சொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா! டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா?

‘Australia is a very tough place to tour and play cricket’ என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். ஆனால், இன்று இந்த வாக்கியம் நியாயமானதா? என்று யோசிக்கும் நிலைமை வந்துவிட்டது.

India vs Australia t20 series - சொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா! டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா?
India vs Australia t20 series – சொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா! டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா?

‘A Best Opportunity Series’ என்று சொல்லலாம், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே, மகா மட்டமாக விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த அணி. உலக அணிகளிடம் அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில்.

இந்த Critical தருணத்தில் தான் இந்திய அணியை எதிர் கொள்ளவிருக்கிறது ஆஸ்திரேலியா. முதலில் வரும் 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க உள்ளது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(வி.கீ), க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், பும்ரா, கலீல் அஹ்மத், உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், நாதன் கோல்டர் – நைல், க்ரிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், பென் மெக்டெர்மோட், டி ஆர்சி ஷார்ட், பில்லி ஸ்டேன்லேக், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா.

இந்தியாவைப் பொறுத்தவரை, தோனி மட்டும் தான் அணியில் இல்லை. மற்றபடி Bench Strength வலுவாக உள்ளது.

டாப் ஆர்டரில் இறங்கினாலும் விராட், ரோஹித், தவான் தான் அணியின் பில்லர்களாக உள்ளனர்.  ஒருவர் போனால் இன்னொருத்தர் என்ற ரீதியில் தான் அணியின் பேட்டிங்கை வலுவாக வைத்துள்ளனர். இவர்கள் மூவரும் ஒருசேர ஃபெயிலியர் ஆகும் பட்சத்தில், இந்த டி20 தொடரில், இந்தியாவின் பேட்டிங்கை ஆஸ்திரேலியா டேமேஜ் செய்யலாம்.

‘அப்படின்னா, மீதம் உள்ள பேட்ஸ்மேன்ஸ்-லாம் சும்மாவா?’ என்று கேட்டுவிட வேண்டாம். லோகேஷ் ராகுல், தினேஷ், மனீஷ், ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர். ஆனால், இதில் தினேஷ் கார்த்திக்கை தவிர மற்றவர்களிடம் Consistency இல்லை. அதுதான் பிரச்சனை. இவர்கள் அனைவருமே மேட்ச் வின்னர்கள் தான். ஆனால், ‘கண்டிப்பா நிப்பான்யா’ என்று நாம் நம்ப முடியாது என்பது தான் குறை.

க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தங்களின் ஆல் ரவுண்ட் திறமையை மீண்டும் காட்ட நல்ல வாய்ப்பு.

பவுலிங்கில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், பும்ரா, கலீல் அஹ்மத், உமேஷ் யாதவ் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள் என்று துணிந்து சொல்லலாம். பும்ராவுக்கு மட்டும் இத்தொடர் முழுவதும்  காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று வேண்டிக் கொண்டால் சிறப்பு.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, ஆரோன் ஃபின்ச் கேப்டன். வேறு யாரும் இல்லாத நிலையில் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஆஸி நிர்வாகத்துக்கு.

இன்று நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கூட, ஃபின்ச் தலைமையிலான ஆஸி., அணி தோற்று தொடரை இழந்துள்ளது. அதுவும், அவர்கள் சொந்த மண்ணில்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி தோற்ற அதே அணி தான், இந்தியாவுக்கு எதிராகவும் விளையாட உள்ளது.

ஆரோன் ஃபின்ச் தவிர, இந்த டி20 தொடரில், ஆஸி., அணிக்கு நம்பிக்கை அளிக்கும் பேட்ஸ்மேன்கள் இருவர் மட்டுமே.

க்ரிஸ் லின்,

கிளென் மேக்ஸ்வெல்.

இவர்களை வைத்து தான் ஃபின்ச் ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும்.

மற்றபடி, அந்த அணியின் பேட்டிங் ஒன்றுமில்லை என்று சொல்லலாம். பவுலிங்கை பொறுத்தவரை, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பில்லி ஸ்டேன்லேக், நாதன் கோல்டர் – நைல் ஆகியோர் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரலாம். தருவார்கள். பட், அதனை திறம்பட சமாளிக்கும் அளவிற்கு இந்திய அணியும் ரெடியாக உள்ளது. இந்த டி20 தொடரை, ஆஸ்திரேலியா வெல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்பு மட்டுமே கையில் உள்ளது.

ரோஹித், தவான், கோலியை ஒற்றை இலக்கில் வெளியேற்ற வேண்டும் 

அல்லது

பவுலிங் கொண்டு முடிந்தவரை, இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டையும் செய்யவில்லை எனில், ஆஸி., 3-0 என்று தோற்பதை யாராலும் தடுக்க முடியாது.

‘Australia is a very tough place to tour and play cricket’ என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். ஆனால், இன்று இந்த வாக்கியம் நியாயமானதா? என்று யோசிக்கும் நிலைமை வந்துவிட்டது.

ஆனால், ஒரு விஷயம்…. நாம் மேற்சொன்ன அனைத்து விஷயங்களும், White Ball கிரிக்கெட் எனப்படும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே. டெஸ்ட் போட்டிகளுக்கு அல்ல.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India vs australia t20 series preview

Next Story
IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express