India vs England 1st Test Day 2 : விராட் கோலி அபார சதம்

India vs England 1st Test Day 2, Live Cricket Score Streaming

India vs England 1st Test Day 2: ‘முடியுமா… முடியாதா’, ‘இந்தியா சமாளிக்குமா…சமாளிக்காதா’ என்ற ஆயிரம் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மத்தியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நேற்று(ஆக.1) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், சாம் குர்ரன் 24 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 0 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், மேற்கொண்டு 2 ரன்கள் மட்டும் எடுத்து 287 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டாகியுள்ளது. முன்னதாக, ஜோ ரூட் 80 ரன்களும், பேர்ஸ்டோ 70 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்களில் ஜென்னிங்க்ஸ் மட்டும் 42 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் 25 ஓவர்கள் வீசிய அஷ்வின் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பில் தான் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், அஷ்வின் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்று சொல்வதைவிட, தனது அபார அனுபவத்தை பயன்படுத்தி, நிறைய வேரியேஷன்களோடு பந்து வீசி இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை, உமேஷ் யாதவ் பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளார். ஐபிஎல்-ல் ஒவ்வொரு போட்டியிலும், மணிக்கு 140 கி.மீட்டருக்கு மேல் பந்து வீசியவரின் பவுலிங், நேற்றைய முதல் நாளில் ‘என்னடா பவுலிங் போடுறான்’ என்று ரசிகர்களை புலம்ப வைத்த வைத்தது. (இரண்டாவது இன்னிங்ஸ்-லயாவது கருணை காட்டுங்க தம்பி!).

நம்ம இந்தியன் டீம் கோச் ரவி சாஸ்திரி, நேற்று லன்ச் பிரேக்-ல ஃபுல் மீல்ஸ கட்டியிருப்பார் போல… மனுஷன் எதைப் பற்றியும் கவலைப்படாம தூங்க ஆரம்பிச்சுட்டாரு…. உமேஷ், காணாமல் போன தனது பழைய பவுலிங் ஃபார்மை தேடி ‘ஆன் த பிட்ச்’-ல் அல்லாடிக் கொண்டிருக்க, நம்ம கோச்  ‘ஆஃப் த பிட்ச்’-ல் தூங்கிக் கொண்டிருக்க… அடடா!! என்று இருந்தது நேற்றைய ஆட்டம்.

India vs England 1st Test Day 2
தியானத்தில் ரவி சாஸ்திரி

எப்படியோ, நம்மாளு அஷ்வின் உள்ள புகுந்து ஆட்டத்தை கலைக்க, நிம்மதியானார் கேப்டன் கோலி. அதுவும், பேட்டிங் சப்போர்ட் செய்த களத்தில் 287 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருக்கோம்-னா, உண்மையில் நம்ம பாய்ஸுக்கு ‘செம தல’ ஹேஷ்டேக் போடலாம்.

சரி.. மேட்டருக்கு வருவோம். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்ய உள்ளது. அதன் LIVE SCORECARD-ஐ நீங்க கூகுள் போய் Search செய்துலாம் பார்க்க வேண்டாம். நமது tamil.indianexpress.com தளத்திலேயே நேரடியாக உடனுக்குடன் பார்க்கலாம். நாங்க டிவி-ல பார்த்துக்குவோம்-னு நினைக்குற உங்க மைண்ட் வாய்ஸ் நல்லா கேட்குது… போட்டியை டிவியில் பார்க்க முடியாதவர்கள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு அதன் Analyse-ஐ நாளை விரிவாக ஆராய்வோம்!.

மேலும் படிக்க: புஜாராவை அணியில் இருந்து நீக்கியது ஏன்? 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India vs england 1st test day 2 live cricket score streaming

Next Story
புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டது சரியான முடிவா?Why Pujara dropped out from Team
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com