சரியாக 365 நாள்.... கோப்பையை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி?

இந்தியா, இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டிய தொடங்குகிறது.

முதல் போட்டியில் இந்தியா வென்று இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் கப் அடித்துவிடலாம். அதேசமயம், இங்கிலாந்து அவ்வளவு சீக்கிரம் இன்றைய போட்டியில் வெற்றியை விட்டுக் கொடுத்துவிடாது.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இன்றிலிருந்து சரியாக 365வது நாளில்… அதாவது அடுத்தாண்டு இதே நாளில் (ஜூன் 14) உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இதே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதில் எந்த இரு அணிகள் மோதப் போகிறதோ தெரியவில்லை. ஆனால், இந்தியா விளையாட வேண்டுமெனில், இப்போது உள்ள ஃபார்ம் மட்டும் போதாது. ஏனெனில், பேட்டிங்கில் வழக்கம் போல் நாம் பலத்துடன் இருந்தாலும், பவுலிங்கில்.. குறிப்பாக வேகப்பந்துவீச்சில் பும்ரா மற்றும் புவனேஷ் குமாரைத் தான் இந்தியா பெரிதும் நம்பியிருக்கிறது. இவர்கள் இருவருக்கு மாற்றாக மேலும் ஒரு சிறந்த வேகப்பந்து கூட்டணியை இந்திய அணி உருவாக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில், இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் கூட, அது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவு ஆகிவிடும்.

சாஹல், குல்தீப்பிடம் இப்போது இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற அணி வீரர்கள் திணறி வருவது உண்மை தான். ஆனால், உலகக் கோப்பையின் போது இருவரும் மேலும் சில பவுலிங் டெக்னிக்ஸ்களை உருவாக்கி வைத்திருக்க வேண்டும். புதிய பவுலிங் யுக்திகள் இல்லையெனில், அரையிறுதி வரை கூட முன்னேறலாம். ஆனால், கோப்பையை வெல்வது கடினம்.

இன்றைய போட்டியை பொறுத்தவரை, இந்தியாவின் ஸ்பின் தாக்குதலை இங்கிலாந்து கவனமுடன் எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இந்தியா சற்று எச்சரிக்கையுடன் ஆடுவது நல்லது.

இன்றைய போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை ஐஇதமிழ்-ல் நீங்கள் நேரடியாக உடனுக்குடன் கண்டுகளிக்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close