India vs Australia Preview: ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியா சந்திக்க வேண்டிய அந்த 'ஆறு' பந்துகள்!

உன்னை அச்சுறுத்தும் பவுலரை அடையாளம் கண்டு அவர் ஓவரை அப்படியே கட்டைப் போட்டு நின்றுவிடு. மற்ற பவுலர்களை பொளந்து விடு

ஒரு சவாலான களத்தை ஜூன்.9ம் தேதி எதிர்நோக்கி இருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

Defending World Champion ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்பதால் நிச்சயம் அல்ல. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானம் என்பதால் சவாலான களம் என்றும் பிரதிபலிக்க வேண்டியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான Straight வெற்றிக்குப் பிறகு, ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர் நோக்கி உள்ளது இந்தியா. ஒருவாரமாக நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை 2019 தொடர் போட்டிகளை பார்க்கும் போது, இங்கே Previous Records-களுக்கு வேலை இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு, இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒவ்வொரு மேட்சிலும் செமத்தியாக அடி வாங்கிய பாகிஸ்தான், இந்த உலகக் கோப்பையில் அதே இங்கிலாந்தை அதே இங்கிலாந்து மண்ணில் வைத்து வீழ்த்தி இருக்கிறது.

வங்கதேசம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துகிறது, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை துவம்சம் செய்கிறது (பயிற்சி போட்டி), நியூசிலாந்து இலங்கையை சின்னாபின்னமாக்கி வெற்றி பெறுகிறது, அதே இலங்கை கோப்பையை வெல்லும் ரேஸில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை வீழ்த்துகிறது.

இங்கே ரெக்கார்ட்ஸ் பேசவில்லை. டிராக்ஸ் பேசுகிறது, பிட்ச் பேசுகிறது, இங்கிலாந்தின் வானிலை பேசுகிறது. இவற்றைப் பொறுத்தே அன்றைய நாளின் போட்டி முடிவுகள் அமைகிறது.

இந்த சூழலை குறிப்பிட்ட தினத்தில் எந்த அணி சரியாக பயன்படுத்துகிறதோ, அந்த அணிக்கே அன்று சுபம் போடப்படுகிறது. அது எந்த அணியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆக, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி, இவற்றையெல்லாம் அறியாமல் இருக்குமா என்ன? ஆனால், அதையும் தாண்டி ஆறு பந்துகளை இந்தியா க்ளீயர் செய்ய வேண்டி இருக்கிறது. ஆஸ்திரேலியாவை வெல்ல…

முதல் பந்து: டேவிட் வார்னர்

இந்தியாவுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பட்டியலில் வார்னருக்கு தனி இடம் உண்டு. இவர் இப்போது பழைய ‘பாட்ஷா’-வாக இல்லையென்றாலும், மாணிக்கமாக சிறப்பாக ஆட்டோ ஓட்டுகிறார். இவரது இனிஷியல் விக்கெட் இந்தியாவுக்கான பூஸ்ட் என்றால் அது மிகையல்ல. 30 ரன்களுக்கு மேல் இவரை நிற்கவிட்டால், ஆஸ்திரேலியா 280+ அடிக்கும் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டாவது பந்து: ஸ்டீவன் ஸ்மித்

இந்த கேரக்டர் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை. Belter பிட்சாக இருந்தாலும் சரி, Tough விக்கெட்டாக இருந்தாலும் சரி, பவுலர்களை ஃப்ளாஷ் செய்வதில் வின்டேஜ் ஸ்மித்தாகவே இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் அவரது Backlift சொல்கிறது, அவரது சர்வதேச Return-ன் வலிமையை. ஸோ, இவரை 40 ரன்களுக்கும் மேல் இந்தியா களமாட விடவே கூடாது.

மூன்றாவது பந்து: பும்ரா

ஆஸ்திரேலிய போட்டியைப் பொறுத்தவரை, விராட் கோலி சதமடிப்பதை விட, முக்கியமானது இங்கு பும்ராவின் பவுலிங். ஆம்! ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் எதேச்சையாக விழுவதாக இருக்கவே கூடாது. அவர்கள் விக்கெட்டுகளில் ஆக்ரோஷம் தெரிய வேண்டும். நுணுக்கம் இருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒவ்வொரு ஆஸி., வீரருக்கும் ‘ஸ்கெட்ச்’ போடப்பட்டிருக்க வேண்டும். அதனை பும்ரா மாதிரியான பவுலர்ஸ் Beamer பந்துகளாலும், க்ளீயர் யார்கர்களாலும் கச்சிதமாக செயல்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவை அதிக ரன்கள் அடிக்க விட்டால், அவர்களது சீம் பவுலர்ஸ்-களை கடந்து இலக்கை எட்டுவது என்பது சாத்தியத்திற்கு வெகு தொலைவில்!.

நான்காவது பந்து: மிட்சல் ஸ்டார்க் 

ஒண்ணுமில்ல… இப்போ ஐபிஎல்-ல நாம ஆரம்பிச்சு வச்சு ஒரு டிரென்ட் தான்…. ‘உன்னை அச்சுறுத்தும் பவுலரை அடையாளம் கண்டு அவர் ஓவரை அப்படியே கட்டைப் போட்டு நின்றுவிடு. மற்ற பவுலர்களை பொளந்து விடு‘. இந்த ஃபார்முலா-வை அப்படியே இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்டார்க் விஷயத்தில் Implement செய்தால், ‘சாரே… இந்த மேட்ச் நம்மளோடது சாரே’!.

ஐந்தாவது பந்து: கென்னிங்டன் ஓவல் மைதானம்

இப்போட்டியில் குளிர் வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17-19 டிகிரி செல்சியல் வெப்பநிலை இருக்கும். காலையில் லேசான மழை பெய்யலாம். ஆனால், பிற்பகுதியில் ஓரளவுக்கு சூரியன் எட்டிப் பார்க்கும்.

பேட்டிங் செய்வதற்கு கென்னிங்டன் ஓவல் பிட்ச் கடினமானது என்பதை மறந்துவிடக் கூடாது. புற்கள் நிறைந்து காணப்படும் இந்த பிட்சுடன் குளிர் வானிலையும் சேர்ந்து வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தால், அப்படிப்பட்டதான சூழியலில் ஆஸ்திரேலியாவுடன் நாம் மோதுவது என்பது நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஒன்று.

ஆறாவது பந்து: அம்பயரிங்

என்னத்த சொல்ல… நேத்து(ஜூன்.6) வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா மேட்சில் அம்பயரிங்கை பார்த்த போது, நடப்பது உலகக் கோப்பையா இல்ல, ஐபிஎல்லா-னு ஹெவியா டவுட் வந்துட்டு. நம்ம தனுஷே கடுப்பாகி ட்வீட் போடுற அளவுக்கு அம்பயர்ஸ் செயல்பாடு மோசமா இருந்திருக்குன்னா பார்த்துக்கோங்க… ஸோ, யார் கண்டா அம்பயரிங் கூட நமக்கு எமனா அமையலாம்!

மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் எப்படியாவது சாதுர்யமாக, திறமையாக நமது வீரர்கள் கடந்துவிட்டால் இந்தியாவின் வெற்றியை யாராலும் தடுத்த முடியாது!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close