India vs Australia, World Cup 2019 Updates : உலகக் கோப்பை 2019 தொடரில், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று(ஜூன்.9) நடைபெற்ற போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
Web Title:India vs australia world cup 2019 live cricket updates
இந்தியா வரும் ஜூன் 13ம் தேதி நடக்கும் தனது அடுத்தப் போட்டியில், இத்தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
மறக்க வேண்டாம், பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா படு மோசமாக தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும் இந்திய அணியின் வெற்றி அவ்வளவு சாதாரணமானது அல்ல. உலகக் கோப்பை எனும் உச்சக்கட்ட பிரஷர் மிகுந்த தொடரில், அதுவும் இங்கிலாந்து ஆடுகளத்தில், ஆஸ்திரேலியாவின் அதி பயங்கரமான ஃபேஸ் பவுலிங் அட்டாக்கை எதிர்த்து 352 ரன்கள் குவித்து, பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் அதை டிஃபன்ஸ் செய்து வெற்றிப் பெற்றிருப்பது என்பது, வீரர்களை முத்தமிட வேண்டிய தருணமாகும்.
கடைசி இரு ஓவரில், இந்தியாவின் தலை சிறந்த டெத் ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் பும்ராவும், புவனேஷ் குமாரும் அட்டகாசமாக பந்து வீச, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே 25 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க, அணிக்கு இவரது பங்களிப்பு
சக்சஸ் கேமியோ-வா? அல்லது இட்ஸ் ஓகே கேமியோ-வா? என்பதே கேள்வி...
இன்னும் 12 பந்துகள் மீதம்...
ஆஸ்திரேலியா வெற்றிப் பெற 18 பந்துகளில் 53 ரன்கள் தேவை. 'ரன் ராக்கெட்' அலெக்ஸ் கேரே களத்தில் நிற்பதால், இந்தியாவுக்கு இந்த நிமிடம் வரை எதுவும் உறுதி இல்லை.
அலெக்ஸ் கேரே 23 பந்துகளில் 45 ரன்களுடன் களத்தில்...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ரன்களை குவித்து ஆஸ்திரேலிய வெற்றிக்கு வித்திட்ட ஹீரோ கோல்டர் நைல், இன்று இந்தியாவுக்கு எதிராக பும்ராவின் ஆஃப் கட்டர் பந்தில் 4 ரன்களில் கேட்ச் ஆனார்.
அப்போ, Unsung Hero தானே!!?
விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே, கோல்டர் நைல் களத்தில் உள்ளனர். இதில், அலெக்ஸ் கேரே மிகவும் டேஞ்சரான வீரர் என்பதால், நிச்சயம் அவரது விக்கெட் இந்தியாவுக்கு மிக முக்கியமாகும். கேம், இன்னமும் முழுமையாக இந்தியாவின் கண்ட்ரோலுக்குள் வந்துவிடவில்லை.
ஆஸ்திரேலியா தனது ஆறாவது விக்கெட்டை இழந்திருக்கிறது. 14 பந்தில் 28 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல், சாஹல் ஓவரில் கேட்ச் ஆனார்.
40.4வது ஓவரில் ஆஸ்திரேலியா, 6 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்துள்ளது.
இறுதியாக... ஒருவழியாக... கடவுளே... ஆஸி., கேப்டன் ஆரோன் ஃபின்ச் 36 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட, தனது முதல் விக்கெட்டை இழந்தது மஞ்சள் அணி.
'என் வாழ்நாளில் தொடர்ந்து ஐந்து முறை பந்து ஸ்டம்ப்பை தாக்கியும், பைல்ஸ் விழாமல் இருப்பதை பார்ப்பது இதுவே முதல் முறை. அதுவும் இந்த உலகக் கோப்பையில்... என்ன நடக்கிறது?' என்று கேள்விக் கேட்பவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர்.
இந்திய பவுலர்களுக்கு விக்கெட் ஸ்பேஸ் இருக்கிறதா என்ற ஒரு முடிவுக்கே வர முடியவில்லை. இந்திய ஓப்பனர்ஸ் போலவே, ஆஸி., ஓப்பனர்ஸும் மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம், லூஸ் பந்துகளை விளாசவும் தவறவில்லை.
ஹர்திக் பாண்ட்யா வீசிய 10வது ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் ஒட்டுமொத்த இன்னிங்சையும் ஷார்ட் அன்ட் க்ரிஸ்ப்பாக 72 நொடிகளில் காண இங்கே க்ளிக் செய்யவும்
5 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ஆடின அதே பேட்டர்னை ஃபாலோ பண்றாங்களே... ஒருவேளை சேஸ் பண்ணிடுவாய்ங்களோ????
இந்திய இன்னிங்ஸில் நீங்கள் ரசிக்க வேண்டிய வாவ் படங்கள்,
Innings Break!#TeamIndia post a formidable total of 352/5 on the board. Over to the bowlers now 💪💪#CWC19 pic.twitter.com/gde5Zxi0Ma— BCCI (@BCCI) 9 June 2019
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், ஃபின்ச் களத்தில்... வார்னரை விட, ஃபின்ச் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் நிலைத்து நின்று ஆட வேண்டிய சூழலில் இருக்கிறார்.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்துள்ளது. ஸோ, டார்கெட் 353...
