India vs Australia 4th ODI: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் இரு போட்டிகளை வென்ற இந்தியா, ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோற்றது.
2வது போட்டியில் விராட் கோலியின் சதத்தால் வெற்றிப் பெற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் விராட் மீண்டும் சதமடித்தும் தோற்றது.
தொடக்க வீரர்கள் ரோஹித், தவான் ஃபார்ம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல்
மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவின் நிலையற்றதன்மை (Inconsistency) இரண்டாவது சறுக்கல்.
ரவீந்திர ஜடேஜாவின் அடையாளமே ஆல் ரவுண்டர் என்பது தான். ஆனால், அவரின் பங்களிப்பு....? இது மூன்றாவது சறுக்கல்.
பும்ராவைத் தவிர, மற்றவர்களின் பவுலிங் ஸ்திரத்தன்மையில் சிக்கல்.. இது நான்காவது சறுக்கல்.
மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு விஷயங்கள், இந்திய அணியின் தடுமாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.
இன்றைய போட்டியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என கடந்த போட்டியின் போதே கேப்டன் கோலி சொல்லியிருப்பதால், குறைந்தது அணியில் மூன்று மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்தச் சூழ்நிலையில் இன்று நான்காவது ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றுமா? அல்லது ஆஸ்திரேலியா மீண்டும் தனது ஆதிக்கத்தை இந்தியா மீது செலுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Aus vs Ind 4th ODI: இந்தியா vs ஆஸ்திரேலியா
09:40 PM - இந்தியா நிர்ணயித்த 358 ரன்கள் இலக்கை, ஆஸ்திரேலியா 47.5வது ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபாரமாக வென்றது. இறுதிக் கட்டத்தில் ஆஷ்டன் டர்னர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாச, ஆஸ்திரேலியாவின் வெற்றி வசமானது.
08:15 PM - ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இரு விக்கெட்டுகளை இழந்தாலும், உஸ்மான் கவாஜா - பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கவாஜா 91 ரன்களில் பும்ரா ஓவரில் அவுட் ஆனார்.
04:20 PM - கேப்டன் விராட் கோலி 7 ரன்னில் அவுட் ஆனார். ரிச்சர்ட்சன் ஓவரில், அலெக்ஸ் கேரேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
04:05 PM - பேட் கம்மின்ஸ் ஓவரில் 143 ரன்களில் தவான் போல்டானார். தற்போது விராட் கோலி, லோகேஷ் ராகுல் களத்தில் உள்ளனர்.
03:45 PM - ஷிகர் தவான் தனது 16வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
03:35 PM - ரோஹித் ஷர்மா 95 ரன்களில் கேட்ச் ஆனார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - தவான் கூட்டணி 193 ரன்கள் குவித்தது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய வீரர்களின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்துள்ளது.
193 ரோஹித் - தவான், மொஹாலி, 2019
178 ரோஹித் - தவான், நாக்பூர், 2013
176 ரோஹித் - தவான், ஜெய்ப்பூர், 2013
175 சச்சின் - கங்குலி, கான்பூர், 1998
02:55 PM - 15வது சதக் கூட்டணி அமைத்த ரோஹித் - தவான் ஜோடி.
21 சச்சின் - கங்குலி
16 ஆடம் கில்கிறிஸ்ட் - மேத்யூ ஹெய்டன்
15 கிரீன்டிட்ஜ் - ஹெய்ன்ஸ்
15 ரோஹித் - தவான்
02:30 PM - கடந்த சில ஒருநாள் போட்டிகளில் தடுமாறி வந்த தவான், தனது 28வது ஒருநாள் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
02:00 PM - இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்துள்ளது.
01:33 PM - தொடக்க வீரர்கள் ரோஹித், தவான் களமிறங்கினார். இவர்கள் இருவருமே தங்களது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
01:03 PM - டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில், நான்கு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அம்பதி ராயுடுவுக்கு பதிலாக லோகேஷ் ராகுலும், தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிஷப் பண்ட்டும், ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சாஹலும், முகமது ஷமிக்கு பதிலாக புவனேஷ் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.