India vs Australia 5th ODI : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
இன்றைய இறுதிப் போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை உங்கள் ஐஇதமிழில் உடனுக்குடன் கண்டுகளிக்கலாம்.
Aus vs Ind 5th ODI: இந்தியா vs ஆஸ்திரேலியா
09:20 PM - பத்து வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி ஒருநாள் கோப்பையை இழந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு தோனி தலைமையில் தோற்ற பிறகு, விராட் கோலி தலைமையில் இப்போது தான் இந்திய அணி தோற்கிறது. அதேபோல், 2015க்குப் பிறகு, இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை இழக்கிறது.
09:15 PM - இந்திய அணி 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. அதிகபட்சமாக, ரோஹித் 56 ரன்களும், புவனேஷ் குமார் 46 ரன்களும், கேதர் ஜாதவ் 44 ரன்களும் எடுத்தனர்.
07:45 PM - ஆடம் ஜம்பா ஓவரில் ரோஹித் ஷர்மா, விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆறு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
07:15 PM - விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் 16 ரன்களில் அவுட் ஆனார்கள்.
06:40 PM - கோலி அவுட்
கேப்டன் விராட் கோலி, 20 ரன்களில், ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். 15 ஓவருக்குள்ளாகவே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருப்பது நிச்சயம் லேசான பின்னடைவு தான்.
06:15 PM - தவான் அவுட்
தொடக்க வீரர் ஷிகர் தவான் 12 ரன்னில் பேட் கம்மின்ஸ் ஓவரில் கேட்ச் ஆனார்.
05:15 PM - ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.
04:45 PM - ஆஸ்திரேலிய அணி, தனது பின்வரிசை வீரர்களின் விக்கெட்டுகளை அடித்தடுத்து இழந்து தடுமாறி வருகிறது.
04:05 PM - பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் அவுட்
அரைசதம் அடித்த ஹேண்ட்ஸ்கோம்ப், ஷமி ஓவரில் 52 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
03:55 PM - சதம் அடித்த உடனேயே கவாஜா, புவனேஷ் ஓவரில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய Inform பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், 1 ரன்னில் ஜடேஜா ஓவரில் கேட்ச் ஆனார்.
03:40 PM - உஸ்மான் கவாஜா சதம்
உஸ்மான் கவாஜா தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இத்தொடரில் இது அவரது இரண்டாவது சதமாகும்.
இத்தொடரில் மட்டும் இவர் அடித்திருக்கும் ரன்கள் எவ்வளவு தெரியுமா?
முதல் போட்டி - 50
இரண்டாவது போட்டி - 38
மூன்றாவது போட்டி - 104
நான்காவது போட்டி - 91
ஐந்தாவது போட்டி - 100
மொத்தம் - 383 ரன்கள்
03:00 PM - தொடரும் கவாஜா ஆதிக்கம்
ஆஸ்திரேலியா தொடக்க வீரர், இந்திய பவுலர்களை மீண்டுமொரு முறை அசால்ட் செய்திருக்கிறார். இன்றையப் போட்டியிலும் அரைசதம் அடித்திருக்கிறார்.
02:30 PM - பின்ச் அவுட்!
ரவீந்திர ஜடேஜா ஓவரில், கேப்டன் ஆரோன் பின்ச் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 76 ரன்கள் சேர்த்தது.
02:00 PM - ஆஸ்திரேலியா நிதான பார்ட்னர்ஷிப்
பெரியளவு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவதாக தெரியவில்லை. 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகிறது. வே டூ கோ இந்தியா...
01:35 PM - ஆரோன் ஃபின்ச் - உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷமி, புவனேஷ் ஜோடி பவுலிங் தாக்குதலை தொடுத்து வருகிறது.
01:05 PM - ஆஸ்திரேலியா பேட்டிங்
ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து பேசிய கேப்டன் விராட் கோலி, "உலகின் சிறந்த சேஸிங் அணி என்பதை இன்று நாங்கள் நிரூபிப்போம். லோகேஷ் ராகுலுக்கு பதிலாக முகமது ஷமியும், சாஹலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் இன்று களமிறங்குகின்றனர். நாங்கள் இப்போது பக்கா பேலன்ஸ்ட் அணி" என்றார்.
12:40 PM - 10 ஆண்டுகள் நான்-ஸ்டாப் வெற்றி
இந்த ஒருநாள் தொடரோடு சேர்த்து, இதுவரை 9 ஒருநாள் தொடர்களில், இந்தியாவுக்கு வந்து ஆஸ்திரேலியா ஆடியிருக்கிறது. அதில், 1986, 2010, 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த தொடர்களை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. நான்கு தொடர்களில் தோற்றிருக்கிறோம்.
அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று ஒருநாள் தொடரிலும் இந்தியா தொடர்ச்சியாக வென்று கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. கடைசியாக, 2009ல் நடந்த ஒருநாள் தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
12:15 PM - கடந்த நான்காவது போட்டியில் காயம் காரணமாக முகமது ஷமி அணியில் இடம் பெறவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதி அடைந்திருப்பதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.