எட்டுமா ஆஸ்திரேலியா? நம்ம கணிப்பு கண்ணாயிரம் சொல்வதென்ன?
கண்ணாயிரம் - இந்த பிட்சை பொறுத்தவரை, தொடக்கத்தில் பேட்டிங்குக்கு ஒத்துழைத்தாலும், நேரம் செல்ல செல்ல ஸ்லோ விக்கெட்டாக மாறியதை நம்மால் பார்க்க முடிந்தது. ஆகையால், ஆஸி.,க்கு இது பின்னடைவே. அவர்களால், அதிகம் பவுண்டரிகள் அடிக்க முடியாது. சிங்கிள்ஸ், டூஸ், சிக்ஸ் என்றே ரன்களை திரட்ட வேண்டும். ஸோ, அதிகம் சிக்ஸர்களுக்கு போகும் போது விக்கெட்ஸ் விழ வாய்ப்புள்ளது. ஆகவே, இந்தியாவுக்கே இன்று வெற்றி வாய்ப்பு அதிகம்.
இந்தியா - 60%
ஆஸ்திரேலியா - 40%
77 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்த கிங் கோலி, ஸ்டாய்னிஸ் வீசிய 49.5வது பந்தில் கேட்சாக... நமக்குள் எழும் பெரிய சோகம்,
இவைங்க ஸ்டார்க் ஓவருலயோ, கம்மின்ஸ் ஓவருலயோ அவுட்டாகி இருக்கக் கூடாதா என்பதே...
14 பந்துகளில் 27 ரன்கள் விளாசிய தோனி, மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பயபுள்ள ஒத்தக் கையில கேட்சை பிடிச்சு, தல-யோட ஷார்ட்டையே அசிங்கப்படுத்திட்டானே!!!
தோனிக்கு வீசிய 49வது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் பதிவு செய்த பந்துகளின் வேகம் இவை.
சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கு ஏற்றார் போல், ஹர்திக் பாண்ட்யாவின் 27 பந்துகளில் 48 ரன்கள் இந்தியாவை 350 கடக்க உதவியாது என்றால் அது மிகையல்ல...
27 பந்துகளில் 48 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா பேட் கம்மின்ஸ் ஓவரில் கேட்ச் ஆனார்.Hardik Pandya is on 🔥 He's 41* from just 22 balls and #TeamIndia are 281/2 with six overs remaining.#INDvAUS #CWC19 pic.twitter.com/E4GvOdjUkw— Cricket World Cup (@cricketworldcup) 9 June 2019
44 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டன் விராட் கோலி தனது 50வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
எனினும், இந்தியாவின் தொடக்க ரன் ரேட்டிற்கு இப்போது ரன் ரேட் குறைந்துள்ளது. 41 ஓவர்கள் முடிவில் இந்தியா 246 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால், 39 ஓவருக்கே இந்தியா 260 ரன்கள் அடித்திருக்க வேண்டும்.
40 ஓவர்கள் முடிவில், இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரங்கள எடுத்துள்ளது. களத்தில் கேப்டன் கோலி, ஹர்திக் பாண்ட்யா...
இருக்கு... இன்னைக்கு செம வேட்டை இருக்கு....
அபாரமான பிளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுத்த ஷிகர் தவான், 109 பந்துகளில் 117 ரன்கள் குவித்து. டேஞ்சரஸ் ஃபெல்லோ மிட்சல் ஸ்டார்க் ஓவரில் கேட்ச் ஆனார்.
ஹர்திக் பாண்ட்யா களத்தில்...
ஷிகர் தவான் சதம் விளாசிய அபார தருணம்... ரசிக்க இங்கே க்ளிக் செய்யவும்
27 - இந்தியா
26 - ஆஸ்திரேலியா
23 - இலங்கை
17 - வெஸ்ட் இண்டீஸ்
15 - நியூசிலாந்து
14 - தென்னாப்பிரிக்கா/பாகிஸ்தான்/இங்கிலாந்து
95 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார் ஷிகர் தவான். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். அதுமட்டுமின்றி 2019 உலகக் கோப்பை தொடரில், இப்போது தான் ஒரு தனது நூலை கெட்டியமாக பிடித்திருக்கிறார் தவான். அதைப் பிடித்து எப்படியாவது மேலே ஏறி வந்தால், இந்தியாவுக்கு நல்லது.
போட்டியில் ஷிகர் தவானின் ஸ்பெஷல் ஷாட்..
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
520 - கெயில்
476 - அப்ரிடி
398 - மெக்குல்லம்
355* - ரோஹித் (இன்றைய போட்டியில்)
354 - தோனி
ஒருநாள் போட்டிகளில் கோலி vs ஆடம் ஜம்பா
83 பந்துகள்
111 ரன்கள்
மூன்று முறை அவுட்
ஸ்டிரைக் ரேட் 133.7.
