India vs Bangladesh Asia Cup Final 2018: ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018 இறுதிப் போட்டியில் இன்று இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியை இணையதளத்தில் பார்ப்பது எப்படி?
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018, இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் மற்றும் சூப்பர் 4 போட்டிகளில் தோல்வியையே காணாமல் இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. வங்கதேசம் அணி சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றதன் மூலமாக இறுதிப் போட்டியில் நுழைந்திருக்கிறது.
To Read More; India vs Bangladesh Live Score: இந்தியா-வங்கதேசம் இறுதிப் போட்டி
இந்தியா இதில் வெற்றிபெற்று கோப்பையை வென்றால், ஆசிய கோப்பையை 7-வது முறையாக ஜெயித்த பெருமையைப் பெறும்! இப்போதைக்கு இந்தியாவே வெற்றி வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்தும் நிலையில், எந்த இலக்கையும் இந்திய அணியால் எட்ட முடியும்.
இந்திய பந்து வீச்சுத் துறையில் புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, ஜாதவ் என அனைவரும் ஃபார்மில் இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக வங்கதேசம் அணியின் முன்னணி வீரர் ஷகிப் உல் ஹசன் உள்ளிட்ட சிலர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனினும் எப்போதும் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணியாக வங்கதேசம் இருந்து வந்திருக்கிறது. 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் வங்கதேசம், இதுவரை கோப்பையை வென்றதில்லை. அந்த வரலாறை மாற்ற இதில் முயற்சிகளை எடுப்பார்கள்.
சூப்பர் 4 கடைசிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது, வங்கதேச வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கும். அதை இன்று களத்தில் எப்படி வெளிப்படுத்துகிறார்கள்? என்பதைப் பொறுத்து ஆட்டத்தில் சுவாரசியம் கூடும்.
When and Where to Watch India vs Bangladesh Asia Cup Final 2018 Online Live Streaming: இந்தியா vs வங்கதேசம் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி 2018 இணையதளத்தில் நேரலை பார்ப்பது எப்படி?
ஆசிய கோப்பை 2018 இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி எப்போது?
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 28) அன்று நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி எங்கே நடைபெறுகிறது?
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் அமைந்துள்ள துபாய், சர்வதேச விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி எந்த நேரத்தில் தொடங்குகிறது?
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 28) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டியை எந்த டிவி சேனல்களில் பார்க்கலாம்?
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஒளிபரப்புகிறது.
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டியை இணையதளத்தில் எப்படி பார்ப்பது?
ஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி நேரலையை ஹாட்ஸ்டார் ஆப் மூலமாக இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் இந்தப் போட்டி தொடர்பான நேரலை நிகழ்வுகளை உடனுக்குடன் tamil.indianexpress.com -லும் காணலாம்.