India vs Australia, World Cup 2019 Updates : உலகக் கோப்பை 2019 தொடரில், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று(ஜூன்.9) நடைபெற்ற போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
Live Blog
India vs Australia, World Cup 2019 Cricket Score
உண்மையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும் இந்திய அணியின் வெற்றி அவ்வளவு சாதாரணமானது அல்ல. உலகக் கோப்பை எனும் உச்சக்கட்ட பிரஷர் மிகுந்த தொடரில், அதுவும் இங்கிலாந்து ஆடுகளத்தில், ஆஸ்திரேலியாவின் அதி பயங்கரமான ஃபேஸ் பவுலிங் அட்டாக்கை எதிர்த்து 352 ரன்கள் குவித்து, பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் அதை டிஃபன்ஸ் செய்து வெற்றிப் பெற்றிருப்பது என்பது, வீரர்களை முத்தமிட வேண்டிய தருணமாகும்.
'என் வாழ்நாளில் தொடர்ந்து ஐந்து முறை பந்து ஸ்டம்ப்பை தாக்கியும், பைல்ஸ் விழாமல் இருப்பதை பார்ப்பது இதுவே முதல் முறை. அதுவும் இந்த உலகக் கோப்பையில்... என்ன நடக்கிறது?' என்று கேள்விக் கேட்பவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர்.
Today is the 5th instance of ball hitting the stumps and bails not falling.
5th instance, WITHIN this World Cup.
Whats going on?? 🤔🤔
In my entire life i have not seen 5 instances like this, let alone in the space of 10 days or a tournament!!#AUSvIND #CWC19
— Shoaib Akhtar (@shoaib100mph) 9 June 2019
இந்திய பவுலர்களுக்கு விக்கெட் ஸ்பேஸ் இருக்கிறதா என்ற ஒரு முடிவுக்கே வர முடியவில்லை. இந்திய ஓப்பனர்ஸ் போலவே, ஆஸி., ஓப்பனர்ஸும் மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம், லூஸ் பந்துகளை விளாசவும் தவறவில்லை.
ஹர்திக் பாண்ட்யா வீசிய 10வது ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டது.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்துள்ளது. ஸோ, டார்கெட் 353...
எட்டுமா ஆஸ்திரேலியா? நம்ம கணிப்பு கண்ணாயிரம் சொல்வதென்ன?
கண்ணாயிரம் - இந்த பிட்சை பொறுத்தவரை, தொடக்கத்தில் பேட்டிங்குக்கு ஒத்துழைத்தாலும், நேரம் செல்ல செல்ல ஸ்லோ விக்கெட்டாக மாறியதை நம்மால் பார்க்க முடிந்தது. ஆகையால், ஆஸி.,க்கு இது பின்னடைவே. அவர்களால், அதிகம் பவுண்டரிகள் அடிக்க முடியாது. சிங்கிள்ஸ், டூஸ், சிக்ஸ் என்றே ரன்களை திரட்ட வேண்டும். ஸோ, அதிகம் சிக்ஸர்களுக்கு போகும் போது விக்கெட்ஸ் விழ வாய்ப்புள்ளது. ஆகவே, இந்தியாவுக்கே இன்று வெற்றி வாய்ப்பு அதிகம்.
இந்தியா - 60%
ஆஸ்திரேலியா - 40%
சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கு ஏற்றார் போல், ஹர்திக் பாண்ட்யாவின் 27 பந்துகளில் 48 ரன்கள் இந்தியாவை 350 கடக்க உதவியாது என்றால் அது மிகையல்ல...
27 பந்துகளில் 48 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா பேட் கம்மின்ஸ் ஓவரில் கேட்ச் ஆனார்.Hardik Pandya is on 🔥 He's 41* from just 22 balls and #TeamIndia are 281/2 with six overs remaining.#INDvAUS #CWC19 pic.twitter.com/E4GvOdjUkw— Cricket World Cup (@cricketworldcup) 9 June 2019
40 ஓவர்கள் முடிவில், இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரங்கள எடுத்துள்ளது. களத்தில் கேப்டன் கோலி, ஹர்திக் பாண்ட்யா...
இருக்கு... இன்னைக்கு செம வேட்டை இருக்கு....
IND* 236/2 40.0 Ov
H Pandya 7(8),
V Kohli 49(53)#CWC19 #INDvAUS pic.twitter.com/tOI7owBQ0g— Cricket (@Cricketscoree) 9 June 2019
95 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார் ஷிகர் தவான். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். அதுமட்டுமின்றி 2019 உலகக் கோப்பை தொடரில், இப்போது தான் ஒரு தனது நூலை கெட்டியமாக பிடித்திருக்கிறார் தவான். அதைப் பிடித்து எப்படியாவது மேலே ஏறி வந்தால், இந்தியாவுக்கு நல்லது.
Gabbar is back 😎
Shikhar Dhawan brings up a brilliant 💯 off 95 deliveries 👏👏 pic.twitter.com/6HkVutZ0Zh
— BCCI (@BCCI) 9 June 2019
ஏது!! கிங் கோலிக்கே எட்ஜ் வாங்குதா!!!
The ebbs and flows of a 50 over game. Dhawan looking excellent, Virat just a bit edgy......Australia concerned about how to get overs from bowlers 4&5 out.......
— Harsha Bhogle (@bhogleharsha) 9 June 2019
First #CWC19 half-century for Shikhar Dhawan!