2019ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான விராட் கோலியின் ஸ்கோர்
3
104
46
44
116
123
7
20
ஓவல் மைதானத்தில் ரசிகர்களின் அற்புதமான மெக்ஸிகன் வேவ் காண இங்கே க்ளிக் செய்யவும்...
ஒரு அபார ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் ஷர்மா, 57(70) ரன்களில், கோல்டர் நைல் ஓவரில் கேட்ச் ஆனார்.
இதுக்கு ஸ்டார்க் ஓவரிலேயே அவுட் ஆகியிருக்கலாமே ஹிட்மேன்!!!
வாரே வா... தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மெகா செஞ்சுரிக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்மார்ட் 50 அடித்திருக்கிறார் ரோஹித் ஷர்மா.
Way to go இந்தியா....
First #CWC19 half-century for Shikhar Dhawan!
FOLLOW #INDvAUS LIVE 👇 https://t.co/GgSWFm1l41 #INDvAUS #TeamIndia pic.twitter.com/RKJQp0HIPA
— Cricket World Cup (@cricketworldcup) 9 June 2019
அழகான பேட்டிங் பிட்சில், அற்புதமான அரைசதம் அடித்திருக்கிறார் ஷிகர் தவான். 53 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார்.
ஓவல் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் தவான்,
102*
125
78
21
51*
யார் இந்த போட்டியை டிவியில் பார்க்கிறார்களோ இல்லையோ, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிச்சயம், இப்போட்டியை பார்த்தாக வேண்டும். ஏனெனில், பாகிஸ்தான் தனது இரு போட்டிகளில் இவ்விரு அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது. ஸோ, ஆஸி., மற்றும் இந்தியாவின் பலம், பலவீனத்தை பாகிஸ்தான் இன்றைய போட்டியைப் பார்த்து நோட்ஸ் எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்...
நிச்சயமாக... இது பேட்டிங் களம்.... ஆஸ்திரேலியாவின் அபாயகரமான ஃபேஸ் பவுலிங்கை எதிர்கொள்ள கிடைத்த அருமையான வாய்ப்பை, இந்தியா நன்றாக பற்றிக் கொண்டிருக்கிறது எனலாம். வெற்றிகரமாக 15 ஓவர்கள் முடிவில் இந்தியா 75-0.
அட... அட.... களத்தில் நம்ம சச்சின் ஸ்மைலோடு...
3077 சச்சின் (Avg 44.59)
2262 ஹெய்ன்ஸ் (40.39)
2187 விவியன் ரிச்சர்ட்ஸ் (50.86)
2003 ரோஹித் ஷர்மா (62.68)
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியை கண்டு ரசிக்க ஓவல் ஸ்டேடியத்திற்கு வந்திருக்கிறார்.
உலகக் கோப்பைகளில் இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் மோதும் 12வது போட்டி இதுவாகும். உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிக போட்டிகளில் மோதிய இரு அணிகள் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தான்.
இதில், கடைசி 11 போட்டிகளில் ஆஸி.., 8 ஆட்டங்களிலும், இந்தியா 3 ஆட்டங்களிலும் வென்றிருக்கின்றன.
ஐந்து ஓவர்கள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த அமைதி ரொம்ப முக்கியம்.... விக்கெட்டுகளை மட்டும் இந்தியா வீணாக தாரை வார்த்துவிடக் கூடாது. ஸ்டார்க்கின் பவுன்ஸ் மற்றும் யார்க்கர்ஸுக்கு நாம் அடி பணியாமல் இருந்துவிட்டாலே, இந்தப் போட்டியில் 30 சதவிகிதத்தை நாம் வென்றுவிட்டதாக அர்த்தம்!.
யப்பா ஸ்டார்க்கு... நீ பெரிய பவுலர் தான் ஒத்துக்குறோம்... அதுக்காக, மணிக்கு 149 கி.மீ. வேகத்துல பவுன்ஸ் போட்டா என்னய்யா நியாயம்?
பேட்டிங் புடிச்சது யாருய்யா... நம்ம தவானா?
ஏன்னய்யா நல்லா இருக்கியா நீயி??
பேட் கம்மின்ஸும், மிட்சல் ஸ்டார்க்கும் மாத்தி மாத்தி பவுலிங் போட்டா, கள்ள மௌனம் சாதிக்காம வேற என்னய்யா பண்ண முடியும்?
எப்பா ராசாக்களா... நீங்க 10 ஓவருக்கு 25 ரன் அடிச்சாலும் பரவாயில்ல... ஆனா, அவுட் மட்டும் ஆகிடாதீங்க!!
என்னடா ஆரம்பத்துலயே பீதிய காட்டுறீங்க!!? இருங்கடா.. கொஞ்சம் செட்டில் ஆகிக்குறோம்...
இந்திய ஓப்பனர்ஸ் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் களத்தில்.... பிட்ச் ரிப்போர்ட் படி 280+ அடிக்குமா இந்தியா?