45 PM –  பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close