FOLLOW #INDvAUS LIVE 👇 https://t.co/GgSWFm1l41 #INDvAUS #TeamIndia pic.twitter.com/RKJQp0HIPA
— Cricket World Cup (@cricketworldcup) 9 June 2019
யார் இந்த போட்டியை டிவியில் பார்க்கிறார்களோ இல்லையோ, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிச்சயம், இப்போட்டியை பார்த்தாக வேண்டும். ஏனெனில், பாகிஸ்தான் தனது இரு போட்டிகளில் இவ்விரு அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது. ஸோ, ஆஸி., மற்றும் இந்தியாவின் பலம், பலவீனத்தை பாகிஸ்தான் இன்றைய போட்டியைப் பார்த்து நோட்ஸ் எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்...
அட... அட.... களத்தில் நம்ம சச்சின் ஸ்மைலோடு...
The Master Blaster all smiles 😊😊#TeamIndia pic.twitter.com/1Oy4XVCC71
— BCCI (@BCCI) 9 June 2019
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியை கண்டு ரசிக்க ஓவல் ஸ்டேடியத்திற்கு வந்திருக்கிறார்.
London: Vijay Mallya arrives at The Oval cricket ground to watch #IndvsAus match; says, 'I am here to watch the game.' #WorldCup2019 pic.twitter.com/3eCK1wQHDq
— ANI (@ANI) 9 June 2019
உலகக் கோப்பைகளில் இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் மோதும் 12வது போட்டி இதுவாகும். உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிக போட்டிகளில் மோதிய இரு அணிகள் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தான்.
இதில், கடைசி 11 போட்டிகளில் ஆஸி.., 8 ஆட்டங்களிலும், இந்தியா 3 ஆட்டங்களிலும் வென்றிருக்கின்றன.
The celebrations have started and it's getting loud at The Oval! #INDvAUS | #CWC19 | #TeamIndia pic.twitter.com/T2s1ljyYMa
— Cricket World Cup (@cricketworldcup) 9 June 2019
ஐந்து ஓவர்கள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த அமைதி ரொம்ப முக்கியம்.... விக்கெட்டுகளை மட்டும் இந்தியா வீணாக தாரை வார்த்துவிடக் கூடாது. ஸ்டார்க்கின் பவுன்ஸ் மற்றும் யார்க்கர்ஸுக்கு நாம் அடி பணியாமல் இருந்துவிட்டாலே, இந்தப் போட்டியில் 30 சதவிகிதத்தை நாம் வென்றுவிட்டதாக அர்த்தம்!.
என்னடா ஆரம்பத்துலயே பீதிய காட்டுறீங்க!!? இருங்கடா.. கொஞ்சம் செட்டில் ஆகிக்குறோம்...
Here we go!
Pat Cummins has ball in hand, Rohit Sharma will face the first ball.#INDvAUS #CWC19 pic.twitter.com/twSAD3KS5h
— Cricket World Cup (@cricketworldcup) 9 June 2019
டேவிட் வார்னர் - பழைய அதிரடி இல்லாவிட்டாலும், முன்பை விட நிலைத்து நின்று ஆடுகிறார். அது அவரது அதிரடியை விட அதிக வீரியம் கொண்டது. ஆகையால், வார்னரை 30 ரன்களுக்கு மேல் நிற்க விற்கக் கூடாது.
ஸ்டீவன் ஸ்மித் - மிக கடினமான சூழல்களையும் இப்போதும் அசால்ட்டாக டீல் செய்து வருகிறார். இவரை சதம் அடிக்காமல் பார்த்துக் கொள்வதே நமது மிகப் பெரிய பணியாகும்.
மிட்சல் ஸ்டார்க் - இந்த கொடிய பவுலரிடம் இருந்து தப்பிப்பதே நமது பேட்ஸ்மேன்களின் முதல் இலக்காக இருக்க வேண்டும். குறிப்பாக, இவரது யார்க்கர்ஸ் ரோஹித், தோனி, ஹர்திக் ஆகிய பேட்ஸ்மேன்களின் ஸ்டெம்ப்புகளுக்கு இப்போதே குறி வைத்து காத்திருக்கிறது.
இந்த மூன்று கண்டங்களையும் நாம் வெற்றிகரமாக கடந்துவிட்டால், இந்தியாவின் வெற்றி உறுதி!.
#TeamIndia Captain @imVkohli wins the toss and elects to bat first against Australia.#CWC19 pic.twitter.com/9YDIqxQT4a
— BCCI (@BCCI) 9 June 2019
'கென்னிங்டன் ஓவல் மைதானத்தின் விக்கெட் அடர்த்தியான புற்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆகையால், டாஸ் ஜெயிக்கும் அணி, பேட்டிங் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. பேட்டிங் செய்ய நல்ல கண்டிஷன் இருக்கிறது. 280 ஸ்கோர் செல்லவும் வாய்ப்பிருக்கிறது'
அப்படீன்னு மைக்கேல் ஸ்லேட்டர் பிட்ச் ரிப்போர்ட் சொல்லி இருக்காப்ள... பார்ப்போம்...
வெறித்தனமான கிரிக்கெட் ரசிகரா நீங்க? அப்போ, இது எந்த இந்தியன் பிளேயரோட Kit-னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்...?
Which #TeamIndia legend's kit is this?#INDvAUS #CWC19 pic.twitter.com/dJAH2NYTlS
— Cricket World Cup (@cricketworldcup) 9 June 2019
ரோஹித் vs ஃபின்ச், வார்னர் vs தவான், கோலி vs ஸ்மித், ஹர்திக் பாண்ட்யா vs மேக்ஸ்வெல், பும்ரா vs ஸ்டார்க்.... Versus-களை பார்க்கும் போதே அதிர்கிறது அல்லவே... ஏன் அதிராது....? ஏன்னா இது இந்தியா vs ஆஸ்திரேலியா...
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் கிரிக்கெட் மேட்ச் உங்களுக்காக...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights